"முள்ளங்கி கீரை".. ஒரே இலையில் ஓராயிரம் தீர்வுகள்.. முள்ளங்கி வாங்கினால் இதை மட்டும் தூக்கி போடாதீங்க
சென்னை: தினமும் நம்முடைய உணவில் கட்டாயமாக ஒரு கீரையை சேர்த்துக் கொள்ள சொல்கிறார்கள்.. அந்தவகையில், முள்ளங்கி கீரையையும் நாம் மறந்துவிடக்கூடாது. ஒதுக்கிவிடவும் கூடாது.
பொதுவாக, பீட்ரூட், பூசணி, முள்ளங்கி போன்ற காய்களுடன் சேர்ந்தே இருக்கும் கீரைகளில் சத்து அதிகம் இருக்கும்.. இந்த காய்களைவிட, அதன் கீரைகளில்தான் நிறைய சத்துக்கள் உள்ளன.

ஆனால், நாம் காய்களை எடுத்துக்கொண்டு, இலைகளை தூக்கி எறிந்துவிடுகிறோம். முள்ளங்கி கீரையில் நார்ச்சத்துக்கள் அதிகம்.. கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் A,B,C போன்றவை உள்ளன.. முள்ளங்கியில் இருப்பதைவிட 6 மடங்கு, வைட்டமின் C, இந்த முள்ளங்கி கீரையில் இருக்கிறதாம்.
இந்த முள்ளங்கி இலையை எடுத்துக் கொண்டால், உள்ளுறுப்புகளுக்கு பலம் சேர்க்கிறது.. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் ஒரு வேளையாவது, இந்த கீரையை சாப்பிட வேண்டும்.
சுவாசப்பாதை: சிறுநீரகம், இதயம், கண்கள் போன்றவை சிறப்பாக செயல்பட இந்த இலைகள் உதவுகின்றன. சுவாசப்பாதையையும் இந்த இலை சரிசெய்யக்கூடியது. கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும், முள்ளங்கி இலையை அதிகம் சேர்த்துக் கொண்டால் கால்சியம் பிரச்சனை தீரும்.
நீரிழிவு நோயாளிகளுக்கும், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சினை உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது... இந்த கீரையில் சாறு எடுத்து, அதில் வெந்தயத்தை ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலை மாலை 2 வேளையும் சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோய் குணமாகும் என்கிறார்கள். ஆனால், டாக்டர்களின் ஆலோசனையுடன் இவைகளை சாப்பிட கூடாது.
பாதாம் பருப்பு: இந்த கீரையின் சாற்றினை, பாதாம் பருப்பையும் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் ஆண்மை பெருகுமாம்.. மலச்சிக்கலையும் தீர்க்கக்கூடியது. இந்த சாற்றை 1 ஸ்பூன் எடுத்து, 3 வேளைகளும் சாப்பிட்டு வந்தாலே மலச்சிக்கல் நீங்குமாம். இதயம் பாதிக்கப்பட்டவர்கள், இதயப் படபடப்பு, இதய பலவீனம் உடையவர்கள் வாரம் ஒரு முறையாவது முள்ளங்கி கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
சருமத்துக்கு இந்த கீரை ஆரோக்கியம் தரக்கூடியது.. இந்த கீரையை தொடர்ந்து சமைத்து சாப்பிட்டு வந்தால், தோலில் ஏற்படும் அலர்ஜிகள் அகலும்..
எப்படி சாப்பிடலாம்: முள்ளங்கி கீரையை பொடியாக நறுக்கி, சிறிதளவு பார்லியையும் சேர்த்து வேகவைத்து, கஞ்சி போல சாப்பிட்டு வந்தால், சிறுநீர் பிரச்சனைகள் நீங்கும்.. இந்த கீரையின் சாறு எடுத்து 6 ஸ்பூன் குடித்து வந்தால், சிறுநீரகத்திலுள்ள கற்கள் வெளியேறிவிடும்
கீரை சூப்: உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்த கீரையை சூப் போல செய்து குடிக்கலாம். காரணம், இதில், நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன.. கலோரியும் குறைவாக இருப்பதுடன், உடம்பிலுள்ள கெட்ட கொழுப்புகளையும் கரைக்கிறது.. இந்த இலையில் சூப் வைத்து குடித்து வந்தாலே உடல் எடை குறைய துவங்குமாம்.
இந்த கீரையை வழக்கமாக செய்யும் கீரை கடையல் போலவே செய்யலாம்.. அல்லது இந்த கீரையில் துவையல் செய்தும் சாப்பிடலாம். ஒரு வாணலில், எண்ணெய், பெருங்காயம், உளுத்தம்பருப்பு சேர்த்து வதக்கி, அதிலேயே முள்ளங்கி கீரையையும் பொடிப்பொடியாக நறுக்கிப்போட்டு வதக்கி, புளியையும் சிறிது சேர்த்து மொத்தமாக ஆற வைத்து அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
மீண்டும் வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கடலைப்பருப்பை, கறிப்வேப்பிலை தாளித்து விழுதில் கொட்டினால், கீரை துவையல் ரெடிய. தேவைப்பட்டால் தக்காளி சேர்த்து கொள்ளலாம்.
கீரை சப்பாத்தி: இந்த கீரையில் சப்பாத்தி செய்யலாம்.. சப்பாத்தி மாவில் முள்ளங்கிக்கீரை, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி என அனைத்தையும் பொடிப்பொடியாக நறுக்கிப்போட்டு, எலுமிச்சை சாறும், சிறிது எண்ணெய் விட்டு நன்றாக பிசைந்து சப்பாத்தி சுடலாம்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications