வெண்ணெய்ப்பழம்.. தினமும் 1 அவகோடா சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா? ஆச்சரியம் கிளப்பும் வெண்ணெய் பழம்
சென்னை: பழங்கள் அனைத்துமே உடலுக்கு நன்மை தரக்கூடியவை என்றாலும், இதயத்தை காக்கக்கூடிய பழமாக வெண்ணெய்ப்பழம் திகழ்கிறது. இதற்கு என்ன காரணம் தெரியுமா?
அவகேடா அல்லது அவகோடா அல்லது வெண்ணெய்ப்பழத்தில் மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் C, K1, B6, கார்போஹைட்ரேட்டுகள், புரதம், தாது உப்புக்கள், நல்ல கொழுப்புக்கள் நிறைந்துள்ளன..

நார்ச்சத்து: நார்ச்சத்து நிறைந்த இந்த பழம், உடல் கழிவுகளை அகற்றுகிறது.. கெட்ட கொழுப்பை குறைப்பதில் இந்த பழத்திற்கு பெரும்பங்கு உண்டு. அதனால், உடல் எடை குறைய வேண்டுமென்றால், இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம்.
ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த பழம் என்பதால், புற்றுநோய்கள் எளிதில் நம்மை அண்டாது.. நோய் எதிர்ப்பு சக்திகளும் பெருகும்.. சிறுநீரக பிரச்சனைகள் வராமல் தடுப்பதிலும் வெண்ணெய்ப்பழங்கள் உதவுகின்றன. ஆர்த்ரிடிஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த பழம், ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். காரணம், இதிலுள்ள சேர்மங்கள் ஆர்த்ரிடிஸ் வலி மற்றும் இதர எலும்பு பிரச்சனைகளை சரிசெய்கிறதாம்.
கண்பார்வை: வெண்ணெய்ப்பழத்திலுள்ள சேர்மங்கள் ஆர்த்ரிடிஸ் வலி மற்றும் இதர எலும்பு பிரச்னைகளை சரிசெய்வதாக ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.. கண்களின் பார்வை திறன், புரை வளர்தல் போன்றவைகளை கட்டுப்படுத்தப்படுத்த இந்த வெண்ணெய்ப்பழங்கள் உதவுகின்றன. வாழைப்பழத்தை விட அதிக பொட்டாசியம், வெண்ணெய்ப்பழத்தில் உள்ளதால், ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த பழம் நன்மை புரிகிறது.
கர்ப்பிணிகளுக்கு இந்த பழம் மிகவும் நல்லது.. வயிற்றிலுள்ள குழந்தைக்கும் தேவையான அனைத்து சத்துக்களும் இந்த வெண்ணெய்ப்பழத்தில் நிறைந்துள்ளதால், இதை சாப்பிடும்போது, குழந்தைகளின் முழு வளர்ச்சிக்கு தூண்டுகோலாகிறது.. மேலும், கருமுட்டை வளர்ச்சி குறைவாக இருந்தாலும், இந்த பழத்தை மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று சாப்பிடலாம்.
மூலப்பொருட்கள்: நிறைய ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஒளிந்திருப்பதால், இந்த பழம், சருமத்தையும் மிகச்சிறந்த முறையில் காக்கின்றன.. அதனால்தான், ஃபேஸ் கிரீம் தயாரிப்புகளில் வெண்ணெய்ப்பழம் மூலப்பொருளாக சேர்க்கப்படுகிறது.
இவ்வளவு நன்மைகளை தரும் வெண்ணெய்ப்பழம், இதயத்தை காக்கும் அற்புதமான வேலையை செய்கிறது.. சமீபத்தில் அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் ஜர்னலில் இதுகுறித்த ஆய்வு வெளியாகியிருந்தது. அதன்படி, ஒவ்வொரு வாரமும் வெண்ணெய்ப்பழத்தை 2 முறை சாப்பிட்டு வந்தால், கரோனரி இதய நோய் ஏற்படுவதை 21 சதவீதம் குறைக்கும் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆய்வுகள்: அதேபோல, ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, வெண்ணெய்ப்பழத்தில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து மற்றும் தாவர ஸ்டெரால்கள் நிறைந்துள்ளதால், அவை கொழுப்பைக் குறைப்பதாகவும், குறைந்த கொழுப்புள்ள உணவில் வெண்ணெய் பழத்தை சேர்த்துக்கொள்வது நல்லது என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த பழத்தில், நார்ச்சத்து மட்டுமல்லாது நிறைவுறா மோனோசாச்சுரேட்டட் வகை நல்ல கொழுப்புகள் உள்ளதாலும், பீட்டா சிட்டோஸ்டெரால் இருப்பதினாலும், இதயம் சம்பந்தமான நோய்களுக்கு தீர்வாக உள்ளது.. இதய செயல்பாடுகளுக்கும் ஆதரவு அளிக்கிறது. மொத்தத்தில், இப்பழத்திலிருக்கும் வைட்டமின் B சத்துக்கள், இதய நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கக்கூடிய ஹோமோசிஸ்டின் அளவுகளை குறைப்பதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications