Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துத்தியிலை.. துரத்தி துரத்தி நோயை விரட்டும் துரத்திக்கீரை.. "அந்த" பிரச்சனையை தீர்க்கும் துத்தியிலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: அனைத்து கீரைகளுமே, உடலுக்கு நன்மை தரக்கூடியது என்றாலும், துத்திக்கீரையின் மகத்துவம் பலருக்கு தெரியாமலேயே உள்ளது. முக்கியமாக பெண்கள் தவிர்க்கவே கூடாத கீரையில் இந்த துத்திக்கீரையும் ஒன்று. பெண்களுக்கு எந்தெந்த வழிகளில் இந்த கீரை உதவுகிறது தெரியுமா?

துத்திக்கீரையை மற்ற கீரைகளை போலவே சமைக்கலாம். பாசிபருப்பு, சின்னவெங்காயம், சீரகம், உப்பு சேர்த்து கூட்டுபோல செய்து சாப்பிட்டால், ருசியாக இருக்கும்.. குளிர்ச்சியை தரக்கூடிய கீரை என்பதால், உடல் உஷ்ணத்தால் ஏற்படும் பல்வேறு கோளாறுகளை இந்த கீரை தீர்க்கிறது.

Do you know the Amazing Health Benefits in Thuthi Keerai and Thuthi Leaves are the Excellent Medicine for women

மூலநோய்: குறிப்பாக, இந்த கீரையை, மூலநோய்க்கு மருந்தாக பயன்படுத்தி தீர்வு காண்கிறார்கள்... மருந்தாக இல்லாவிட்டாலும், வாரத்துக்கு ஒருமுறை, இந்த கீரையை அரைத்து வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் குடித்தாலே, மூலநோய் குணமாகும் என்கிறார்கள்.

இதைத்தவிர, சிறுநீர் எரிச்சலை தணிக்கிறது.. வாயு வியாதிகளை அகற்றுகிறது.. வாய்ப்புண், குடல்புண்களை ஆற்றுகிறது.. உடலில் கட்டிகள், புண்கள் இருந்தால் அதையும் ஆற்றுகிறது. இதற்கு அரிசி மாவுடன் துத்தி இலை சாற்றை கலந்து கட்டினாலே போதும்.. பசும்பாலுடன் இந்த துத்திஇலையை பொடி செய்து சாப்பிட்டாலே உடல் குளிர்ச்சி பெறும்..

வாய், பற்கள், இரைப்பை முதல் பெருங்குடல், ஆசனவாய் வரை ஏற்படும் புண்கள் வலிகள், எரிச்சல்களை நீக்கக்கூடியது. அரிசி மாவுடன் துத்தி இலை சாற்றையும் கலந்து, உடலிலுள்ள கட்டிகள் மீது பூசினால், அவை பழுத்து உடைந்து குணமாகும்

கோளாறுகள்: அதேசமயம், பெண்களுக்கு இந்த கீரையை வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.. கருப்பை கோளாறுகளை ஆரம்பத்திலேயே தீர்க்கக்கூடிய சக்தி இந்த கீரைக்கு உண்டு.. மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலியும், அதிக உதிரப்போக்கும் இருந்தால், இந்த கீரையை சமைத்து சாப்பிட்டாலே போதும்.

ஒரு கைப்பிடி அளவுக்கு துத்தி இலையை சுத்தம் செய்து, நன்றாக அலசி, தண்ணீர் விட்டு அரைத்து, அதிலிருந்து சாறு எடுத்து கொள்ள வேண்டும். இதில், சுட்டு கரியாக்கிய வசம்பு கரியை சிறிது சேர்த்து வெறும் வயிற்றில் 3 நாள் குடித்து வந்தாலே மாதவிலக்கு வலிகள் நீங்கும்.

அதேபோல, வெள்ளைப்படுதல் பிரச்சனையை, முழுமையாக தீர்க்கவும் இந்த கீரைதான் உதவுகிறது. வெள்ளைப்படுதலை ஆரம்பக்கட்டத்திலேயே சரி செய்யாவிட்டால், மிகத்தீவிரமாகி பல தொந்தரவுகளை தந்துவிடும்.

எப்படி சாப்பிடலாம்: இதுபோன்ற பாதிப்புள்ளவர்கள், வாரம் ஒருமுறையாவது துத்திக்கீரையை பசும்நெய்யும் வதக்கி சமைத்து சாப்பிட்டாலே போதும். அல்லது, இந்த துத்தி இலையை சுத்தம் செய்து, கழுவி, நெய்யில் வதக்கி சுடுசாதத்தில் பிசைந்து சாப்பிட்டாலும், பெண்களுக்கு இந்த வெள்ளைப்படுதல் பிரச்சனை நீங்கும்.

அல்லது, இந்த கீரை விதையின் பொடியை, வெதுவெதுப்பான நீரில் குடித்து வந்தாலும் நிவாரணம் கிடைக்கும்.. அல்லது பாசிப்பருப்பு வேகவைத்து துத்தி இலைகளை சேர்த்து நெய் சேர்த்து வதக்கி சாதத்தில் கலந்து, 48 நாட்கள் சாப்பிட்டு வந்தாலும் வெள்ளைப்படுதல் கட்டுக்குள் வரும்..

Do you know the Amazing Health Benefits in Thuthi Keerai and Thuthi Leaves are the Excellent Medicine for women

ஆண்மை குறைபாடு: துத்திப் பூவை ஒரு கைப்பிடி எடுத்து, பசும்பாலுடன் சேர்த்து காய்ச்சி வடிகட்டி, பனங்கற்கண்டு கலந்து குடித்து வந்தால், உடலில் வெப்பம் தணிந்து ஆண்மை குறைபாடு நீங்கும்.. தாது விருத்தியும், விந்து உற்பத்தித்திறனும் அதிகரிக்கும் என்பார்கள்.. அல்லது இந்த கீரையிலிருந்து சாறு எடுத்து, ஒரு கிளாஸ் மோருடன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தாலும் விந்து குறைபாடு சீராகும்.

துத்தி செடியின் இலை, பூ, காய், வேர், இப்படி அனைத்தையுமே பறித்து, சுத்தம் செய்து, கஷாயம் போல வைத்து குடித்து வந்தாலும் ஆண்மை அதிகரிக்கும்.. அந்தவகையில், ஆண்கள், பெண்கள் என இரு தரப்புக்குமே எண்ணற்ற ஆரோக்கியத்தை இந்த கீரை வழங்குவதால், மருத்துவரின் முறையான ஆலோசனையை பெற்று, பலன் பெறலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+