இந்த அறிகுறிகள் இருக்கா? சாதாரண கட்டியையும் அலட்சியப்படுத்தாதீங்க.. கலர்ஃபுல் பழங்களை கையிலெடுங்க
சென்னை: பெரும்பாலும் பரம்பரையாக வருகிற புற்றுநோயை நம்மால் தடுக்க முடியாது என்றாலும், ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால், எளிதாக குணப்படுத்த முடியும் என்கிறார்கள்.. எனினும், புற்றுநோயின் பொதுவான சில அறிகுறிகள் என்னென்ன?
சாதாரண கட்டி என்று நினைத்து, புற்றுநோயை அஜாக்கிரதையாக சிலர் விட்டுவிடுவார்கள்.. புற்றுநோய் கட்டி என்று நினைத்து, சாதாரண கட்டியையும் பார்த்து பயம் கொள்வார்கள்.. இரவில் வியர்த்து கொட்டியால், சாதாரணமாகவும் இருக்கலாம் அல்லது லிம்போமா புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இது நெஞ்சுவலிக்கும் பொருந்தும்.

காரணங்கள்: புற்றுநோய் வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.. போதுமான அளவுக்கு உடற்பயிற்சிகள் இல்லாதது, சமச்சீரற்ற உணவு பழக்கம் போன்றவையும், புற்றுநோய்க்கான வாய்ப்புகளை அதிகம் ஏற்படுத்துகின்றன.
எனினும், ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள், சுத்தமான சுற்றுச்சூழல்கள், புற்றுநோயை வருவதை பெருமளவு தடுத்து நிறுத்துகின்றன. அதேசமயம், ஆரம்ப கட்டத்திலேயே புற்றுநோயை, ஒருசில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம்..
குறிப்பாக, எந்தவிதமான உணவுக்கட்டுப்பாடும் இல்லாமல், உடல் எடை வேகவேகமாக குறைந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. காரணம், கணையம், வயிறு, உணவுக்குழாய், நுரையீரல் போன்ற பகுதிகளில் புற்றுநோய் உருவானதற்கான அறிகுறியாகவும் இது இருக்கலாம்.
மச்சங்கள்: ஏற்கனவே இருக்கும் மச்சங்கள், அல்லது மருவில் வலி இருந்தாலோ அல்லது நிறம் மாறினாலோ, வேறு ஏதாவது மாற்றங்கள் தென்பட்டாலோ, மச்சங்களிலிலிருந்து ரத்தம் வந்தாலோ அதுவும் தோல் புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.
வலியுடன் சிறுநீர் வெளியேறினால் அல்லது சிறுநீர் வழியாக ரத்தம் வெளியேறினால், குடல் புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.. தொடர்ந்து நாட்கணக்கில் உடலில் வலி இருந்தால், அதுவும் புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். நெஞ்சில் எரிச்சல் ஏற்பட்டால், இதுவும் தொண்டை புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். சாப்பாட்டை எளிதாக விழுங்க முடியாத அளவுக்கு வலி இருநத்லும், உணவுக்குழாய் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம்..
கட்டிகள்: புற்றுநோய்க் கட்டிகள் பெரும்பாலும் வலியில்லாத கட்டிகளாகவே இருக்கும். அதனால், உடலில் கட்டிகள் இருந்தால் உடனடியாக கவனிக்க வேண்டும்.. வாய், மூக்கில் இருந்து ரத்தம் வடிதல், அடிபட்ட இடத்தில் இருந்து அதிக ரத்தப்போக்கு இருந்தாலும் அலட்சியப்படுத்தக்கூடாது.
அளவுக்கு அதிமான தொடர் தலைவலி, வாந்தி, வலிப்பு போன்றவை இருந்தாலும் அலட்சியப்படுத்தக்கூடாது. சருமத்திலோ அல்லது நாக்கு, வாய் போன்ற பகுதிகளில் புண்கள் ஏற்பட்டு, ஆறாமல் இருந்தால் இதையும் கவனிக்க வேண்டும். திடீரென குரலில் மாற்றம், வாசனை தெரியாமல் இருப்பது, காயமே இல்லாமல் எலும்பு முறிவது, போன்றவை இருந்தாலும் அலட்சிம் தேவையில்லை..
மார்பக புற்றுநோய்: அக்குள், கழுத்து, அல்லது மார்பகத்தில் வலி இருந்தால் அலட்சியப்படுத்தக்கூடாது.. முலைக்காம்பிலிருந்து சிதைவு, மார்பகத்தின் மேல் தோல் மங்கலாவது, இரண்டு மார்பகங்களிலும் சமச்சீரற்ற தன்மை போன்றவையும் மார்பக புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கும்..
பெரும்பாலும், பெண்களை தாக்குவது, மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்பதால், இது தொடர்பான பரிசோதனைகளை அடிக்கடி மேற்கொள்வது நல்லது.
புற்றுநோய்கள் பலவகையானவை.. அவைகளின் அறிகுறிகளும் பலவகையானவை.. எனினும், புற்றுநோய்க்கான பொதுவான அடிப்படை அறிகுறிகள் மேற்சொன்னவையாக இருக்கலாம். எனவே, உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது புற்றுநோய் நிபுணர்களிடம் அணுகி, இந்த அறிகுறிகளுக்கான ஆலோசனையை உடனடியாக பெற்றுக் கொள்வது சிறந்தது.
உணவுகள்: அதேசமயம், எண்ணெயில் பொரித்த உணவுகளையும், அதிகமாக வேக வைக்கப்பட்ட உணவுகளையும், அடிக்கடி சூடுபடுத்தி சாப்பிடும் உணவுகளையும் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக, மீன்கள் உட்பட பச்சை காய்கறிகளை சாப்பிட வேண்டும்.. கண்ணை பறிக்கும் கலர்களில் உள்ள பழங்களில் நோய் எதிர்ப்பு சக்திக் காரணிகள் அதிகம்... அதேபோல, நார்ச்சத்து நிறைந்த கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications