முருங்கையிலை மேஜிக்.. உடல் எடையை சடசடன்னு குறைக்கும் முருங்கைக்கீரை டீ.. தினமும் 1 கப் போதும்.. செம
சென்னை: முருங்கைக்கீரையினால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? முருங்கையிலை பொடி டீயை எப்படி தயாரிக்க வேண்டும் தெரியுமா?
மற்ற தாவர உணவுகளில் இருப்பதைவிட, 25 மடங்கு இரும்பு சத்துக்கள் முருங்கைக்கீரையில் அதிகமாகவே உள்ளது... மற்ற கீரைகளில் உள்ள இரும்புச்சத்தினை விட 75 சதவீத அதிக சத்து இந்த முருங்கையில் உள்ளது..

சத்துக்கள்: ஆண்டி - ஆக்சிடன்ட், ஆண்டி - டயாபடிக், ஆண்டி - அத்திரோஜெனிக், ஆண்டி - ஹைப்பர் டென்சிவ், ஆண்டி - மைக்ரோபியல், ஆண்டி - இன்பிள மேட்ரி, ஆண்டி - பையிரிடிக், ஹெப்படோ புரொடெக்டிவ் போன்ற எண்ணற்ற நோய்சக்திகள் இந்த கீரைக்குள் உள்ளன
ஆரஞ்சைவிட 7 மடங்கு வைட்டமின் C, பாலில் இருப்பதை விட 4 மடங்கு அதிகம் கால்சியம், கேரட்டில் இருப்பதுப்போல 4 மடங்கு itட்டமின் C, வாழைப்பழத்தில் உள்ளதுபோல 3 மடங்கு பொட்டாசியம் முருங்கைக்கீரையில் உள்ளது.
முருங்கைக்கீரை: 300 வகையான நோய்களை முன்கூட்டியே தடுக்கக்கூடியது இந்த முருங்கைக்கீரை.. இந்த முருங்கை கீரையில் 90 வகையான சத்துக்களும், 46 வகையான மருத்துவ குணமும் இருப்பதால்தான், நம்மிடையே தவிர்க்க முடியாத கீரையாக இன்னமும் விளங்கி கொண்டிருக்கிறது.
முருங்கை இலைகள் குறைந்த கொழுப்புச்சத்துக்களையும், நிறைந்த ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கிறது. எனவே, கொழுப்பின் அளவை குறைக்கக்கூடிய இந்த முருங்கைக்கீரை, இதய நோய்களின் ஆபத்தையும் குறைக்கிறது.. ஊளைச்சதையாலும் தொங்குகின்ற தொப்பையை குறைக்க உதவுகிறது.. தொடை பகுதியிலுள்ள செல்லுலாய்டு கொழுப்பு திசுக்களையும் குறைக்க உதவுகிறது.
ஆரோக்கியம்: இதிலிருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உடலில் வீக்கம், ஆக்ஸிஜன் அழுத்தத்தை எதிர்த்து போராடி, தலைமுடியின் ஆரோக்கியத்தையும், சருமத்தின் ஆரோக்கியத்தையும் காக்கிறது..
இத்தனை பலன்களும் கிடைக்க வேண்டுமானால் ஏதாவது ஒரு ரூபத்தில் முருங்கைக்கீரையை உணவில் சேர்த்து கொள்ளலாம்.. இந்த இலையில் டீ தயாரித்தும் குடிக்கலாம். எப்படி தெரியுமா? முருங்கைகீகீரையை நன்றாக சுத்தம் செய்து, நிழலில் உலர்த்தி எடுத்து, அதை பவுடராக அரைத்துக்கொள்ள வேண்டும்.
உடல் எடை: பாத்திரத்தில் தண்ணீரையும், இந்த பவுடரையும் சேர்த்து கொதிக்கவிட வேண்டும். இதனை வடிகட்டினுல், பச்சை நிறத்தில் டீ கிடைக்கும்... இதில், தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். இதனால், ரத்த அழுத்தமும் கட்டுக்குள் வரும்.. எனவே, உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள், இந்த மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று இந்த டீயை எடுத்துக் கொள்ளலாம்.
இதையே வேறு மாதிரியாகவும் தயாரிக்கலாம்.. பாத்திரத்தில் தண்ணீருடன், முருங்கையிலை பவுடர் அரை டீஸ்பூன் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.. இதிலேயே கிரீன் டீ, இஞ்சி, புதினா, ஏலக்காய், போன்றவற்றையும் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இறுதியில், இதனை வடிட்டி எலுமிச்சை சாறு அல்லது பனங்கருப்பட்டிசேர்த்து காலை நேரங்களில குடிக்கலாம்.
மோரிங்கா டீ: ஒரு கப் மோரிங்கா டீ-யை குடித்தால் உடல் எடை, ரத்த அழுத்தம் குறையும், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறிவிடும்.. இந்த டீயை குடித்து வந்தால், வாய்வழி நோய் தொற்றுகளில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம் என்கிறார்கள்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications