செலரி இலை.. இத்துனுண்டு தண்டு.. தோண்ட தோண்ட அதிசயம்.. நாலஞ்சு செலரி இலைகள் போதுமே.. ஆயுள் கூடும்
சென்னை: உடலிலுள்ள அத்தனை உடல் பாகங்களுக்கும் நன்மை தரக்கூடிய தண்டு என்றால், அது செலரியின் தண்டுகள்தான்.. வியக்கத்தக்க ஆச்சரியம் தரும் செலரி தண்டுகள் பற்றி பார்ப்போமா?
செலரியில் கிட்டத்தட்ட 88 சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளது.. புரோட்டீன் கொழுப்பு, நார்ச்சத்து, மாவுப்பொருள், தாது உப்புக்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் A, B, C போன்ற அனைத்து சத்துக்களும் அடங்கியிருப்பதால்தான், மிகச்சிறந்த உணவாக திகழ்கிறது. மக்னீசியமும், இரும்புச்சத்தும் சற்று அதிகமாக உள்ளது, செலரியின் பிளஸ் பாயிண்ட்டாகும்.

மக்னீசியம்: நம்முடைய இதயம் சிறப்பாக செயல்படவும், இதயத்திற்கு செல்லும் நரம்புகளும் தடையின்றி இயங்கவும் பெருமளவு தேவைப்படுவது மக்னீசியம்தான்.. இந்த செலரியில் மக்னீசிய உப்புகள் அதிகமாக உள்ளதால் இதயத்துக்கு நன்மை தருகிறது.. இதனால் நெஞ்சுவலி, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயங்கள் முன்கூட்டியே தடுக்கப்படுகின்றன...
அதேபோல ஹீமோகுளோபின் பிரச்னை இருப்பவர்களுக்கு இந்த செலரி கை கொடுக்கிறது.. ரத்தசோகை, லூகேமியா போன்ற பிரச்சனையும் உடனே தீர்கிறது.. ரத்த விருத்தியும் அதிகமாவதுடன், தாது உப்புக்களால் ரத்தத்தில் புளிப்பு ஏற்பட்டு ரத்தம் கெட்டுவிடுவதும் முன்கூட்டியே தடுக்கப்படுகிறது. இதனால், ரத்தத்தில் நச்சுப்பொருட்களும் சேர்வதில்லை.
செலரி தண்டு: நரம்பு வீக்கம், நரம்பு தளர்ச்சி பாதிப்பு இருப்பவர்களுக்கு இந்த செலரி சூப்பர் சிறந்த உணவாகும். அதேபோல, சிறுநீரில் கற்கள் உருவாகாமல் தடுப்பதில், செலரியின் தண்டுகள் முன்னிலை வகிக்கின்றன.. அந்தவகையில், செலரியை வாரம் 2 முறையாவது சேர்த்து கொண்டால், சிறுநீரகத்தில் கற்கள் சேராது.. ஏற்கனவே கற்கள் இருந்தாலும் இந்த செலரி கரைத்துவிடும்.
செலரியை சமையலுக்கு பயன்படுத்தும்போது, தண்டு, இலைகளுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.. காரட் ஜூஸுடன் சேர்த்து குடித்தால் கூடுதல் பலன்கிடைக்கும்.. புற்றுநோய், ஆஸ்துமா, போன்றவற்றுக்கு இந்த செலரி இலை, தண்டுகளுடன் கூடிய சூப், பெரும்பலனை தருகிறது.. சூப் போல தயாரித்து சாப்பிட பிடிக்காவிட்டால், வெறும் செலரி இலைகளை, தண்டுகளுடன் சேர்த்து, தண்ணீர் விட்டு வதக்கி சாப்பிட்டாலே போதும்.
நார்ச்சத்துக்கள்: நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவு என்பதால், உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்கள் இந்த செலரியை தாராளமாக சாப்பிடலாம்.. இதனை ஒரு கப் தினமும் சாப்பிட்டு வந்தால், செரிமானம் சீராகி உடல் எடை குறையும். செலரியில் நீர்ச்சத்து மற்றும் எலக்ரோலைட்டுகள் அதிகம் உள்ளதால், உடல் வறட்சியும் தடுக்கப்படும்.
அதுமட்டுமல்ல, ஒரு பெரிய தண்டு செலரியில் 100 கலோரிகள் தான் இருக்கின்றன.. எனவே, சாலட்களில் செலரிக் கீரையை சிறிது நறுக்கிப்போட்டு சாப்பிட்டாலே போதும். அடிக்கடி சிறுநீர் வெளியேறுவதுடன், உடலிலுள்ள கழிவுகளும், நச்சுக்களும் வெளியேறி, குடல் பாதுகாப்பும் ஆரோக்கியமாகும். ஒரு நாளைக்கு 2 தண்டு செலரியை சாப்பிட்டாதலே, 7 சதவீதம் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க முடியுமாம்.. எனவே, கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள், செலரியை தவறவிடக்கூடாது.
கல்லீரல்: கல்லீரல் நோய் இருப்பவர்களும் கை கொடுத்து உதவுவது இந்த செலரி.. கல்லீரல் மட்டுமல்லாமல், சருமம், கண்கள் போன்றவற்றின் ஆரோக்கியத்தை இந்த செலரி காக்கிறது.
செலரியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பாலிபீனால்கள் போன்றவை உள்ளதால், மூட்டு வலி, முழங்கால் வலிகளை தடுக்கிறது.. சாலிசிலிக் அதிகம் உள்ள செரியை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால், முகத்தில் பருக்களும் தோன்றாது.. உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்களும் செலரியை சாப்பிடலாம்..
முக்கியமாக செலரியில் வைட்டமின் C உள்ளதால், கண்கள் பிரச்சனைகள் அண்டாது.. பார்வை கோளாறுகளும் ஆரம்பத்திலேயே தடுக்கப்பட்டுவிடும். மன அழுத்தத்தை குறைக்கக்கூடிய மக்னீசியமும் செலரியில் உள்ளதால், தூக்கமும் நிம்மதியாக வரும்.
புற்றுநோய்: புற்றுநோயை தடுக்கக்வடிய ப்ளேவோனாய்டுகள் மற்றும் லுடியோலின் போன்றவை இந்த செலரியில் அபரிமிமாகவே உள்ளதால், புற்றுநோயை எதிர்த்து போராடுகிறது.. அந்தவகையில், கணையம் மற்றும் குடல் புற்றுநோய் செல்களை அழிக்கும் பண்பு செலரிக்கு உண்டு.. அதுவும் நைட் நேரத்தில் செலரியை சாப்பிட்டால், மார்பகங்களில் உருவாகும் புற்றுநோய் செல்களையே தடுத்து அழிக்கிறதாம்..
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications