ஆட்டிறைச்சி எடுக்கறீங்களா? கோழிக்கறி, ஆட்டுக்கறி வாங்கினால், முதல்ல இதை பாருங்க .. இறைச்சி ஆரோக்கியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆட்டிறைச்சிகளில் சமீபகாலமாகவே கலப்படங்கள் அதிகரித்து வருகின்றன.. உணவுத்துறை அதிகாரிகளும் இது தொடர்பான ஆய்வுகளையும், சோதனைகளையும் நடத்தி வருகிறார்கள். எனினும், ஆட்டுக்கறி, சிக்கன் போன்றவைகளை, கடைகளிலிருந்து வாங்கும்போதே கவனமுடன் வாங்க வேண்டும். ஒருசில டிப்ஸ்களை பார்ப்போம்.
ஆட்டுக்கறி வாங்குவதாக இருந்தால், பெட்டை ஆடுதான் பெஸ்ட்.. ஆடுகளை வெட்டும்போதே, அதன் உடலிலுள்ள ரத்தம் முழுமையாக வடிந்துவிடும். இப்படி துளிகூட ஆட்டு உடலில் ரத்தம் தங்காமல், அனைத்தும் வடிந்துவிட்டால் அது ஆரோக்கியமான ஆடு என்று அர்த்தமாம்.

நல்ல ஆட்டுக்கறி: ஆட்டுக்கறியை தொட்டுப்பார்க்கும்போது, விரலை நாம் லேசாக வைத்து எடுத்துவிட வேண்டும். பலூன்போல கறி உப்பி வந்தால் அது நல்ல ஆரோக்கியமான கறி என்று அர்த்தம்.. கையை அழுத்திய இடத்தில் பள்ளம் போல அப்படியே அமுங்கி விட்டால், அந்த கறியை வாங்க வேண்டாம்.

mutton chicken meat

ஆட்டின் நெஞ்சுப்பகுதி, தொடை, சந்துக்கறிகள் அதிகமாக இருக்கும்படி பார்த்து வாங்க வேண்டும். உடல் எடை குறைக்க நினைப்பவர்கள், மட்டனில் கலோரிகள் நிறைந்த தோல் பகுதியை நீக்கிவிட்டு வாங்க வேண்டும.

வெள்ளை நிற கோடு: அதேபோல, ஆட்டுக்கறி மீது, கொழுப்பு சத்துடன் வெள்ளை நிற கோடுகள் இருந்தால், அது நல்ல கறியாகும். அதாவது, வெள்ளை நிறத்தில் கொழுப்புசத்துக்கள் நிறைந்த மெல்லிய கோடுகள் போன்று இருந்தால், இந்த கறி மிகவும் சுவையுடனும் இருக்கும். பழுப்பு நிறத்திலோ அல்லது கொஞ்சம் நிறத்தில் மாற்றம் இருந்தாலோ அது பழைய ஆட்டுக்கறியாக இருக்கலாம்.

அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும் கறியையே தேர்ந்தெடுக்க வேண்டும்.. கருஞ்சிவப்பாகவோ உலர்ந்த நிலையிலோ அல்லது வெளிறிப் போன நிறத்திலோ இருந்தால் இது பழைய ஆட்டுக்கறியாக இருக்கலாம். மட்டன் குழம்பு, சுக்கா, வறுவல் போன்றவற்றுக்கு நெஞ்சுக் கறி, கழுத்துக் கறி, இடுப்புக் கறி கேட்டு வாங்கலாம். பிரியாணி என்றால், முன்தொடை, பின்தொடை கறியாகக் கேட்டு வாங்க வேண்டும்.

எலும்புக்கறி: வெட்டி வைக்கப்பட்டிருக்கும் கறியை வாங்குவதைவிட, எலும்புடன் சேர்த்து தொங்கவிடப்பட்டிருக்கும் கறியை வெட்டித்தரச்சொல்லி கேட்டு வாங்கலாம். இதனால் கலப்படம் இல்லாத ஆட்டுக்கறியை நம்மால் பெற முடியும். மட்டன் விலை வழக்கத்தைவிட எங்காவது குறைவாக விற்பனை செய்தால், வயதான ஆட்டின் கறியாக இருக்கலாம்.. இதை சமைத்து சாப்பிட்டாலும் ருசியும் இருக்காது.. கடிப்பதற்கும் கடினமாக இருக்கும். எனவே, கவனமாக பார்த்து வாங்கலாம்.

எப்படி பார்த்தாலும், ஆட்டுக்கறி வெட்டப்பட்டதுமே, குறிப்பிட்ட நேரத்திற்குள்தான் சமைத்து சாப்பிட வேண்டும். காரணவேண்டுமாம்.. அதாவது, ஆட்டினுடைய தலையை துண்டித்து, கொஞ்ச நேரம் மட்டும்தான், அதனுடைய உயிர் செல்கள் இருக்கும்..கிட்டத்தட்ட 20 நிமிடம் முதல் அரை மணி நேரம் அந்த உயிர் துடிப்புகள் இருக்கும். துடிப்பு நின்ற பிறகும் சில மணி நேரங்கள் அந்த செல்கள் இருக்கும்.. அதனால், ஆடு வெட்டப்பட்ட அடுத்த 5 மணி நேரத்துக்குள் மட்டனை வாங்கி சமைத்துவிட வேண்டுமாம்.

கோழிக்கறி: பிராய்லர் கோழி வாங்குவதாக இருந்தாலும், இளம்சிவப்பு அதாவது பிங்க் நிறத்தில் இருக்கும் கறியை தேர்ந்தெடுக்க வேண்டும்.. இந்த கோழியை எடையை வைத்தே கணிக்கலாம். ஒன்றரை கிலோ முதல் 2 கிலோ வரை கறி இருக்கும் கோழியாக தேர்ந்தெடுத்து வாங்கலாம். அதற்கு மேல் எடை இருந்தால் கோழிக்கறி சக்கை போல இருக்கும்.

அதேபோல சிலர் பண்ணைக்கோழிக்கும், நாட்டுக்கோழிக்கும் வித்தியாசம் தெரியாமல் ஏமாந்துவிடுவார்கள்.. கோழி வாயின் மூக்குப்பகுதி வெட்டப்பட்டிருந்தால் அது பண்ணைக் கோழியாகும். எனவே, சுத்தமான நாட்டுக்கோழியை கேட்டு பெற வேண்டும்.

இதய நோய்: எப்போதுமே தோலில்லாத சிக்கனையே கேட்டு வாங்க வேண்டும். ஏனென்றால், இந்த தோல் பகுதிகளில்தான் அதிக கலோரிகள் நிறைந்திருக்கும்.. இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு காரணமாக இருப்பதும் இந்த தோல்கள்தான். சிக்கன் பார்ப்பதற்கு சாம்பல் நிறத்தில் இருந்தால் அது பழைய கோழியாக இருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+