முருகனோடு, முதல்வரை ஒப்பிட்டதற்கு புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்! ஏற்புடையதா? வாசகர்கள் கருத்து என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் போல், வேலெடுத்து பகை முடித்த முருகனிடம் வேண்டிக்கொண்டால், வெற்றி நிச்சயம் உண்டு என்று தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவர் புஷ்பவனம் குப்புசாமி, திருச்செந்தூர் சூரசம்ஹாரம் நிகழ்வில் பாடியது சர்ச்சையான நிலையில் அதற்கு அவர் ஒரு விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கமும் சர்ச்சையானதுதான் சோதனை.

முதல்வரை போலவே முருகனும் வேலெடுத்து பகை முடித்தவர் என்று புஷ்பவனம் குப்புசாமி பாடிவிட்டார் என்பது குற்றச்சாட்டு. முருகனை, சாமானிய மனிதரோடு ஒப்பிடுவதா என்பதே விமர்சனத்திற்கு காரணம். ஆனால், குப்புசாமி அளித்த வீடியோ விளக்கத்தில், முருகனிடம், நமது முதல்வரை போல நன்கு வேண்டிக்கொள்ள வேண்டும், அப்போதுதான் வெற்றி கிடைக்கும் என்பதே தனது பாடலின் பொருள் என்று தெரிவித்துள்ளார்.

Pushpavanam Kuppusamy

இதில் என்ன சர்ச்சை என்றால், முதல்வர் விஜய்தான் முருக பக்தர்களுக்கு வேண்டிக்கொள்ள இருக்கும் ஒரே உதாரணமா என்பதுதான். பல நாட்களாக தீவிர விரதம் இருந்து பக்தியோடு வழிபடும் பக்தர்கள் ஏன் விஜய் மாதிரி வேண்டிக்கொள்ள வேண்டும். முருகனை வேண்டிக்கொண்டு இன்னும் பல உச்சத்தில் உள்ளவர்களும் இருக்கிறார்களே, அவர்களை ஒப்பிடாமல் தமிழக முதல்வரை மட்டும் ஒப்பிட நோக்கம் என்ன. மேலும், முருகனை தனது உள்ளத்திற்கு தக்கபடி நினைந்து உருகி வழிபடும் உரிமை அவர்தம் பக்தர்களுக்கே உள்ளது. அவர்கள் முதல்வர் பதவி கேட்டு வழிபட அவசியம் இல்லை, பணம், பதவி கேட்டு கூட வழிபட அவசியம் இல்லை. அந்த எம்பெருமான் முருகப் பெருமானை உளம் உருகி, கசிந்து நேசித்து ஒன்றி நிற்பதற்கே செந்திலம்பதி வருகிறார்கள். விஜய் வேண்டியதுபோலவே வேண்டி அவர்கள் சாதிக்கப்போவது ஒன்றுமில்லை.

அந்த அழகன் முருகனின் திருவுருவத்தை பார்த்ததுமே கண்கள் அகலாது, அரோகரா என ஆனந்த கோஷமிடுகிறார்களே அந்த ஆழ்நிலை பக்தியை உணரவே அவர்கள் அறுபடை வீட்டின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் வந்து, அவன் தாழ் தொழுகிறார்கள். அந்த பக்திக்கு முன்பு இன்னொருவர் பக்தியை ஈடு வைக்க முடியாது. கூடாது.

இன்னொருவர் எப்படி வழிபட்டாரோ அப்படி வழிபட்ட வேண்டும் என்று புஷ்பவனம் குப்புசாமி சொல்ல உரிமையும் கிடையாது. குப்புசாமி தற்போது சமாளித்து வெளியிட்ட வீடியோவில் சொன்ன பொருளோ, அல்லது முதலில் பாடிய பொருளோ, இரண்டுமே தப்பு தப்பாகத்தான் வருகிறது. இதுபற்றி வாசகர்கள் கருத்து என்ன.. பதிவு செய்யுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+