Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொள பொள ஊளைச்சதை குறையணுமா? பிரண்டை போதுமே.. முழங்கால், கழுத்து வலிக்கு வியக்க வைக்கும் பிரண்டை பொடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மூலநோய்களை விரட்டுவதிலும்சரி, பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை நீக்குவதிலும் பிரண்டைக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அதுபோலலே, கழுத்து வலி, முதுகு வலியை போக்குவதில், பிரண்டை எப்படி பயன்படுகிறது தெரியுமா?

பிரண்டைகளில், வைட்டமின் C, E, கால்சியம், கெட்டோஸ்டீராய்டு (ketosteroids), ஃப்ரீடீலின், ரெஸ்வெராட்ரோல் (Resveratrol) போன்ற பல்வேறு வேதிப்பொருட்கள் நிறைந்துள்ளன..

Do you know the Amazing Benefits of Pirandai and Pirandai Salt is the Best for medicine Weight Loss

நினைவுத்திறன்: அதனால்தானோ என்னவோ, இந்த பிரண்டையை ஆயுளை நீட்டிக்கும் மூலிகை என்கிறார்கள்.. அஜீரணத்தை நீக்கக்கூடியது.. நினைவுத்திறனை அதிகரிக்கக்கூடியது. பலத்தை கூட்டக்கூடியது.. வீக்கம், சுளுக்கு, காயங்களுக்கு மருந்தாகிறது. வாயு தொல்லையை விரட்டுகிறது.

மலத்துவாரத்தில் எரிச்சல், அரிப்பு பிரச்சனை இருந்தாலும் பிரண்டையை நெய்விட்டு வதக்கி சாப்பிட்டாலே போதும். பிரண்டையை நெய்யில் வதக்கி, கல்உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால், மூலநோய்களும் ஓடிவிடும். பிரண்டையை மிளகு சேர்த்து அரைத்து சாப்பிடுவதால் ஆஸ்துமா பிரச்சனையும் தீரும்..

புற்றுநோய்: புற்றுநோய்க்கு தரப்படும் மருந்துகளில் இந்த பிரண்டை பயன்படுகிறது என்றால் பார்த்து கொள்ளுங்கள் இதன் மகத்துவத்தை.. அதேபோல, எலும்புகளுக்கு வலிமையையும், அடர்த்தியையும் இந்த பிரண்டை தருகிறது.. அதனால்தான், எலும்பு சம்பந்தமான சிகிச்சைகளுக்கு பிரண்டை பயன்படுகிறது.

பிரண்டையிலிருந்து சாறு எடுத்து, பசும்பாலுடன் கலந்து குடித்து வந்தால், உடைந்த எலும்புகளும் ஒன்றுசேரும்.. எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளவர்களுக்கு பிரண்டை தண்டுகளில் ரசம் போல வைத்து தந்தால் நிவாரணம் கிடைக்கும்.

எலும்புகள்: அல்லது இந்த பிரண்டை தண்டுகளை நறுக்கி, மிளகு ரசத்தில் சேர்த்து கொதிக்க வைத்து, ஒரு மாதத்துக்கு ஒரு டம்ளர் குடித்து வந்தாலும் எலும்புகள் பலம் பெறும்.. அல்லது உடைந்த எலும்புகளில் புதிய திசுக்களை உருவாக்கி சீரமைக்க பிரண்டை பயன்படுகிறது.. பிரண்டையின் வேர்களை காயவைத்து, பவுடராக்கி, வெந்நீரில் குழைத்து, பற்று போல போட்டுவந்தாலும் முறிந்த எலும்புகள் விரைவில் கூடிவிடுமாம்.

பிரண்டையை நெய்விட்டு வதக்கி சமைத்து சாப்பிட்டு வரும்போது, மலத்துவாரத்தில் எரிச்சல், அரிப்பு பிரச்சனை இருந்தாலும் நீங்கிவிடும். பிரண்டையில் 6 ஸ்பூன் சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து வெறும் வயிற்றில் ஒரு வாரம் குடித்து வந்தால் ஒழுங்கற்ற மாதவிடாய் சீராகும்.. பிரண்டையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், மூட்டு வலி, முழங்கால் வலிக்கு மருந்தாகிறது.

உடல் எடை: உடல் எடையை இந்த பிரண்டை எப்படி குறைக்கிறது தெரியுமா? பிரண்டையை நன்றாக காயவைத்து, தீயில் எரித்து சாம்பலாக்கி கொள்ள வேண்டும்... 1 கிலோ சாம்பலை, 3 லிட்டர் தண்ணீல் கரைத்துவிட வேண்டும். சிறிது நேரம் கழித்து, தெளிந்த நீரை மட்டும் ஒரு பாத்திரத்தில் ஊற்றி, 8 முதல் 10 நாள்கள் வெயிலில் உலரவைக்க வேண்டும்..

இப்போது நீர் முழுவதும் வற்றிப்போய், அடியில் உப்பு மட்டும் தேங்கிகிடக்கும். இந்த பிரண்டை உப்பை 2 முதல் 3 கிராம் எடுத்துக்கொண்டு, பால் சேர்த்து சாப்பிட்டு வந்தாலே ஊளைச்சதை குறையுமாம். பிரண்டை பொடி என்றே நாட்டுமருந்து கடைகளில் விற்கிறார்கள்.. அதையும் பயன்படுத்தலாம்.. அதேபோல, பிரண்டையுடன் மாங்காய் சேர்த்து துவையல் போல அரைத்து சாப்பிட்டாலும் கெட்ட கொழுப்புகள் கரைந்து, ஊளைச்சதையும் குறையுமாம்.

கல்லீரல்: கல்லீரல் சேதத்தை தடுப்பதில் பிரண்டைக்கு முக்கியத்துவம் அதிகமுண்டு.. குடற்புழுக்களை அகற்றுகிறது.. ரத்தத்தை சுத்திகரிக்கிறது ரத்த ஓட்டத்தை சீராக்கி, இதயத்தை பலப்பட செய்கிறது.. உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது இந்த பிரண்டை..

Do you know the Amazing Benefits of Pirandai and Pirandai Salt is the Best for medicine Weight Loss

வாயு காரணமாக, எலும்பு மற்றும் நரம்புகளின் இணைப்புகளில் தேவையற்ற தண்ணீர் தங்கிவிடும்.. இந்த நீரானது, முதுகுத்தண்டு மற்றும் கழுத்து பகுதிக்கு இறங்கி, பசை போல் அங்கேயே தங்கிவிடும்.. இது அளவுக்கு அதிகமான கழுத்துவலி, முதுகு வலியை தந்துவிடும்.. கழுத்தை கொஞ்சம்கூட திருப்ப முடியாது.. குனியவும் முடியாது.. இப்படி தொந்தரவு இருந்தால், பிஞ்சு பிரண்டையை உலர்த்தி தூளாக்கி, சிறிது வெந்நீர் கலந்து பற்று போட்டால் உடனே தீர்வு கிடைக்கும்.

அற்புத மருந்து:
பிரண்டையின் சாறு, வாய் ஆரோக்கியத்தை காக்க உதவுகிறது.. இந்த சாற்றில் வாய் கொப்பளித்தால், பல் ஈறுகள் பலப்படும்.. பற்களில் நுண்ணுயிர் வளர்ச்சியும் தடுக்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+