துண்டு தேங்காயில் ஆச்சரியம்.. பச்சை தேங்காய் சாப்பிடலாமா? இத்தனை நாளா இது தெரியாம போச்சே.. சூப்பர்
சென்னை: தேங்காய்கள் உடலுக்கு நல்லதா? கெட்டதா? பச்சை தேங்காயை சாப்பிடலாமா? துண்டு தேங்காயை சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்னென்ன தெரியுமா?
கார்போ ஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின் C, B காம்ப்ளக்ஸ், நார்ச்சத்து, சர்க்கரை, கொழுப்பு, லாரிக் அமிலம், காப்ரிக் அமிலங்கள், மாங்கனீசு, இரும்பு, தாமிரம், மற்றும் மெக்னீசியம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் இந்த தேங்காயில் நிறைந்துள்ளன..

சத்துக்கள்: தேங்காய் சாப்பிடுவது நல்லதா? கெடுதியா? என்ற சந்தேகம் இருந்து கொண்டே வருகிறது.. இந்த தேங்காயில் கொழுப்பு ஹைப்பர் லிப்பிடிமியா நிரம்பியிருப்பதால், தேங்காய் சாப்பிட்டால் மாரடைப்பு வந்துவிடும் என்பார்கள். ஆனால், தேங்காயிலுள்ள சேச்சுரட்டேடு கொழுப்பு அமிலங்கள் ஆத்ரோஜெனிக் வடிவமானவை... எனவே, கொழுப்புகள் அதிகமாக உடலில் தங்குவதில்லை.. கொலஸ்ட்ரால் தொந்தரவும் ஏற்படாது.
அதுமட்டுமல்ல, தேங்காயிலுள்ள கொழுப்புகள், கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க செய்பவை என்பதால், உடல் எடையை குறைக்க தேங்காய் சிறந்த தேர்வு ஆகும்.
சர்க்கரை நோயாளிகள்: இதிலுள்ள அதிக நார்ச்சத்துக்கள் ரத்த சர்க்கரை அதிகரிப்பதை தடுக்கிறது.. நோய் தொற்றுக்கு எதிராக செயல்படுகிறது.. எனவே, சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டு வரும்போது, ரத்த சர்க்கரை அளவு பராமரிக்கப்படும்.. ஆனால், நீரிழிவு நோயாளிகள், பச்சை தேங்காயை சாப்பிடுவதற்கு பதில், சட்னியாகவோ, பொரியல்களை துருவிப்போட்டு சாப்பிடலாம்.
அதேபோல, தேங்காய் பால் போல் அல்லாமல், தேங்காய் வடிவிலேயே பயன்படுத்தினால், இன்சுலின் அளவு அதிகரிக்கும்.. கணையத்தில் இன்சுலின் அளவை அதிகமாக சுரக்க வைத்து ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கும் தன்மை இந்த தேங்காய்களுக்கு உண்டு.
உடல் எடை குறைப்பு: சர்க்கரை நோயாளிகளும் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களும் வாரத்துக்கு ஒருநாள் மட்டும் தேங்காய்ப்பால் சேர்த்துக்கொள்ளலாம்.
சரும சுருக்கத்தை நீக்கி, முதுமையை தள்ளி போடும் சக்தி இந்த தேங்காய்களுக்கு உண்டு.. அதேபோல, தேங்காயில் உள்ள அதிக புரோட்டீனும், செலினியமும் தலைமுடி வளர்ச்சிக்கு உதவியாக அமைகிறது.
தேங்காய்கள்: ஹீமோகுளோபின் பிரச்சனையை விரட்டி, ரத்தத்தின் சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்க செய்கின்றன இந்த தேங்காய்கள். அதனால்தான், கர்ப்பிணிகளையும், பாலூட்டும் தாய்மார்களையும் தேங்காய்பூக்களை நிறைய சாப்பிட சொல்கிறார்கள். இதனால், தாய்ப்பால் அதிகமாக சுரப்பதுடன், கர்ப்பப்பையில் உள்ள கழிவுகளும் நீங்கும்..
ஒரு துண்டு பச்சை தேங்காயை சாப்பிடுவதால் பல நன்மைகள் நமக்கு கிடைகின்றன.. உடலிலுள்ள உஷ்ணத்தை நீக்கும் தன்மை இந்த தேங்காய்க்கு உண்டு.. பச்சையாக தேங்காய் சாப்பிட்டாலே உடலிலுள்ள சிவப்பணுக்கள் அதிகரிக்கும்..
உடல் உஷ்ணம்: சிறுநீர் தொற்று இருந்தாலும், நீங்கிவிடும். நார்ச்சத்து நிறைந்துள்ளதால்,மலச்சிக்கல் பிரச்சனையை தேங்காய்கள் தீர்க்கின்றன. உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்கிறது. குடல் சம்பந்தமான பிரச்சனைகள் உள்ளவர்கள் மட்டும், பச்சையாக தேங்காயை சாப்பிடுவதை தவிர்க்கலாம்
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications