வெள்ளைப்படுதல்.. மூட்டு வலி போக்கும் கோழிக்கறி.. இனி சிக்கன் எடுத்தால் இப்படி செய்யுங்க! செம பலன்கள்
சென்னை: கோழிக்கறியை இன்று பெரும்பாலானோரால் தவிர்க்க முடியவில்லை.. விலை குறைவு என்பதுடன், சத்துக்களும் இந்த கோழிக்கறியில் அதிகம் என்பதை மறுக்க முடியாது.
கோழிக்கறியில் மிக முக்கியமான சத்தானது புரதம்தான்.. ஆஸ்டியோபோரோசிஸ் என்ற எலும்பு தொடர்பான பிரச்சனையை தடுத்து, ஆரோக்கியமான, வலுவான எலும்புகளை பராமரிக்க இது உதவுகிறது.

சிக்கன்: வளரும் பிள்ளைகளுக்கு சிக்கனை தாராளமாக தர சொல்கிறார்கள்.. இதற்கு காரணம், சிக்கனிலுள்ள வைட்டமின் B12 நினைவாற்றல் மேம்பாட்டிற்கு உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதுமட்டுமல்ல, கோழிக்கறியில் உள்ள அமினோ ஆசிட், குழந்தைகளின் வளர்ச்சிக்கு அதாவது, அவர்கள் உயரமாகவும், வலுவாகவும் வளர பெரிதும் துணைபுரிகிறது..
சிக்கனை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு ஹீமோகுளோபின் பிரச்சனை நெருங்குவதில்லை.. மேலும் புத்துணர்ச்சியை தருகிறது சிக்கன்.. அதேபோல, சிக்கனில் உள்ள ஜிங்க் சத்துக்கள், பசியை தூண்டக்கூடியது. அதனால்தான், ஓட்டல்களில், சாப்பிடுவதற்கு முன்பு, சிக்கன் சூப் பரிமாறப்படுகிறது. சரியாக பசி எடுக்காத குழந்தைகளுக்கு சிக்கனில் சூப் வைத்து தரலாம்..
கொலஸ்ட்ரால்: சிக்கனில் கொலஸ்ட்ரால் இருந்தாலும், இதில் நியாசின் சத்தும் இருப்பதால், சிக்கனிலுள்ள கொலஸ்ட்ரைலை இது குறைக்கிறது. எனவே, உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களும் சிக்கனை சாப்பிடலாம்.
ஆனால், எண்ணெய்யில் பொரித்து சாப்பிடாமல், வெறும் உப்பு போட்டு வேக வைத்து சாப்பிட்டால், அத்தனை சத்துக்களும் உடலுக்கு கிடைக்குமாம்.. இதயத்துக்கும் ஆரோக்கியம் கிடைக்கும். இதனால் மாரடைப்பு ஏற்படுவதை சிக்கன் வெகுவாக தடுக்கிறதாம், இதற்கு இன்னொரு காரணம், சிக்கனில் வைட்டமின் B6 உள்ளது.. தேவையற்ற கொழுப்புகளின் தேக்கத்தை சிக்கன் குறைப்பதுடன், புற்றுநோய் அபாயத்தையும் சிக்கன் குறைக்கிறது.. குறிப்பாக பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எலும்பு தேய்மானம்: பெண்களுக்கு எலும்பு தேய்மானம், மூட்டு வலி பிரச்சனைகளை வரவிடாமல் தடுப்பதில், கோழிக்கறிக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.. அதுமட்டுமல்ல சிக்கனில் உள்ள மக்னீசியம், மாதவிடாய் சுழற்சியின்போது ஏற்படும் வயிறு வலி, மன அழுத்தத்தை விடுவிக்கிறதாம். பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களின் டெஸ்ட்ரோஜன் அளவையும் சீராக வைத்திருக்க கோழிக்கறிகள் உதவுகின்றன.
பெண்களின் ஆரோக்கியமான கருவுறதல் செயல்பாடுகளுக்கும், ஆண்களின் தரமான விந்து உற்பத்திக்கு கோழிக்கறிகள் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.. எனவே திருமணமான தம்பதிகள், கோழிக்கறியை தயக்கமின்றி எடுத்து கொள்ளலாம்.
கோழி கறி: குறைந்த விலையில், அதிக புரோட்டீன் நிறைந்த சிக்கனை, குறிப்பிட்ட அளவில் நன்றாக வேகவைத்து சாப்பிடும்போது, ஆரோக்கியம் கூடுகிறது. 100 கிராம் கோழி மார்பகத்தின் 124 கிலோ கலோரி, 20 கிராம் புரதம் மற்றும் 3 கிராம் கொழுப்பு உள்ளதாம். அதனால், 65-75 கிலோ எடையுள்ள சராசரி நபர்கள், ஒரு நாளைக்கு சுமார் 200 கிராம் வரை சிக்கன் சாப்பிடலாம் என்கிறார்கள் உணவு நிபுணர்கள்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications