பணிப்பெண்ணின் ஆசையை சொன்ன பிரியங்கா காந்தி.. உடனே நிறைவேற்றிய விஜய்.. டெல்லியில் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க முதல்வர் விஜய்யிடம், பிரியங்கா காந்தி தனது வீட்டின் பணிப்பெண்ணிற்காக வைத்த கோரிக்கை கவனம் பெற்றுள்ளது. அந்த கோரிக்கையை உடனடியாக முதல்வர் விஜய்யும் நிறைவேற்றி கொடுத்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிவை புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் முதல்வர் விஜய், அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கலந்து கொண்டனர். ராகுல் காந்திக்கு அருகிலேயே முதல்வர் விஜய்க்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் புகைப்படம் மற்றும் வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

Vijay

இந்த நிகழ்வில் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள், முக்கியத் தலைவர்கள் என்று ஏராளமானோர் பங்கேற்றனர். முக்கியத் தலைவர்கள் ஏராளமானோர் இருந்த போது, திடீரென விஜய்யை நோக்கி சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி ஒரு பெண்ணை அழைத்து வந்தார். இதனால் அனைவரின் கவனமும் விஜய் - பிரியங்கா காந்தி பக்கம் திரும்பியது.

அந்த பெண்ணை விஜய்யிடம் அறிமுகம் செய்து வைத்த பிரியங்கா காந்தி, 22 ஆண்டுகளாக இவர் என்னுடைய வீட்டில் பணியாற்றி வருகிறார். எங்களின் விஸ்வாசத்திற்கு உரியவர். இவருக்கு உங்களுடன் ஒரு புகைப்படம் எடுத்து கொள்ள வேண்டும் என்று ஆசை என்று கூறியுள்ளார். பிரியங்கா காந்தியின் வார்த்தையை கேட்டு புன்னகைத்த விஜய், உடனே அந்த பெண்ணை அருகில் அழைத்து புகைப்படம் எடுத்தார்.

தொடர்ந்து பெண்ணிடம் எப்படி இருக்கீங்க என்று நலம் விசாரித்து, அவருடன் சில நிமிடங்கள் உரையாடினார். இறுதியாக ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் அந்த பெண் விஜய்க்கு நன்றி தெரிவித்து புறப்பட்டு சென்றார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் இருந்த அரங்கில், தனது வீட்டின் பணிப்பெணுக்காக விஜய்யிடம் அழைத்து பிரியங்கா காந்தி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தவெக - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையில் கூட்டணி அமைந்த பின், பிரியங்கா காந்தி - விஜய் இருவரும் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். முதல் சந்திப்பே தனது வீட்டின் பணிப்பெண்ணின் ஆசையை நிறைவேற்ற பிரியங்கா காந்தி முயற்சித்திருக்கிறார். அதேபோல் பிரியங்கா காந்தியின் கோரிக்கையை விஜய்யும் உடனே நிறைவேற்றி கொடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+