புயலுக்கு 'அக்வான்' என்று பெயர் வைக்கப்பட்டது ஏன்? ஈரான் பரிந்துரைத்த பெயரின் அர்த்தம் தான் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் வலுப்பெற்று வரும் நிலையில், அதற்கு 'அக்வான்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் வரும் நவம்பர் 19ம் தேதி காலை அதிதீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு அக்வான் என பெயர் வைக்கப்பட்டது ஏன்.. இதன் பின்னணி தொடர்பாக நாம் பார்க்கலாம்.

வடகிழக்கு பருவமழை ஆரம்பித்தது முதலே அடுத்தடுத்து புயல்கள் உருவாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் பிறகு புயலாக மாறியது. அக்வான் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் அதிதீவிர புயலாக மாறி நவம்பர் 20ம் தேதி நண்பகல் ஆந்திர பிரதேச கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் கரையைக் கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Cyclone Akvan

புயல்

இந்த புயல் இன்று காலை சென்னைக்கு கிழக்கே சுமார் 610 கிமீ தொலைவிலும், இலங்கையின் திருகோணமலைக்கு வடகிழக்கே 630 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. மேலும் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 660 கிமீ தொலைவிலும், விசாகப்பட்டினத்துக்கு தெற்கு- தென்கிழக்கே 670 கிமீ தொலைவிலும், ஒடிசாவின் கோபால்பூருக்கு தெற்கே 790 கிமீ தொலைவிலும் உள்ளது.

இந்த புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மாலைக்குள் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் தீவிர புயலாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து நவம்பர் 19ம் தேதி காலை அதிதீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதன் பிறகே புயல் கரையை கடக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அக்வான் என்ற பெயரை வைத்தது யார்?

இந்த புயலுக்கு வைக்கப்பட்ட 'அக்வான்' என்ற பெயரை ஈரான் பரிந்துரைத்துள்ளது. உலக வானிலை அமைப்பு மற்றும் ஐநாவின் ஆசியா மற்றும் பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் ஆகியவற்றின் கீழ் செயல்படும் 13 நாடுகள் இணைந்து புயல்களுக்கு பெயரிடுவதற்கான பட்டியலை உருவாக்கியுள்ளன. கடந்த 2020ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த பட்டியலில் மொத்தம் 169 பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

வரிசைப்படியே பெயர்கள்

வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் புயல் உருவாகும்போது, டெல்லியில் உள்ள பிராந்திய சிறப்பு வானிலை ஆய்வு மையம் இந்தப் பட்டியலில் இருந்து வரிசைப்படி பெயர்களை தேர்வு செய்கிறது. அதன்படியே சமீபத்தில் உருவான புயல்களுக்கு வங்கதேசம் பரிந்துரைத்த 'அர்னாப்', இந்தியா பரிந்துரைத்த 'முரசு' உள்ளிட்ட பெயர்கள் சூட்டப்பட்டன. புயல் எந்த நாட்டின் கடற்கரையை நோக்கி செல்கிறது என்பதை பொறுத்து பெயர் தேர்வு செய்யப்படுவதில்லை. ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட பட்டியலில் நாடுகளின் வரிசைப்படியே பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அக்வான் என்ற பெயருக்கு என்ன அர்த்தம்?

அதன்படியே ஈரான் பரிந்துரைத்த அக்வான் என்ற பெயர் இந்த புயலுக்கு வைக்கப்பட்டுள்ளது. அக்வான் என்ற பெயர் பாரசீக நாட்டின் புராணக் கதைகளுடன் தொடர்புடையது. பாரசீகத்தின் புகழ்பெற்ற காவியமான 'ஷாநாமே' நூலில் இடம்பெறும் அக்வான் திவ் என்ற புராணக் கதாபாத்திரத்தை மையமாக கொண்டே இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. பாரசீகக் கவிஞர் ஃபெர்தவுசி எழுதிய இந்த காவியத்தில், அக்வான் வலிமையும் தந்திரமும் கொண்ட எதிரியாக சித்தரிக்கப்படுகிறார்.

புயல் உருவாகும்போது அதை ஈஸியாக டிராக் செய்வது, மக்களுக்கு எச்சரிக்கை கொடுப்பது, பேரிடர் மீட்புப் பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளை எளிதாக மேற்கொள்ளவே புயல்களுக்கு இதுபோல தனித்துவமான பெயர்கள் வழங்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+