Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீனிலேயே மத்தி பெஸ்ட்.. மத்த மீனை விட ஏன் சூப்பர் தெரியுமா? மத்தி ஸ்பெஷாலிட்டியே இதுதான்.. அபார பலன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மீன்கள் எப்போதுமே நன்மை தரக்கூடியது என்றாலும், ஒருசில மீன்களை தவிர்க்கவே கூடாது என்கிறார்கள்.. அப்படிப்பட்டதுதான் மத்தி மீன்கள்.. இதன் பலன்கள் என்னென்ன தெரியுமா?

சில வருடங்களுக்கு முன்புவரை ஒதுக்கப்பட்ட மீன் வகைகளில் இந்த மத்தி மீன்களும் ஒன்று.. இதனை சாளை மீன் என்றும் சொல்வார்கள்.. அன்று கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்ட, மத்தி மீனுக்கு இன்று ஏகப்பட்ட மவுசு கூடிவிட்டது.

Do you know Super Health Benefits of Mathi Fish and Mathi Fish is the Fantastic uses for Diabetics Pregnant Women

மருத்துவ உலகுக்கே அப்போதுதான் இந்த மத்தி மீன் பற்றி தெரிய துவங்கியது. சர்க்கரை நோயாளிகளும், இதய நோயாளிகளும் சாப்பிடக்கூடிய மீன் இது என்பதும் அப்போதுதான் தெரியவந்தது.

ஆரோக்கியம்: இதற்கு காரணம், நம்முடைய உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் தேவையான அத்தனை புரதச்சத்தும் இந்த மீனிலேயே நிறைந்திருக்கிறதாம்.. மத்தி மீன்களை தொடர்ந்து சாப்பிடுவதால், ரத்த சர்க்கரை அளவை மெதுவாக உறிஞ்சுகிறது. இதனால் இன்சுலின் தட்டுப்பாடும் குறைகிறது.

தமிழ்நாட்டை விட கேரளாவில், இந்த மீனை அதிகம் பயன்படுத்துவார்கள்.. இத்தனைக்கும் சென்னையில் இருந்துதான் கேரளாவுக்கு மீன்கள் ஏற்றுமதியாகின்றன.
உடல் எடை: உடல் எடையை குறைக்க நினைப்பவர்களும் சாப்பிடக்கூடியது இந்த மத்தி மீன்கள்.. பசியை கட்டுப்படுத்தி உடல் எடையையும் குறைக்கும். கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.. நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க செய்கிறது. முன்கழுத்து கழலை நோய்களை வராமல் தடுக்கிறது.

கர்ப்ப காலத்தில் பெண்கள், மத்தி மீனை சாப்பிட்டுவரும்போது, குழந்தைக்கும் தாய்க்கும் நிறைவான கால்சியம் கிடைக்கும். முடி உதிர்தல் பிரச்சனை, கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் மத்தியை சாப்பிட்டு வந்தால், குறைகள் நீங்கும்.. வயதானவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்கக்கூடியது.. ஆஸ்துமாவை தடுத்து நிறுத்தக்கூடியது. புற்று நோய்களின் அபாயத்தை தடுக்கக்கூடியது.

எலும்பு தேய்மானம்: 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய மீன் இதுவாகும்.. வயது ஆக ஆக, ஏற்படும் பார்வை குறைபாடு பிரச்சனைகளுக்கு மத்தி மீன் சிறந்த மருந்தாகிறது. 40 வயதுக்கு மேல் ஏற்படும் எலும்புகள் தேய்மானத்துக்கும் மத்தியே பெஸ்ட் மீன்கள்.. இதிலுள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது.. இதனால் மூட்டு வலி, முழங்கால் வலி பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கிறது. இந்த மத்தி மீனின் செல்களில் இருந்துதான், கால்சியம் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன..

வைட்டமின் D சத்துக்கள் இதில் அதிகமாக உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி நமக்கு அபரிமிதமாகவே கிடைக்கிறது. சருமத்தை பளபளப்பாக்க இந்த மீன் உதவுகிறது. அதுவும் இயற்கையான பளபளப்பை தருகிறது..

தொந்தரவுகள்: இந்த மத்தி மீன் அழற்சி பண்புகளுக்கு எதிராக போராடுவதால் ரத்தம் உறைதல் பிரச்சனையை தவிர்க்க உதவுகிறது. இதனால் மற்ற உறுப்புகளுக்கும் சீரான ரத்த ஓட்டம் கிடைக்கிறது.

உடலிலுள்ள நல்ல கொலஸ்ட்ரால் அளவை இந்த மத்தி மீன்கள் மேம்படுத்த உதவுவதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன. உடலில் நல்ல கொலஸ்ட்ரால் போதுமான அளவில் இருந்தாலே, இதயத்தின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் மற்றும் இதய நோயின் அபாயமும் குறையும்,.. அதுமட்டுமல்ல, புரோட்டீன் அதிகமாகவே இதில் நிறைந்துள்ளன.. அதுவும் எளிதில் ஜீரணமாகக்கூடிய புரோட்டீன்களில் அனைத்துவிதமான அமினோ அமிலங்கள் காணப்படுகின்றன..

புரோட்டீன்: எனவே புரோட்டீன் அதிகம் நிறைந்த மத்தி மீனை அடிக்கடி உணவில் சேர்க்கும்போது, அது கரோனரி இதய நோய் மற்றும் பக்கவாதத்தின் அபாயத்தை வெகுவாக குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இரும்புச்சத்து அபரிமிதமாக உள்ளதால், இறைச்சியால் பெறும் மொத்த சத்துக்களையும், இந்த ஒரேயொரு மத்தியிலிருந்தே பெற்றுக் கொள்ளலாம்.

மற்ற மீன்களில் இல்லாத ஸ்பெஷாலிட்டி இந்த மத்தி மீனில் என்ன உள்ளது தெரியுமா? மூளையின் செயல்பாட்டையும், நினைவாற்றலையும் இது அதிகரிக்க உதவுகிறதாம்..

மன அழுத்தம்: இதற்கு காரணம், மத்தி மீனிலுள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் தான்.. இந்த அமினோ அமிலங்கள், நரம்பு இழைகள் மற்றும் மூளையில் உள்ள செல்களுக்கு இடையேயான தகவல் தொடர்புகளை பாதுகாக்கின்றன. அத்துடன், டோபமைன் உற்பத்தியை அதிகரித்து, மனதை எப்போதும் அழுத்தமில்லாமல் வைத்துக் கொள்ள உதவுகிறதாம்.

குறைந்த விலையில், பல உடல் தொந்தரவுகளை விரட்டியடிக்கக்கூடிய மத்தி மீன்களில். குறைவான அளவு நச்சுதன்மையே இருக்கும் என்பதால், தயக்கமின்றி தாராளமாகவே இந்த மீனை எடுத்துக்கொள்ளலாம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+