மொச்சை கொட்டை.. எண்ணிலடங்கா நன்மை மொச்சை பயறு.. ஏகப்பட்ட பலன்.. புற்றுநோயை அண்டவிடாத மொச்சைக்கொட்டை

Subscribe to Oneindia Tamil

சென்னை: புற்றுநோய்களை தடுக்கக்கூடிய தன்மை இந்த மொச்சைக்கொட்டைகளுக்கு உண்டு.. 10,000 வருடங்களுக்கு மேலாக, பல நோய்களை குணப்படுத்தும் மருந்தாக மொச்சைக்கொட்டைகள் விளங்கி வருகிறது என்றால் நீங்களே பார்த்து கொள்ளுங்கள்.
தியமின், வைட்டமின் C, A, K, B6, தாமிரம், செலினியம், இரும்புச்சத்து, நியசின், ரிபோஃப்ளவின், கோலின், சோடியம், செலினியம், துத்தநாகம், பொட்டாசியம், மக்னீசியம் சத்துக்களை கொண்டதுதான் மொச்சைகள்.

புரோட்டீன்கள்: நார்ச்சத்து அதிகம் என்பதாலும், நிறைவுற்ற கொழுப்புகள் இல்லை என்பதாலும், நிறைய புரோட்டீன்கள் உள்ளதாலும், எடை குறைக்க விரும்புவர்கள் இதை தாராளமாக பயன்படுத்துவார்கள்.. இந்த நார்ச்­சத்­துக்­கள் ரத்த சர்க்­கரை அளவை கட்­டுப்­பாட்­டில் வைக்க தூண்டுகின்றன.

Do you know Super Benefits of Mochai Payaru and Mochai Kottai is the Excellent Medicinal food for all

சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள், சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள், வாதம் மற்றும், தோல் தொடர்பான நோய் உள்ளவர்கள் இதை தவிர்க்கலாமே தவிர, மற்றபடி கர்ப்பிணிகள், இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், குழந்தைகள் என அனைவருமே மொச்சைக்கொட்டையை சாப்பிடலாம்.

மொச்சைக் கொட்டைகள்: உடல் சூட்டை தணித்து, குளிர்ச்சியை தரக்கூடிய இந்த மொச்சைக் கொட்டைகள்.. செரிமானத்தை அதிகப்படுத்தக்கூடியது.. அஜீரணம் நீங்கி, மலச்சிக்கலையும் தீர்க்கிறது.. காய்ச்சலை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.. கொலஸ்ட்­ரால் அளவை இந்த பயிறு குறைப்பதால், இதய நோய்கள் வராமல் காக்கப்படுகிறது.

பெண்களுக்கு என்னென்ன சக்திகள், சத்துக்கள் தேவையோ அத்தனையும் இந்த ஒரே மொச்சைப்பயிறில் அடங்கியிருக்கிறது. பெண்களை பாதிக்கக்கூடிய ரத்த சோகை பிரச்சனைக்கும், அதிக உதிரப்போக்கு பிரச்சனைக்கும், மொச்சை பயிறு தீர்வை தருகிறது.

மொச்சைகள்: கர்ப்ப காலங்களில் இந்த மொச்சைக்கொட்டையைதான் சமைத்து தருவார்கள். இதற்கு காரணம், கருச்சிதைவு, முன்கூட்டியே பிறப்பு, குறைந்த எடையுடன் குழந்தை பிறத்தல், கருவில் குழந்தைகளுக்கு ஏற்படும் முதுகெலும்பு முழுமையற்ற வளர்ச்சி, மூளையின் பகுதிகளில் ஏற்படும் முழுமையற்ற வளர்ச்சி போன்ற பிறப்பு குறைப்பாடுகளை மொச்சை தடுக்கிறது. எனினும், குழந்தைக்கு ரத்தசோகை ஏற்படும் என ஆய்வுகள் சொல்வதால், மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று சாப்பிடலாம்.

புற்றுநோய்களை நெருங்க விடாமல் தடுப்பதில் மொச்சைக்கொட்டைகளுக்கு பெரும்பங்கு உள்ளதாம்.. குறிப்பாக, பெருங்குடல் பகுதியில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்களை இந்த மொச்சை தடுக்கின்றவாம்..

புற்றுநோய்: காரணம், மொச்சைக் கொட்டை ஒரு சிறிய அளவு "ஜெனிச்டின் மற்றும் டைட்சின்" என்ற ஐஸோஃப்ளவன்களைக் கொண்டுள்ளது. இது மார்பக புற்றுநோயை தடுப்பதாகவும் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இதிலுள்ள அமினோ அமிலங்கள், நல்ல மனநிலையை அதிகரிக்க செய்து, மன அழுத்தத்தை தடுக்கிறது..

மொச்சைக் கொட்டையில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது. உடலின் அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்த புரதம் உடலுக்கு மிகவும் அவசியம் என்பதை மறந்துவிடக்கூடாது. மொச்சை கொட்டை உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து கலோரிகளை எரிக்கும். ஆண்களின் தாடி வளர்ச்சிக்கு இந்த பயிறு உதவி புரிகின்றது.

எப்படி வாங்குவது: மொச்சை கொட்டைகளை எப்படி வாங்க வேண்டும் தெரியுமா? காய்ந்த மொச்சை கொட்டைகளாக இருந்தால், சேதமில்லாத நல்ல கொட்டைகளா என்று பார்க்க வேண்டும்.. கொட்டைகள் எப்போதுமே பார்ப்பதற்கு உடைந்துவிடாமல் முழுமையாக இருக்க வேண்டும்.. கொட்டைகளில் விரிசல் இருக்கவே கூடாது..

ஈரமில்லாமல் இருக்க வேண்டும்.. பச்சை மொச்சைகளாக இருந்தால், பளபளப்பாக காணப்பட வேண்டும்.. அதன் சதைகள் மென்மையானதாக இருக்க வேண்டும். மொச்சையை வேகவைக்கும் போது இஞ்சி, பூண்டு சேர்த்து சமைத்தால் வாய்வுத்தொல்லை ஏற்படாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+