கல்லீரலை காலி செய்றதே இதுதான்.. கல்லீரல் சூப்பராக இயங்க என்ன சாப்பிட வேண்டும்? அசத்தும் சால்மன் மீன்
சென்னை: கல்லீரலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய உணவுகள் என்னென்ன? கல்லீரலுக்கு கெடுதலை தரக்கூடிய உணவுகள் என்னென்ன? என்னென்ன வழிமுறைகளை கடைப்பிடிக்கலாம். இதோ குட்டி டிப்ஸ்.
நம்முடைய உடலிலுள்ள கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றி, அனைத்து உறுப்புகளையும் சீராக செயல்பட வைக்கவும், பல புரதங்கள் மற்றும் கொழுப்புகளின் உற்பத்தியை கட்டுப்படுத்தவும், நமக்கு உதவுவது கல்லீரல்தான். நம்முடைய ரத்தத்தை சுத்தப்படுத்துவதும் இந்த கல்லீரல்தான்.

புரோட்டீன்: நமக்கு புரோட்டீனை உருவாக்குவதும் கல்லீரல்தான்.. வளர்சிதை மாற்றம் மற்றும் ஊட்டச்சத்து சேமிப்பு போன்ற பல்வேறு அத்தியாவசியமான செயல்பாடுகளுக்கும் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது...
அந்தவகையில், கல்லீரலை பாதுகாக்க 2 வழிகள் நமக்கு கை கொடுக்கின்றன.. ஒன்று, கல்லீரலுக்கு பலத்தை தரக்கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும், மற்றொன்று, கல்லீரலுக்கு தொந்தரவு தரும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
தவிர்க்க வேண்டியவை: மதுபானம், சிவப்பு இறைச்சி, உப்பு, சர்க்கரை, இனிப்பு அதிகம் நிறைந்த உணவுகள், பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவு, வெள்ளை மாவில் செய்யப்படும் ரொட்டி, பீட்சா, பாஸ்தா போன்றவைகளை தவிர்க்க வேண்டும்.
திராட்சை, அதேபோல, கல்லீரலை பாதுகாக்க சில உணவுகளை கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும்.. இதில், முதன்மையான கீரைகள் ஆகும். காரணம் கீரைகளில் குளோரோஃபில் நிறைந்துள்ளது... இது நச்சுகளை நடுநிலையாக்குவதற்கும் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதுடன், ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து கல்லீரலை பாதுகாப்பதில் கீரைகளுக்கு பெரும் பங்கு உள்ளது.
அதேபோல, ப்ரோக்கோலி, காலிஃபிளவர் போன்ற காய்கறிகளை கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும். இந்த காய்கறிகளில் குளுக்கோசினோலேட்டுகள் தீங்கு விளைவிக்கும் பொருட்களை உடைத்து கல்லீரல் ஆரோக்கியத்தை காக்க உதவுகின்றன.
காய்கறிகள்: இஞ்சி, மஞ்சள், முட்டை, நெல்லிக்காய், வால்நட், பீட்ரூட், எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, ஆப்பிள், ஆப்பிள் சீடர் வினிகர், கீழாநெல்லி, மீன், முட்டை, முட்டைக்கோஸ், புரோக்கோலி, காலிஃபிளவர், க்ரீன் டீ போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.
மீன்களில், சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி உள்ளிட்ட ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் நிறைந்த மீன்களை எடுத்துக் கொள்ளலாம்.. மீன்களிலுள்ள இந்த ஆரோக்கியமான கொழுப்புகள், வீக்கத்தை குறைப்பதுடன், கொழுப்பு கல்லீரல் நோய் அபாயத்தையும் குறைக்கிறது.
தினமும் எலுமிச்சம் பழத்தை ஏதாவது ஒரு ரூபத்தில் உணவில் சேர்த்து கொள்ளலாம்.. ஏனென்றால், இந்த பழத்திலிருக்கும் D-Limonene என்ற ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் கல்லீரல் செயல்பாட்டிற்கு பெரிதும் துணைபுரிகிறது. மேலும் ஆரோக்கியமான என்சைம்களை அதிகரிக்க செய்து உடலிலுள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்ற செய்துவிடும். குடிக்கும் நீரில் ஒரு துண்டு எலுமிச்சையை போட்டுவைத்துவிட்டு, அந்த தண்ணீரையே நாள் முழுவதும் குடித்தாலே போதும்.
அவுரிநெல்லிகள்: வைட்டமின் C அதிகமுள்ள அவுரிநெல்லிகள், ஸ்ட்ராபெர்ரிகள், ராஸ்பெர்ரிகள், அக்ரூட் பருப்புகள், பாதாம், ஆளிவிதைகள், வைட்டமின் E நிறைந்த உணவுகளை சேர்த்து கொள்ளலாம். சமையலை ஆலிவ் எண்ணெய்யில் சமைக்கலாம்.
சமையலில் நிறைய பூண்டு, மஞ்சள் சேர்த்து கொள்ளவேண்டும். பூண்டுகளில் சல்பர் கலவைகள் உள்ளதால், கல்லீரல் என்சைம்களை செயல்படுத்துகின்றன... நச்சுகளைகளையும் வெளியேற்றுகிறது. மஞ்சளில் 'குர்குமின்' என்று பொக்கிஷமான சத்துக்கள் உள்ளதால், கல்லீரலுக்கு தேவையான சத்துக்களை தருகிறது. ஒருநாளைக்கு 2 வேளை, கிரீன் டீயும் சாப்பிடலாம்.
அதிமதுரம்: கல்லீரல் நோய்களுக்கு அதிமதுரம் பெரிதும் பயன்படுகிறது. இந்த அதிமதுரத்தின் வேர்களை, பொடி செய்து, டீ தூளுடன் கொதிக்கும் நீரில் போட்டு, வடிகட்டி குடிக்கலாம். இப்படி 2 நாளைக்கு குடித்தாலே போதும்.. கல்லீரல் தொற்றுக்கள் நீங்கிவிடும்.
முழு தானியங்கள்: ஓட்ஸ், பழுப்பு அரிசி, தினை மற்றும் பார்லி போன்ற முழு தானிய பொருட்கள் கல்லீரலுக்கு சிறந்தது. பெரும்பாலும், நார்ச்சத்து அதிகமுள்ள இந்த உணவுகள் கல்லீரலில் சர்க்கரையின் சேமிப்பை குறைக்கிறது... கல்லீரலை சுத்தப்படுத்தவும் உதவுகிறது..
வைட்டமின் B, பாஸ்பரஸ், மாங்கனீசு மற்றும் மெக்னீசியம் போன்ற நச்சுத்தன்மையை நீக்க கல்லீரலுக்கு வலிமை அளிக்கக்கூடிய தாதுக்கள் அதிகம் உள்ள முழு தானியங்களை உணவுப் பழக்கத்தில் சேர்க்க வேண்டும். முழு தானியங்களான பழுப்பு அரிசி போன்றவற்றில் கல்லீரலைப் பாதுகாக்கும் செலினியம் அதிகம் உள்ளது.. பழங்களை பொறுத்தவரை, சிட்ரஸ் பழங்கள் கல்லீரலின் செயல்பாட்டினை தூண்டுவதற்கு உதவுகின்றன.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications