ப்ரோக்கோலி பெஸ்ட் சாய்ஸ்.. வெயிட் உடனே குறையணுமா? கேன்சர் செல்களையும் நெருங்க விடாத பலே புரோக்கோலி
சென்னை: மார்பக புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான சக்தி, ப்ரோக்கோலியில் இருக்கிறதாம். காலிபிளவர் வகையை சார்ந்த இந்த ப்ரோக்கோலி தரும் மருத்துவ நன்மைகள் என்னென்ன தெரியுமா?
ஒரே ஒரு கப் ப்ரோக்கோலியில், Am B6, B2 E வைட்டமின்களும், பாஸ்பரஸ், கோலைன், மாங்கனீசு, தாமிரம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன..

அமிலங்கள்: ப்ரோக்கோலியில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளதால், ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை அதிகம் சேரவிடாமல் தடுக்கிறது.. இதனால், இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமலும் தடுக்கப்பட்டுகிறது. நன்றாக சமைக்கப்பட்ட ப்ரோக்கோலி, இதய நோய்களை தடுப்பதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
செரிமான கோளாறுகளை சரிசெய்யக்கூடியது ப்ரோக்கோலி... காரணம் நார்ச்சத்துக்கள் இதில் அதிகமாக உள்ளன.. இதனால் செரிமானம் எளிதாகி, குடல் ஆரோக்கியம் காக்கப்படுகிறது.
கால்சியம்: கால்சியம் நிறைய உள்ளதால், பற்கள் மற்றும் எலும்புகளுக்கு வலுவை தருகிறது.. ப்ரோக்கோலி சாப்பிடுவதால், புற்றுநோய்கள் எளிதில் நெருங்குவதில்லை.. காரணம், சல்போரபேன் என்ற வேதிப்பொருள் இந்த ப்ரோக்கோலியில் உள்ளதால், புற்று நோய்களின் செல்களின் அடிப்படை வளர்ச்சியை முற்றிலுமாக அழிக்கச்செய்கிறது. அத்துடன் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கிறதாம்.
நினைவு திறனை அதிகரிக்கக்கூடியது என்பதால் வளரும் பிள்ளைகளுக்கு இதை உணவில் அதிகம் தர வேண்டும்.. இந்த புரோக்கோலியில் காபி தயாரித்து குடிப்பது, உடல் எடை குறைப்பவர்களுக்கு கை கொடுத்து உதவுகிறது. புரோக்கோலி பொடி என்று கடைகளிலேயே விற்கிறார்கள்.. அல்லது, பொடி கடைகளிலும் ரெடிமேடாகவும் கிடைக்கின்றன.
ப்ரோக்கோலி: அல்லது, ப்ரோக்கோலியை துருவிக்கொண்டு, வெயிலில் உலர்த்தி காயவைத்து பொடியாக மிக்சியில் அரைத்து வைத்துக் கொண்டாலே போதும். இந்த 2 ஸ்பூன் ப்ரக்கோலி பவுடர், அரை கப் ப்ரக்கோலியை பச்சையாக சாப்பிடுவதற்கு சமமாம்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, காபி தூள் கலக்கும்போது, இந்த புரோக்கோலி பவுடரையும் ஒரு ஸ்பூன் சேர்த்து கொதிக்கவைத்து, வடிகட்டி குடித்தால், ஆரோக்கியமான முறையில் உடல் எடை குறைகிறதாம். எனவே, டாக்டரின் ஆலோசனையை பெற்று, ப்ரோக்கோலியை பயன்படுத்தலாம்.
கொழுப்பு: புரோக்கோலியை சாப்பிட்டு வருபவர்களுக்கு உடல் எடை அதிகரிப்பது கிடையாது.. மாறாக, இடுப்பு மற்றும் தொடை பகுதியில் உள்ள கொழுப்பு தானாக கரைந்துவிடுமாம்.
சருமத்தில் ஈரப்பதம் குறையாமல் பாதுகாத்து, தோல் சுருக்கத்தை ஏற்படாமல் தடுக்கக்கூடியது ப்ரோக்கோலி.. அதேபோல, கண்களில் இருக்கும் மேகுலார் திசுக்களின் வளர்ச்சி குறைகிறது... கண் பார்வை மங்குதல், கண் புரை போன்ற பிரச்சனைகளும் அண்டவிடாமல் செய்கிறது புரோக்கோலி.
கவனம்: இத்தனை நன்மைகள் இருந்தாலும், தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் மட்டும் புரோக்கோலி சாப்பிட வேண்டாம் என்கிறார்கள்.. காரணம், தைராய்டு உற்பத்திக்கு தேவையான அயோடின் சத்தை உறிஞ்சுவதில் சிக்கல்கள் ஏற்படலாம்.. ப்ரோக்கோலி அதிகமாக சாப்பிட்டாலும் வாயுத்தொல்லை ஏற்படும்.. மற்றபடி ப்ரோக்கோலி அனைவராலும் சாப்பிடக்கூடிய சத்தான உணவு.












Click it and Unblock the Notifications