புதுமாப்பிள்ளையாக போறீங்களா? இளவட்ட கல்லை தூக்கினாதான் பொண்ணுனு சொல்றாங்களா? கவலையை விடுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமணமாக போகும் மாப்பிள்ளைகள் அவசியம் சாப்பிட வேண்டிய அரிசிதான் மாப்பிள்ளை சம்பா. இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.

பாரம்பரிய நெல் ரகங்கள் 20ஆயிரத்திற்கும் மேற்பட்டவை இருக்கின்றன. ஆனால் இவற்றில் சில ரகங்களை காணவில்லை. தற்போது வெறும் 200 நெல் ரகங்கள் மட்டுமே உள்ளன.

இவற்றில் சீரக சம்பா, காட்டு பொன்னி, பாசுமதி, கிச்சிலி சம்பா, ஐஆர் 20, ஐஆர் 8 என நெல் ரகங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இந்த பாரம்பரிய அரிசிகள் பாலிஷ் செய்யப்பட்ட அரிசியை காட்டிலும் அதிக நலன்களை கொடுக்கின்றன. இவற்றில் முக்கியமானது மாப்பிள்ளை சம்பா அரிசியாகும்.

Do you know the amazing health benefits of Mapillai Samba rice?

இந்த அரிசி பெயருக்கு ஏற்ப விரைவில் திருமணம் செய்து கொள்ளும் ஆண்களுக்கு உகந்தது. சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த அரிசியில் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை உள்ளன. இந்த அரிசியின் சிறப்பு என்னவென்றால் ஆண்மையை பலப்படுத்தும். ஆண்மை குறைபாடு பிரச்சினையை நீக்கும். தினமும் இந்த அரிசியால் செய்யப்பட்ட சாதத்தை சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு நீங்கும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளது. நீரிழிவு வந்துவிட்டாலே கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஆனால் இந்த அரிசியை நாம் சாப்பிடுவதால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த அரிசி உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும். இதன் சிவப்பு நிறத்தில் இருந்துதான் புற்றுநோய்க்கு மருந்து தயாரிக்கிறார்கள்.

இந்த அரிசியை சாப்பிட்டால் இளவட்ட கல்லை கூட தூக்கி போடும் பலத்தை கொடுக்கும் என்கிறார்கள். விந்தணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கும் சக்தி கிடைக்கும். மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும். இந்த அரிசி வயிற்று வலி, வயிற்றுப்புண்ணை ஆற்றும் குணம் கொண்டது. இந்த அரிசி தாம்பத்ய குறைபாடுகளையும் நீக்கும்.

இந்த அரிசியின் சிவப்பு நிறத்தில் அதிகப்படியான இரும்பு மற்றும் துத்தநாகம் இருப்பதால் இவை ரத்தத்தில் சிவப்பு அணுக்களையும் மயோகுளோபினையும் உற்பத்தி செய்யும். சிறுநீரகத்தை வலுப்படுத்தும். உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும். குழந்தைகளுக்கு இந்த அரிசியினால் செய்யப்பட்ட உணவுகளை கொடுக்கலாம். குறைந்தபட்சம் இந்த அரிசியை கஞ்சியாக எடுத்துக் கொள்ளலாம். இந்த அரிசியை சாதமாக வடித்து சாப்பிடலாம்.
இல்லாவிட்டால் பிரியாணி, சாம்பார் சாதம் செய்யலாம். புட்டு கூட செய்து சாப்பிடலாம். இது போன்ற பாரம்பரியமான உடலுக்கு நன்மையை கொடுக்கும் அரிசியை நாம் பயன்படுத்துவோம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+