கொத்து கொத்தாக தொங்கும் பிளம்ஸ்.. கொழுப்பை குறைக்கும் ப்ளம்ஸ் பழம்.. அந்த பிரச்சனை அசால்ட்டா தீரும்
சென்னை: கொழுப்பை குறைத்து, இதயத்தை காக்கக்கூடிய பழங்களில் மிக முக்கியமானது பிளம்ஸ் பழங்கள்.. சிறிய அளவிலான இந்த பழங்கள், பெரிய பெரிய நன்மைகளை மனித குலத்துக்கு தந்து கொண்டிருக்கிறது.
பிளம்ஸ் பழங்களில், பொட்டாசியம், புரோட்டீன், வைட்டமின் A, C, B6, B காம்ப்ளக்ஸ், நியாசின், இரும்புச்சத்து, மக்னீசியம், போன்றவை அதிகம் உள்ளன.. இதிலுள்ள வைட்டமின் A, கண்பார்வை திறனை அதிகப்படுத்துகிறது. கண் சவ்வை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், புற ஊதா ஒளியால் ஏற்படும் சேதத்திலிருந்தும் நம்மை பேணிக்காக்கிறது.

இதிலுள்ள வைட்டமின் C, சருமத்துக்கு கவசமாக திகழ்கிறது. இதனால், சரும பாதுகாப்பு பலப்படுவதுடன், தோலில் சுருக்கங்கள் ஏற்படாமலும் தடுக்கப்படுகின்றன. அதனால்தான், அழகுசாதன பொருட்கள் தயாரிப்புகளில், பிளம்ஸ் பழங்களை மூலப்பொருட்களாக பயன்படுத்துகிறார்கள்.
தலைமுடி வளர்ச்சி: இதிலுள்ள வைட்டமின் K, ரத்தம் உறைதலில் உதவுவதுடன், அல்சீமர் போன்ற பாதிப்புகளை அண்டவிடாமலும் செய்கிறது.. அத்துடன், ரத்தத்தை சுத்தப்படுத்தவும் இந்த பழம் உதவுகிறது.. தலைமுடி அதிகம் உதிர்வதாக இருந்தால், இந்த பழத்தை சாப்பிடலாம். இரும்பு சத்து நிறைய இருப்பதால், சீரான ரத்த ஓட்டமும் தலைமுடிக்கு கிடைக்கிறது..
உடல்எடை குறைய நினைப்பவர்களுக்கு இந்த பழம் சிறந்த தேர்வாகும்.. காரணம், நார்ச்சத்து நிறைந்த பழம் என்பதால், செரிமான கோளாறையும் நீக்கி, மலச்சிக்கலையும் எளிதாக தீர்த்து, குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.. நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க செய்து, கொழுப்புச்சத்தையும் குறைப்பதால், உடல் எடை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த பழம்.
ரத்த சர்க்கரை: ரத்த அழுத்தத்தையும், இதய துடிப்பையும் கட்டுப்பாட்டில் வைப்பதில் இந்த பழங்கள் பேருதவி புரிகின்றன.. ரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்த இந்த பழம் உதவுவதால், டைப் 2 நீரிழிவு நோய் உருவாகும் அபாயமும் குறைகிறது.. பிளம்ஸ் சாப்பிடுவது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.. இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மன அழுத்தம், மனப்பதற்றம் நீங்குவதாக ஆய்வுகள் சொல்கின்றன.
அதேபோல, மாதவிடாய் நின்ற பெண்கள், ரத்தசோகை உள்ள பெண்கள், இந்த பழத்தை அதிகம் எடுத்து கொள்ளலாம். பிளம்ஸ் பழத்தை சாப்பிடுவது, மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராட உதவுகிறது. அதேபோல, வாய்வழி, பற்சொத்தை புற்றுநோயிலிருந்தும் பாதுகாக்கிறது.
கர்ப்பிணிகள்: அத்துடன் நிறைய வைட்டமின்களும், மினரல்களும் உள்ள இந்த பழம், கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது.. இதனால், கருவில் வளரும் குழந்தைக்கு கண் பார்வை, எலும்பு, திசுக்களின் சிறப்பான உருவாக்கத்துக்கும் பிளம்ஸ் பேருதவி புரிகிறது..
ஏராளமான வைட்டமின்களும், மினரல்களும் இருப்பதால் கர்ப்பிணிகளின் நலன் காக்கும் பழம் இது.கர்ப்பிணியின் ஆரோக்கியம் காப்பதைப் போலவே கருவில் வளரும் குழந்தைக்கு கண் பார்வை, எலும்பு மற்றும் திசுக்களின் சிறப்பான உருவாக்கத்துக்கும் பிளம்ஸ் உதவுகிறது..
சிலருக்கு அலர்ஜியை இந்த பழம் ஏற்படுத்த வாய்ப்புள்ளதால் தவிர்த்துவிடலாம். மற்றபடி, சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணிகள், மருத்துவரின் ஆலோசனை பேரில், இந்த பழங்களை சாப்பிட்டு வந்தால், பெரும்பலனை பெறலாம்.












Click it and Unblock the Notifications