Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீன் கழுவுறீங்களா? மீனை வாங்கினால் இந்த 7 விஷயத்தையும் தவறிகூட செய்யாதீங்க.. ரொம்ப ரொம்ப கவனம் மக்களே

Subscribe to Oneindia Tamil

சென்னை: அசைவ உணவுகளில் சற்று கவனக்குறைவாக இருந்துவிட்டால், உயிரிழப்புகள் வரை ஏற்பட்டுவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.. அந்தவகையில், மீன்களை வாங்கும்போது, சற்று கவனம் தேவைப்படுகிறது.. மீன்களை எப்படி வாங்க வேண்டும் என்று உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகளே சில டிப்ஸ்களை பொதுமக்களின் நன்மைக்காக தருகிறார்கள்.

கேரளாவில் கடந்த வரும் ஷவர்மா சாப்பிட்ட, 16 வயது சிறுமி உயிரிழந்தார்.. இப்போது 14 வயது நாமக்கல் சிறுமி இறந்துள்ளார்.. இதற்கெல்லாம் காரணம், இறைச்சியை முறையாக பதப்படுத்தப்படுவதில்லை, வேகவைக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Do you know How to clean Fish and What are 7 Major things to look for when buying Healthy Fish

இது ஓட்டல்களுக்கு மட்டுமல்ல, சில வீடுகளிலும் இந்த கவனக்குறைபாடுகளும் தவறுகளும் அவ்வப்போது நடக்கின்றன.. அதனால், இறைச்சியை வாங்கும்போதே, அந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்கள்.

கோடை காலங்களைவிட, குளிர்காலங்களில் மீன் வாங்கும்போது அதிக கவனத்தை செலுத்த வேண்டியுள்ளது.. அவை பதப்படுத்தப்பட்டதா? அல்லது புதிதாக கொண்டுவரப்பட்டதா? என்பதை கண்டுபிடித்து வாங்க வேண்டி உள்ளது.

செதில்கள்: நீங்கள் மீன்களை வாங்கும்போது, அந்த மீன்களில் நிறைய ஈக்கள் மொய்க்க வேண்டுமாம்.. அப்போதுதான், அது நல்ல மீன் என்று அர்த்தம்.. காரணம், மருந்துகளை தெளித்து வைத்திருந்தால், அதில், ஈக்கள் மொய்க்காது.. அதேபோல, மீன்களை தொட்டதுமே, அதன் தோல்கள் உரிந்துவந்தால், அதை வாங்ககூடாது.. சதைப்பகுதி கல் போல தடிமனாகவும், கெட்டியாகவும் இருக்க வேண்டும்.

பழைய மீன்கள் என்றால், மீனின் கண்கள் வெள்ளை கலரில் இருக்குமாம்.. புதிய மீன்களின் கண்ணில் வெள்ளை தெரியாது.. புதிய மீன்களின் கண்கள் பளபளப்பாக இருக்கும். மீனின் செவுள்களை நிமிர்த்தி பார்த்தால் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பாக இருக்க வேண்டும். வெள்ளை கலராக செவுள்கள் இருந்தாலும், வாங்க தேவையில்லை. செவுளை பிளந்து அந்த இடத்தை தொட்டு பார்த்தால் கைகளில் பிசின் போல உணர முடியும்.. அப்படி இருந்தால் அது ஃபிரெஷ் மீன்.

விறைப்புத்தன்மை: மீனின் வால் பகுதியை தொட்டு பார்த்தால் விரைப்பாக இருக்க வேண்டுமாம்.. மீனின் கழுத்தை பிடித்தாலும், விறைப்பாக இருக்க வேண்டும்.. மீனின் சதைப்பகுதியை அழுத்திப்பார்த்தால் தடிமனாக, விறைப்பாக இருக்க வேண்டும். செதில்கள் சிகப்பு நிறத்தில் இருக்க வேண்டும். செதில்கள் நிறைய இருக்க வேண்டும்..

மீனின் மேல் செதில்கள் அதிகமாகவோ, முள் அதிகமாக இருந்தாலோ, அந்த மீன் மிகவும் ருசியாக இருக்கும். உணவுத்துறை பாதுகாப்பு துறையினர் மீன் வாங்குவது குறித்து சில எச்சரிக்கைகளையும் அறிவுறுத்துகிறார்கள்.. அதாவது ENT டெஸ்ட் செய்ய சொல்கிறார்கள்.. E for கண்களால் அறிதல், N for முகர்ந்து அறிதல், T for தொட்டு அறிதல் என்பதுதான் இ.என்.டி. சோதனையின் அடிப்படையாகும்.

பளபள கண்கள்: எப்போதுமே மீன் கடைக்கு போனால், முதலில் மீன்களை கண்களாலேயே பார்வையிட வேண்டுமாம்.. பார்த்தவுடனேயே அந்த மீன்கள் பளபளப்பாக இருக்க வேண்டும்.. செதில்களில் சேதம் அடையாமல், சிகப்பு நிறத்தில், உயிருள்ள மீனுக்கு இருப்பதுபோல் இருக்க வேண்டும். அடுத்ததாக, மீனை முகர்ந்து பார்க்க வேண்டும்.. புதிய மீன்களில் நாற்றம் வரவே வராது. புதிய மீனில், சுத்தமான தண்ணீரின் வாசம் அல்லது வெள்ளரியின் வாசம் மட்டுமே இருக்கும். ஆனால், கெட்டுப்போன மீனில் நாற்றம் இருக்கும்.

தரமான புதிய மீன் விரலில் தொட்டாலே வழுக்கும்.. ஈரமாகவும் இருக்கும். ரப்பல் போல இருக்கும். தொட்டு அழுத்தினால் குழிவிழக்கூடாது. இதுபோன்ற மீன்களை வாங்கவும் கூடாது, விற்கவும் கூடாது என்கிறார்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்.

கழிவுகள்: அடுத்ததாக, மீன்களை சுத்தம் செய்வதிலும் கவனம் வேண்டும்.. மீன்களுக்குள் பச்சை நிறத்தில் இருக்கும் பொருளை, முழுமையாக வெளியே எடுக்காவிட்டால், மொத்த குழம்பின் சுவையும் கெட்டுவிடும்.. மீனை சரியாக சுத்தம் செய்யாத பட்சத்தில் கசப்பு தன்மையும் நமக்கு சேர்ந்துவிடும்.

எந்த மீன் வாங்கினாலும், முதலில் நாலைந்து முறை தண்ணீரில் அலச வேண்டும்.. மீன் செதில்களில் உள்ள அழுக்கு, கிருமிகள் இந்த தண்ணீரிலேயே நீங்கிவிடும்.. அதிலும், மீன்களை ஓடும் நீரில் கழுவி, முன்னிருந்து பின்னுக்கு தேய்க்க வேண்டும்..

துடுப்புகள்: அடுத்து, மீன்களிலிருந்து துடுப்புகளை முதலில் வெட்டி எடுத்துவிட வேண்டும். கூர்மையான கத்தியால், மீனின் வயிற்றில் வைத்து, தலையை மட்டும் வெட்டி தனியாக வைக்கவும். பிறகு, வயிற்றுப் பகுதியை V வடிவத்தில் வெட்டவும். அடுத்து, குடல்கள் உட்பட மற்ற பாகங்களை வெளியே எடுத்துவிட வேண்டும்.. அதாவது, சதை மட்டுமே வைத்து, மீனுக்குள் இருக்கும் மொத்தத்தையும் நீக்க வேண்டும்.

பிறகு, மீன்களின் செதில்களை அகற்ற வேண்டும்.. சில மீன்களை சாம்பல் போன்ற பொருட்களை வைத்து, கழுவுவார்கள். சோப்பு, சோப்புபவுடர் மாதிரியான கெமிக்கல் போட்டு கழுவக்கூடாது. கொஞ்சம் கல் உப்பு, தயிர் கலந்த நீரில் கழுவலாம். மோர் இருந்தால், அதிலும் கழுவலாம்.. அல்லது உப்பு, மஞ்சள், எலுமிச்சை சாறு கொண்டு கழுவலாம்..

கல் உப்பு, சிறிது ராகி இவைகளை கலந்து நீரில் கழுவினாலும் மீனின் துர்நாற்றம் போகும்.. ராகி மாவு எதற்கென்றால், மீனின் அனைத்து பகுதிகளிலும் சென்று தேவையில்லாத அழுக்குகளுடன் ஒட்டிக்கொண்டுவிடும்.. பிறகு, குளிர்ந்த நீரில் கழுவும்போது ராகி மாவு மீனிலுள்ள அழுக்கை வெளியேற்றிவிடும்.

முக்கியமான சீக்ரெட்: அதேபோல, எப்போது மீன் கழுவினாலும், சற்று வினிகர் பயன்படுத்தி கொண்டால் கூடுதல் பலன் கிடைக்கும்.. இன்னொரு சீக்ரெட்டும் உண்டு.. மீன் சமைக்கும்போது, ​​ஈரமான துண்டை கிச்சனில் தொங்க விடுவார்களாம்.. இது, மீனின் கெட்ட வாசனையை ஈர்த்துவிடுமாம்... ட்ரை பண்ணி பாருங்க...!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+