சர்னு வெயிட் குறையணுமா? அப்ப சூப்பர் சாய்ஸ் யோகர்ட் இருக்கே.. சர்க்கரை நோயாளி யோகர்ட் சாப்பிடலாமா?
சென்னை: யோகர்ட்டில் உள்ள நன்மைகள் என்னென்ன? யார் வேண்டுமானாலும் யோகர்ட் சாப்பிடலாமா? ஆய்வுகள் என்ன சொல்கின்றன?
தயிரும், யோகர்ட்டும் ஒன்று என்று பலரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.. இரண்டு வேறு வேறு.. புளிப்பாக்கப்பட்ட பாலையே, யோகர்ட் என்கிறோம்.. அதாவது, பாலை பதப்படுத்தப்பட்டு, பல மணி நேரத்திற்கு உயிருள்ள பாக்டீரியாக்களை சேர்த்து வைக்க வேண்டும். அப்போது நமக்கு கிடைப்பதுதான் யோகர்ட்.

யோகர்ட்: தயிர் அப்படியில்லை.. பாலை நேரடியாகவே புளிக்க வைத்துவிடுகிறோம்.. ஆனால், தயிரை விட யோகர்ட் அதிக ஊட்டச்சத்து நிரம்பியது.. இரண்டிலுமே புரதங்களின் அளவு மாறுபடும்.. அதாவது, ஒரு கப் தயிரில் 3 முதல் 4 கிராம் வரையில் மட்டுமே புரதம் கிடைக்கும் என்றால், ஒரு கப் யோகர்ட்டில் 8 முதல் 10 கிராம் வரையில் புரதம் கிடைக்குமாம்..
இத்தனை புரதங்கள் நிறைந்திருப்பதால்தான், உடல் எடை குறைய முயற்சிப்பவர்கள், யோகர்ட்டை தேர்ந்தெடுக்கிறார்கள்.. வைட்டமின்கள் + தாதுக்கள் + + கால்சியம் + பொட்டாசியம் + பாஸ்பரஸ் போன்றவை நிறைந்துள்ளன. இதனால் பசி அதிக நேரம் எடுக்காது.. குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை ஊக்குவித்து உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்கிறது.
வெயிட் லாஸ்: அதேபோல, உடல் எடையை குறைப்பதற்கான, அமினோ அமிலங்கள் இந்த யோகர்ட்டில் நிறையவே உள்ளது, கூடுதல் பலனை தருகிறது.. அப்படி எடை குறைக்க நினைப்பவர்கள், குறைவான கொழுப்புள்ள பாலில், யோகர்ட் செய்து சாப்பிடவேண்டும். காரணம், பாலுக்கு பால், கொழுப்பு அளவுகள் மாறுபடக்கூடும்.

குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டிருப்பதால், சர்க்கரை நோயாளிகள், யோகர்ட் தாராளமாக பயன்படுத்தலாம். நீரிழிவு நோயாளிகள் கடையிலிருந்து யோகர்ட் வாங்குவதைவிட, வீட்டிலேயே தயாரித்தால், ரத்த சர்க்கரை அளவை சீராக்க முடியும்.. இது டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது என்கிறார்கள்.
ரத்த அழுத்தம்: ரத்த அழுத்தம் பிரச்சனைக்கும் யோகர்ட் தீர்வு தருகிறது.. தினமும் யோகர்ட் சாப்பிட்டு வருபவர்களுக்கு, ரத்த அழுத்தம் நல்ல நிலையில் பராமரிக்கப்படுவதாகவும், ரத்த அழுத்தத்தை இந்த யோகர்ட் குறைப்பதாகவும், 2021ல் தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வுஒன்றில் நிரூபித்துள்ளனர்.
இதிலுள்ள கால்சியம் எலும்புகள், பற்களை வலுவாக்குகிறது.. யோகர்ட்டில் லினோலிக் என்ற கொழுப்பு அமிலமானது, புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கிறது. சளி, காய்ச்சல் இருந்தாலும் சரி, சுவாச பிரச்சனைகள் இருந்தாலும் அவைகளுக்கு எதிராக இந்த யோகர்ட் போராடுகிறது. இந்த யோகர்ட்டில் புரோபயாட்டிக்குகள் உள்ளதால், பதற்றம், டென்ஷன், மன அழுத்தம், மனச்சோர்வு போன்றவற்றை குறைக்க செய்கிறது.
வயிறு உப்பசம்: யோகர்ட் சாப்பிட்டு வருபவர்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதில்லை.. வாயுத்தொல்லை, வயிற்று உப்புசம், வயிற்றுப்போக்கு இப்படி மொத்த கோளாறையும் தீர்த்து, குடல் இயக்கத்தை வளப்படுத்துகிறது.
இந்த யோகர்ட் உடலிலுள்ள நுண்ணியிர்களை அதிகரிக்க கூடியது.. குடலில் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவக்கூடியது.. இரைப்பை குடல் நோய்த்தொற்றுகள் நம்மை அண்டவிடாமல் இந்த யோகர்ட் தடுத்து விடுகிறது.. பால், தயிர் என அலர்ஜி இருப்பவர்களும், இந்த யோகர்ட்டை சாப்பிடலாம்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications