டேன்ஜரஸ் வைரஸ்.. அறிகுறி என்ன? நிபா வராமல் தடுப்பது எப்படி? பழம் சாப்பிடும் போது உஷாராக பாருங்க!
திருவனந்தபுரம்: கேரளாவில் உயிர் பலியை ஏற்படுத்தும் அளவுக்கு மோசமானதாக கருதப்படும் நிபா வைரஸ் வராமல் தடுப்பது எப்படி தெரியுமா?
2019 ஆம் ஆண்டு இறுதியில் உலக நாடுகளை ஆட்டி படைத்த கொரோனா 3 ஆண்டுகளாகியும் இன்னும் முழுசாக விலகாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது நிபா வைரஸ் என்ற உயிர் கொல்லி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நிபா வைரஸுக்கு 17 பேர் இறந்தனர். இந்த நிலையில் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் காய்ச்சல் பாதித்து சிகிச்சை பெற்று வந்த 49 வயது மதிக்கத்தக்க ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி உயரிழந்தார்.
இது போல் கடந்த 10ஆம் தேதி அதே மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவரும் உயிரிழந்தார். இந்த நபரின் மனைவி, 9 வயது, 4 வயது முறையே இரு மகன்களும், 10 மாத குழந்தை என 4 பேரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதில் இரு சிறுவர்களுக்கு தனி வார்டில் ஆக்ஸிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த வைரஸ் பரவாமல் இருக்க தமிழக- கேரள எல்லையில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. இந்த நிபா வைரஸானது மலேசியாவில்தான் முதலில் கண்டறியப்பட்டது. இது இந்த நோய் பாதித்த மனிதர்களிடம் இருந்து உடல்நலம் பாதித்த பன்றிகள், அதன் திசுக்களில் இருந்து பரவி வருகிறது.
அறிகுறிகள் என்ன: அது போல் நிபா பாதித்த பழ வெளவால்களின் எச்சில், சிறுநீர் உள்ளிட்டவை பாதித்த பழங்களை சாப்பிடும் போது மனிதர்களுக்கும் அந்த பாதிப்பு ஏற்படும். நிபா வைரஸ் பாதித்த நபர்களுக்கு காய்ச்சல், தலைவலி, வாந்தி, தொண்டையில் எரிச்சல், தசைகளில் வலி உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும். இந்த வைரஸ் பாதித்தவுடன் நோய் அறிகுறிகள் தோன்றுவதற்கு 4 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை ஆகும். சிலருக்கு இந்த நோய் பாதிப்பு அறிகுறியாக மயக்கம் ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
நிபா வைரஸ் நரம்பு மண்டலத்தை பாதிப்பதால் இறப்பு எண்ணிக்கை 40 முதல் 75 சதவீதம் வரை இருக்கிறது. நிபா வைரஸ் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தால் சில நோயாளிகளுக்கு நிமோனியா, நுரையீரல் பிரச்சினை ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. சிலர் 24 மணி நேரத்திலிருந்து 48 மணி நேரத்திற்குள் கோமாவுக்கு செல்லவும் வாய்ப்புள்ளது.
பரவுவது எப்படி: இந்த வைரஸானது பழ வவ்வால்கள் மற்றும் பன்றிகள் மூலமே பெரிதும் பரவுகின்றன. மேலும் கெட்டு போன உணவு மூலமும் பரவுகிறது. ஒருவருக்கு நோய் பாதிப்பிருந்தால் அவரிடம் இருந்து மற்றவர்களுக்கும் இந்த நோய் பாதிக்கப்படுகிறது. நிபா வைரஸ் பாதித்தவர்களை பார்த்து கொள்வோருக்கும் இந்த வைரஸ் பரவுகிறது.
பராமல் தடுப்பது எப்படி: நிபா வைரஸுக்கு மருந்து இல்லை. ஆனால் அந்த நோய் வராமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
1. விலங்குகளுக்கு நிபா வைரஸ் பரவினால் அவற்றின் மூலம் மனிதர்களுக்கு பரவாமல் இருக்க அந்த விலங்குகளிடம் இருந்து தள்ளியே இருத்தல்வேண்டும்.
2. நிபா வைரஸ் பாதித்த விலங்குகள் இறந்துவிட்டால் அவற்றை மிகவும் ஆழமான இடத்தில் புதைக்க வேண்டும் அல்லது நன்றாக எரித்து விட வேண்டும். புதைத்த இடத்திலிருந்து கிருமிகள் பரவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
3. விலங்குகளுக்கு நிபா பாதித்தால் அவற்றை தனிமைப்படுத்திவிட வேண்டும். அவற்றுடன் மனித தொடர்பு இருப்பதோ மற்ற விலங்குகளின் தொடர்பு இருப்பதோ கூடாது
4. மனிதர்களுக்கும் வவ்வால்களுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட வேண்டும்.
5. பழங்களை சாப்பிடும் போது மஞ்சள் , கல் உப்பு போட்டு நன்றாக இரு அல்லது 3 முறை கழுவிவிட்டுத்தான் பயன்படுத்த வேண்டும்.
4. பழமானது வவ்வால் கடித்தது போல் இருந்தால் அதை தொடவே கூடாது, அதை அப்படியே பத்திரமாக கையல் கிளவுஸ் அணிந்து கொண்டு அப்புறப்படுத்திவிட வேண்டும்.
5. நிபா பாதித்தவர்களை நேரடியாக தொடுதல் கூடாது
6. அவ்வப்போது கைகளை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
நிபா வைரஸ் இருப்பதை கண்டறிவது எப்படி: கொரோனா போல் மூக்கு தொண்டை பகுதிகளில் ஸ்வாப் டெஸ்ட் எடுப்பது, ரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை மூலம் அறியலாம். மேலும் எலைசா சோதனை மூலமும் அறியலாம்.
-
அரசு வேலை கனவு.. ஒரே நேரத்தில் இரட்டை சகோதரிகளுக்கு நடந்த இன்ப அதிர்ச்சி.. மாநிலமே கொண்டாடுது -
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications