Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆரஞ்சு பழத்தை விடுங்க.. ஆரஞ்சு தோலை விட்றாதீங்க.. இதென்ன அதிசயமா இருக்கே? ஆரஞ்சு தோலில் இவ்ளோ நன்மையா

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆரஞ்சு பழத்தைவிட, ஆரஞ்சு தோலில் ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளதாம்.. இந்த தோலினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

ஆரஞ்சு பழத்தை எடுத்து கொண்டால், வைட்டமின் C, A, B6, ப்ரோடீன், நார்ச்சத்துக்கள், போலெட்ஸ், தையாமின், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.. முக்கியமாக ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ள பழம் என்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதில் இந்த பழத்துக்கு பெரும்பங்கு உண்ட.

Do you know the Amazing Health Benefits of Orange Peel and How beneficial is orange peel Powder for health

இந்த பழத்திலுள்ள வைட்டமின் C, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதால், புற்றுநோய் ஏற்படாமல் காக்க இந்த பழம் பேருதவி புரிகிறது.. தினமும் ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வந்தாலே, பெண்களுக்கு 50 சதவீதம் புற்றுநோய் வரும் ஆபத்து குறைகிறதாம்.

பொட்டாசியம்: ஆரஞ்சு பழத்தில் பொட்டாசியம் சத்துக்கள் அதிகமாக இருப்பதால், ரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.. முடி கொட்டுதலை தடுத்து நிறுத்துவதுடன், முடி வளரவும் வழி வகுக்கும்...

நார்ச்சத்து நிறைந்த இந்த ஆரஞ்சு பழம், செரிமானத்துக்கு தூண்டுகோலாகிறது.. குடலை சுத்தம் செய்கிறது.. கொழுப்பையும் குறைக்கிறது.. தேவையற்ற கலோரிகளையும் எரிக்கிறது. இதனால், உடல் எடை குறைப்பதில் ஆரஞ்சு பழம் தேவையாக இருக்கிறது.

ஆரஞ்சு ஜூஸ்: இதயத்திற்கு நன்மை தரக்கூடிய பழங்களில் ஆரஞ்சு மிக முக்கியமானது.. மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பயங்கர நோய்களை நெருங்க விடாமல் காக்கிறது.. உடல் சூடு, சிறுநீர்கடுப்பு, மூல வியாதி இப்படி உஷ்ண பிரச்சனைகளுக்கு ஆரஞ்சு பழம் கைகொடுக்கிறது.. சிறுநீர் கோளாறுகள் இருந்தாலும், இரவில் அரை டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் குடித்தாலே நிவாரணம் கிடைத்துவிடும்.

கர்ப்பிணிகளுக்கு ஆரஞ்சு ஜூஸ் மிகவும் நல்லது.. இதனால், கர்ப்பத்திலுள்ள குழந்தைகளும் தோல் ஆரோக்கியம், கண் பார்வை ஆரோக்கியம் பெறும்.. ஆரஞ்சு பழத்தில் இவ்வளவு நன்மைகள் ஆரஞ்சு தோலில் உள்ள நன்மைகள் என்னென்ன தெரியுமா?

உடல் எடை: உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், அதை கரைக்கவும் ஆரஞ்சு தோல் உதவுகிறதாம்.. வாந்தி, நெஞ்செரிச்சல், பித்தத்தை இந்த தோல் நீக்குகிறது.. செரிமானம் சிறப்பாக நடக்க உதவுகிறது.. பசியை தூண்டுகிறது..

ஆரஞ்சு தோலை காயவைத்து பொடி செய்து வைத்து கொண்டால், இருமல், உள்பட சுவாச கோளாறுகளின்போது பயன்படுத்தலாம். இந்த தோலில் பாலிபினால்கள் அதிகளவில் நிரம்பி உள்ளதால், தோல் புற்றுநோயை எதிர்த்து போராட உதவுகிறது.

நம்முடைய சருமத்துக்கு கவசம் இந்த ஆரஞ்சு பழம்தோல் என்று சொல்லலாம்.. பழத்தைவிட, ஆரஞ்சு தோலை, சருமத்துக்கு பயன்படுத்தினால் கூடுதல் பலன் கிடைக்குமாம்..

ஆரஞ்சு பழ தோல் : இறந்த செல்களை நீக்கி, சருமம் பளபளப்பாகவும், பொலிவாகவும் திகழ இந்த தோல் உதவி புரிகிறது. பருக்கள், மருக்கள், மங்குகள் இருந்தால், அதையும் இந்த ஆரஞ்சு பழ தோலை கொண்டே போக்கிவிடலாம். கண்களுக்கு கீழே கருவளையம் இருந்தாலும், சருமத்தில் சுருக்கம் இருந்தாலும், எண்ணெய் பசை இல்லாமலும் இந்த பழத்தோல் காக்கிறது.

ஆரஞ்சு பழ தோலை காயவைத்து, பொடி செய்து, உடலுக்கு பூசி குளித்து வந்தாலே, சருமம் ஆரோக்கியமாகும்.. அல்லது இந்த பொடியில் சிறிது தயிர் சேர்த்து முகத்துக்கும், கழுத்து, கைகளுக்கும் தேய்த்து வந்தால், பொலிவு கிடைக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+