மீனை குழம்பில் போடும்போது, "இதை" விட்றாதீங்க.. மிரட்டும் மீன்குழம்பு.. அந்த "கலக்கி" இருக்கே? அடடடா
சென்னை: அசைவ உணவுகளில் சற்று கவனக்குறைவாக இருந்துவிட்டாலும், உயிரிழப்பு வரை சென்றுவிடுகிறது.. இதற்கு 2 விதமான உணவுப்பொருட்களை உதாரணங்களை சொல்லி அலர்ட் செய்கிறார்கள் உணவு நிபுணர்கள்.
மீன்களை வாங்கும்போது, தொட்டதுமே, அதன் தோல்கள் உரிந்துவந்தால், அதை வாங்ககூடாது.. சதைப்பகுதி கல் போல தடிமனாகவும், கெட்டியாகவும் இருக்க வேண்டும்.
பழைய மீன்கள் என்றால், மீனின் கண்கள் வெள்ளை கலரில் இருக்குமாம்.. புதிய மீன்களின் கண்கள் பளபளப்பாக இருக்கும். மீனின் செவுள்களை நிமிர்த்தி பார்த்தால் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பாக இருக்க வேண்டும். வெள்ளை கலராக செவுள்கள் இருந்தாலும், வாங்க தேவையில்லை. செவுளை பிளந்து அந்த இடத்தை தொட்டு பார்த்தால் கைகளில் பிசின் போல உணர முடியும்.. அப்படி இருந்தால் அது ஃபிரெஷ் மீன்.

விறைப்புத்தன்மை: மீனின் வால் பகுதியை தொட்டு பார்த்தால் விரைப்பாக இருக்க வேண்டுமாம்.. மீனின் கழுத்தை பிடித்தாலும், விறைப்பாக இருக்க வேண்டும்.. மீனின் சதைப்பகுதியை அழுத்திப்பார்த்தால் தடிமனாக, விறைப்பாக இருக்க வேண்டும். செதில்கள் அதிகமாகவும், சிகப்பு நிறத்திலும் இருக்க வேண்டும். மீனின் மேல் செதில்கள் அதிகமாகவோ, முள் அதிகமாக இருந்தாலோ, அந்த மீன் மிகவும் ருசியாக இருக்கும்.
புதிய மீன் விரலில் தொட்டாலே வழுக்கும்.. ஈரமாகவும் இருக்கும். ரப்பல் போல இருக்கும். தொட்டு அழுத்தினால் குழிவிழக்கூடாது. எந்த மீன் வாங்கினாலும், முதலில் நாலைந்து முறை தண்ணீரில் அலச வேண்டும்.. மீன் செதில்களில் உள்ள அழுக்கு, கிருமிகள் இந்த தண்ணீரிலேயே நீங்கிவிடும்.. அதிலும், மீன்களை ஓடும் நீரில் கழுவி, முன்னிருந்து பின்னுக்கு தேய்க்க வேண்டும்..
எச்சரிக்கை: இவையெல்லாம் அடிப்படையான விஷயம் என்றாலும், 2 விதமான தவறுகளை நாம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம் என்று எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.
முதலாவதாக, கலக்கி என்று சொல்லப்படும் உணவை நாம் சாப்பிடுவதே தவறு என்கிறார்கள்.. ஒரு முட்டையின் வெள்ளை கருவில், கிட்டத்தட்ட 3 கிராம் புரதமும், மஞ்சள் கருவில் 3 கிராம் புரதமும் இருப்பதாக சொல்கிறார்கள்..
ஆனாலும், இந்த மஞ்சள் கருவில் இன்னும் பல சத்துக்கள் இருக்கிறது. இதனை வேகவைக்காமல் பச்சையாக சாப்பிடும்போது அல்லது அரைகுறையாக சமைத்து சாப்பிடும்போது, இதிலுள்ள வைரஸ், பாக்டீரியாக்கள் உடலுக்கு கெடுதலை தந்துவிடும்.. இதிலுள்ள கொழுப்புகள், இன்சுலின் சுரப்பை பாதித்துவிடும் என்கிறார்கள்.
மீன்குழம்பு: அதேபோல, மீன்குழம்பு செய்யும்போது, எப்போதுமே மீன்களை வேகவைத்து இறக்க வேண்டுமாம். ஆனால், மீன் உடைந்துவிடக்கூடாது என்பதற்காகவும், ருசி குறைந்துவிடக்கூடாது என்பதற்காகவும், குழம்பில், மீனை போட்டதுமே 5 நிமிடத்தில் இறக்கிவிடுகிறோம். ஆனால், இதுவும் தவறான செயல் என்கிறார்கள்.
பூமியின் வடிகால் கடல் என்பதால், அனைத்து விதமான கழிவுகளும் கடலில்போய் சேருகின்றன.. எனவே, நச்சுப்பொருட்களும், பாக்டீரியாக்களும், ரசாயனக் கழிவுகளும் கடலில்தான் கலக்கின்றன.. கடல் நீரில் வாழும் மீன்கள் இவைகளை தங்கள் உடலில் சேர்த்து வைக்கின்றன.. அந்த ரசாயன பொருட்கள் நம் உடம்பில் சேரும்போது, புற்றுநோய், குழந்தையின்மை, உள்ளிட்ட சிக்கல்களை தந்துவிடும்.
விஷத்தன்மைகள்: மீன்களை எவ்வளவு பதப்படுத்தினாலும், எவ்வளவு சுத்தப்படுத்தி கழுவினாலும், சில விஷப்பொருட்கள் முழுமையாக நீங்குவதில்லை. அதனால், எந்த மீனை சமைத்தாலும், நன்றாக கழுவி, கொதிநீரில் நன்றாக வேகவைத்து சமைத்து சாப்பிட வேண்டும்.. சுருக்கமாக சொன்னால், எந்த அசைவ பொருளையுமே அரைவேக்காடு சமைத்து சாப்பிடுவது கெடுதி என்று எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications