தொள தொள தொப்பை கரையணுமா? பொல பொல ஊளைச்சதை குறையணுமா? அப்ப "இந்த" அரிசி பெஸ்ட்.. இப்படி சாப்பிடுங்க
சென்னை: உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் அரிசி உணவை சாப்பிடலாமா? சாப்பிடலாமாம்.. அதுவும், உடல் எடையை குறைக்கவே இந்த குறிப்பிட்ட அரிசியை சாப்பிடலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
இந்த கருப்பு கவுனி அரிசி, நம்முடைய நாட்டை சேர்ந்த உணவு கிடையாது.. இதற்கு பூர்வீகமே அமெரிக்காதான்.. அங்கிருந்து கொண்டுவரப்ப,டடு, இந்தியாவில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் விளைவிக்கிறார்கள்.

கருப்பு கவுனி: கருமை நிறம் கொண்ட இந்த அரிசியில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியும்? இந்த அரிசியில் நார்ச்சத்தும், ஊட்டச்சத்தும் அதிகமாக உள்ளன.. இயற்கையாகவே ஆக்ஸிஜனேற்ற பண்பு உள்ளன.. இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், தாமிரம் போன்ற சத்துக்கள் உள்ளன. B வைட்டமின்கள், மெக்னீசியம் அதிகளவில் உள்ளன.
கருப்பு கவுனி சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தி, நீரிழிவு பிரச்சனையில் இருந்தும் விடுபட உதவும்.. செரிமானப் பிரச்னைகள், வாயு சம்பந்தப்பட்ட பிரச்சனை, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சீராகும். இதயம் தொடர்பான அபாயங்கள் நீங்கும்... இன்னும் சொல்லப்போனால், கருப்பு கவுனி சாப்பிட்டு வந்தால், இதயம் பலமடையக்கூடும்.. ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி, இதய பாதிப்புகளை தரும் பிரச்சனையும் விலகும்.
சத்துக்கள்: இந்த அரிசியிலுள்ள அந்தோசயனின் சத்துக்கள், ஆஸ்துமா நோயாளிகளுக்கு நல்லது.. காரணம், நுரையீரலில் அதிகளவு சளி உற்பத்தி ஆகாமல் தடுத்து, அவர்களுக்கு நிவாரணம் தருகின்றன.. இந்த அரிசியில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராட தூண்டுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரித்து தருகிறது.
இந்த அரிசி உடல் எடையை குறைப்பதிலும் பெரும் பங்கு வகிக்கிறது.. இதன்மூலம், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம்... கெட்ட கொலஸ்ட்ரால் கொழுப்பின் அளவை குறைக்க பெரிதும் துணைபுரிகிறது.. கொலஸ்ட்ரால் அளவையும் குறைத்து, பக்கவாதம் வராமலும் தடுக்கிறது.
அரிசி உணவு: ஆனால், இந்த அரிசியினை அதிக அளவில் சாப்பிடக்கூடாது. சரியான அளவு சாப்பிட்டால் மட்டுமே போதுமான பலன் கிடைக்கும். காரணம், அதிக நார்ச்சத்து உள்ளதால், சிறிய அளவே எடுத்துக் கொள்ள வேண்டுமாம். ஒருவேளை சாப்பிட்டாலும் வயிறு நிறைவாக இருக்கும், பசி எடுக்காது.. அதேபோல், 12 மணி நேரமாவது அரிசியை ஊறவைத்து சமைத்து சாப்பிட வேண்டுமாம்.
அதேபோல, எடை இழப்புக்கு ஏற்ற அரிசி என்றால் அது பிரவுன் அரிசி தான் என்கிறார்கள் நிபுணர்கள்.. மதியம் அல்லது இரவு நேரத்தில் பிரவுன் அரிசியை சாப்பிட்டு வந்தாலே கலோரிகள் குறைகிறதாம், கொழுப்புகளும் கரைகிறதாம்.. இது பல ஆராய்ச்சிகளின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த பிரவுன் அரிசியில் ஊட்டச்சத்துக்களுடன், நார்ச்சத்து, Bவைட்டமின்கள், துத்தநாகம், மெக்னீசியம் நிறைந்துள்ளதால், எடை இழப்புக்கு உதவுகிறது.. செரிமானத்தை தருகிறது.
அரிசி கஞ்சி: எனவே, தொப்பையை குறைக்க நினைப்பவர்கள் மதிய நேரத்தில், உப்பு சேர்க்காத பிரவுன் அரிசியை சாப்பிட்டு வரலாம்.. அதே போல் காலை நேரத்தில் இதை கஞ்சியாக கரைத்து குடிக்கலாம்.. இப்படி குடிப்பதால், அடிவயிற்றின் கீழ் சேரும் கொழுப்புகளை கரைக்க முடியும்.. அத்துடன், தொப்பை விழுவதையும் முன்கூட்டியே தடுத்துவிடவும் முடியும்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications