வாழை தண்டு துண்டு போதுமே.. ஒரு டம்ளர் தண்டு ஜூஸில் மொத்த நோயும் ஓடும்.. இதை மட்டும் சேர்த்துக்குங்க
சென்னை: ஒரு டம்ளர் வாழைத்தண்டு ஜூஸ், வெறும் வயிற்றில் குடித்து வந்தால், என்னென்ன அதிசயங்கள் நம்முடைய உடலில் நடக்கும் தெரியுமா? வாழைத்தண்டு சாறில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா?
வைட்டமின் A, C உட்பட ஏகப்பட்டு சத்துக்கள் உள்ளதால், வாழைத்தண்டுகள் நம்முடைய தோலுக்கு சிறந்த பாதுகாப்பை தருகிறது.. இருமல், சளி, தொண்டை வலி, காதுவலி, கர்ப்பப்பை நோய்கள், மஞ்சள் காமாலை, விஷக்கடிகளால் ஏற்படும் வலிகள் போன்ற அத்தனை பிரச்சனைகளுக்கும் நிவாரணத்தை தருகிறது வாழைத்தண்டு ஜுஸ்.

உயர் ரத்த அழுத்தம்: உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு சிறந்த மருந்து இந்த ஜூஸ்.. இதனால், ரத்த அழுத்த பிரச்சனையால் உண்டாகும் மோசமான விளைவுகளை தடுக்க முடியும். ரத்த விருத்தியை அதிகரிக்க செய்து, அனீமியாவை விரட்டியடிக்கிறது.. அத்துடன் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது..
காரணம், இந்த தண்டில் B6 வைட்டமின் நிறைந்துள்ளதால், இரும்புச்சத்தினை கூட்டுகிறது.
அதேபோல, வயிற்றில் பலருக்கு அமிலம் சுரந்து எரிச்சலை தந்துவிடும். அத்தகைய அமிலத்தன்மைகளை இந்த வாழைத்தண்டு சாறு கட்டுப்படுத்திவிடும்..
நீரிழிவு நோயாளிகளின் நண்பன் இந்த தண்டு.. இன்சுலின் அளவுகளையும், ரத்த சர்க்கரையின் அளவுகளையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.. அதனால், நீரிழிவு நோயாளிகள் வாழைத்தண்டு ஜூஸ் குடிக்கும்போது, வடிகட்டாமல் குடிக்கலாம்...
சர்க்கரை நோய்: சர்க்கரை மட்டுமல்லாமல், மற்றும் கொழுப்பு உடனடியாக ரத்தத்தில் கலப்பதையும் இந்த தண்டுகள் நிறுத்துகின்றன.. கொழுப்பையும் உடலில் இருந்து நீக்க உதவுகிறது.. வயிறு சம்பந்தமான உபாதைகள் இருந்தாலும், நெஞ்செரிச்சல் அதிகமாய் இருந்தாலும் சரி, அதற்கும் இந்த வாழைத்தண்டு ஜூஸ் நிவாரணம் தருகிறது.
சிறுநீரகத்தில் கல் இருப்பவர்களுக்கு வாழைத்தண்டு போன்ற தீர்வு எதுவும் கிடையாது.. இந்த சாறுடன், சிறிதளவு ஏலக்காயும் சேர்த்து குடித்து வந்தால், கற்கள் உடைந்து வெளியேறுவதுடன், சிறுநீரகங்களுக்கும் ஆரோக்கியம் கிடைக்கும். அல்லது வாழைத்தண்டு ஜூஸுடன் சிறிது எலுமிச்சம் சாறு சேர்த்து குடித்தாலும் பலன்தரும்.. மொத்தத்தில், சிறுநீரக பாதை தொற்றினால் ஏற்படும் வலியை குறைக்கிறது இந்த தண்டு சாறு.
நார்ச்சத்துக்கள்: நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள இந்த சாறு, உடல் பருமனை குறைக்கிறது.. ஒன்று அல்லது இரண்டு கப் ஜூஸ் குடித்தாலே வயிறு நிரம்பிவிடும்.. குடலில் சிறு சிறு முடி, அல்லது நஞ்சு இருந்தாலும் வெளியேறிவிடும்.. வயிற்றில் நீர்க்கட்டிகள் இருந்தாலும் அவைகயும் இந்த சாறு வெளியேற்றிவிடும்.
வெறும் வாழைத்தண்டை சாறு போல குடிக்க கஷ்டமாக இருந்தால், மோர், ஆப்பிள், எலுமிச்சம் போன்றவற்றுடன் சேர்த்து குடிக்கலாம்.. அல்லது சிறிது இஞ்சியை இந்த ஜூஸுடன் சேர்த்து குடித்தால், வயிற்றிலுள்ள கொழுப்பு குறைந்துவிடும்.. செரிமானமும் சீராகும்.. அதேபோல, கல்லீரல் பலம் பெற வேண்டுமானால், இந்த வாழைத்தண்டை காயவைத்து, தூள் செய்து, அதை தேனுடன் கலந்து சாப்பிடுவார்கள். இதனால், கல்லீரல் வலுவடைவதுடன், மஞ்சள் காமாலை நோயும் குணமாகும்..
இந்த தண்டு சிறுநீரை அதிகரிக்க செய்யும் என்பதால், வயதானவர்கள் மட்டும் வாழைத்தண்டை உணவில் , குறைவாக சேர்த்து கொள்ளலாம் என்கிறார்கள்.. எப்படி பார்த்தாலும், வாழைத்தண்டு யாரையும் வாழவே வைக்கும்..!!
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications