ஆட்டுக்கறி குழம்பு செய்றீங்களா? ரத்தசோகையை ஓட்டும் மண்ணீரல்.. அட்டகாசமான மட்டன் சுவரொட்டி.. சூப்பர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண்களை பாதிக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று ரத்தசோகை.. அந்தவகையில், ஹீமோகுளோபின் பிரச்சனை தீர மட்டன் எந்தவகையில் உதவுகிறது தெரியுமா?

பொதுவாக, ஆண்களுக்கு ஹீமோகுளோபின் (Hb) அளவானது, 13 கிராம்/100 மில்லிக்கு கீழும், பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு 12 கிராம்/100 மில்லிக்கு கீழும் இருப்பது வேண்டும்.

Do you know the Amazing Health Medicine in Mutton spleen and Goat suvarotti is the Best for Hemoglobin

ஆனால், மத்திய அரசின் ஆய்வின்படி, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், 52.9 சதவீத பெண்களும், 24.6 சதவீத ஆண்களும் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் 50 வயதுக்குள் இருப்பவர்களுக்கான ரத்த சோகை பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக ஆண்களில் 4-ல் ஒருவருக்கும் பெண்களில் 50 சதவீதத்தினருக்கு அத்தகைய பாதிப்பு இருப்பதாகவும் பல்வேறு ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.. இதில், மாதவிடாய், மகப்பேறு போன்ற காரணங்களால் பெண்களுக்கு ரத்த சோகை பாதிப்பு அதிகமாக இருப்பதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

பச்சைக்காய்கறிகள்: எனவே, இரும்புச்சத்து நிறைந்த சத்தான உணவுகளை அதிகம் சாப்பிட்டு வரும்போது, இந்த ரத்தசோகையை தவிர்க்கலாம்.. பச்சைக்காய்கறிகள், கீரைகள், பழங்கள், தானியங்கள், பயிர்களில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.. இதில், முருங்கைக்கீரை, கறிவேப்பிலை, போன்றவைகளை வாரம் 2 முறையாவது சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் பிரச்சனை தீரும்.

அசைவ உணவுகளில் ஆட்டிறைச்சி ஈரல்களை சாப்பிடுவதால் ரத்தசோகை பிரச்சனை தீரும்.. ஆட்டு மண்ணீரலை, சுவரொட்டி என்று சொல்வார்கள்.. இது பச்சையாக இருக்கும்போது சுவற்றில் ஒட்டிக்கொள்ளுமாம்.. அதனால்தான், சுவரொட்டி என்று பெயர் வந்ததாம்..

சத்துக்கள்: அமினோ அமிலங்கள், B12 மற்றும் இரும்பு சத்துக்கள் இதில் அடங்கி உள்ளன.. 50 கிராம் மண்ணீரலில் ஒரு நாளைக்கு நமக்கு தேவையான இரும்புச்சத்துக்கள் உள்ளன.

அதனால், ஹீமோகுளோபின் பிரச்சனை உள்ளவர்கள், இந்த மண்ணீரலை சமைத்து சாப்பிட்டால், ரத்த சோகை நீங்கும்.. நோய் நோய் எதிர்ப்பு சக்தியும் பெருகும்... ரத்த அணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.. மாதவிடாய் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வு. முடக்குவாதம் உள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

ஆட்டு ஈரல்: அந்தவகையில், ஆட்டு ஈரலை அடிக்கடி உட்கொண்டு வந்தால், எந்த ஒரு ஊட்டச்சத்து குறைபாடுகளும் நமக்கு ஏற்படாது.. இரும்புச்சத்து, வைட்டமின் B12 அதிகமாக உள்ளதால், வாரம் ஒருமுறை சமைத்து சாப்பிட்டாலே உடலில் ரத்தம் நன்கு ஊறி, ரத்த சோகையில் அபாயம் குறையும்.

இந்த ஆட்டு ஈரலில் வைட்டமின் K அதிகமாக உள்ளதால், எலும்புகளின் ஆரோக்கியம் காக்கப்படுகிறது.. இதனால் எலும்பு தொடர்பான பிரச்சனைகளும் வராது.. வைட்டமின் A அதிகமாக உள்ளதால், சருமத்தை ஆரோக்கியமாகவும், பொலிவோடும் வைத்துக் கொள்ள சுவரொட்டிகள் உதவுகின்றன..

நினைவாற்றல்: வைட்டமின் B, இரும்புச்சத்து,நல்ல கொலஸ்ட்ரால் உள்ளதால், மூளையின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு இன்றியமையாத சத்துக்கள் கிடைக்கவும், மூளை சிறப்பாக செயல்படவும், நினைவாற்றல் மேம்படவும் துணைபுரிகிறது.

சுவரொட்டியை சூப் போல செய்து, உப்பு சேர்க்காமல்‌ குடிக்க வேண்டுமாம். அப்போதுதான் முழுப்பலன் கிடைக்கும் என்கிறார்கள். அதேபோல, இந்த சுவரொட்டியை நெருப்பில் வாட்டி சாப்பிடலாம்.. சுவரொட்டியின் வெளிப்புறத்தில், வெள்ளை கலரில் காணப்படும் தோலை நீக்கிவிட்டு சமைக்கலாம்.

தலைக்கறி: அதேபோல, ஆட்டுத் தலைக்கறியை சமைத்து சாப்பிட்டாலும், ஹீமோகுளோபின் பிரச்சனை நீங்குகிறதாம். காரணம், ஆட்டு தலைக்கறியில் அதிகளவில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், லீன் புரோட்டீன்கள் உள்ளதால், ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுவதோடு, இரும்புச்சத்தின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+