சர்க்கரை வள்ளிக்கிழங்கு.. சர்க்கரை நோயாளி சாப்பிடலாமா? உள்ளுறுப்பு சுத்தமாக சர்க்கரைவள்ளிக் கிழங்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: குளிர்காலத்தில் கிடைக்கக்கூடிய இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கில் அப்படியென்ன நன்மைகள் உள்ளன? அதிகமான சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிட்டால் என்னாகும்?

ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கும் சர்க்கரைவள்ளிக் கிழங்கில், தித்திப்பு சுவை தரும் மாவுப்பொருள் மட்டுமல்ல, வைட்டமின் A,D,C, பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. இதிலுள்ள B-6 வைட்டமின், செரிமான கோளாறுகளை சீர் செய்கிறது...

Do you know the Amazing Health Uses in Sweet Potato and sugarcane yam is the Best for Diabetics

இதிலுள்ள விட்டமின் D, நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக பராமரிக்க உதவுகிறது... அத்துடன் எலும்புகளும் வலுவாகின்றன.. தைராய்டு சுரப்பி, பற்கள், நரம்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

வெள்ளை மற்றும் சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கசெய்வதிலும், முக்கியமாக உள்ளுறுப்புகளில் ஏற்படும் சில புற்றுநோய் செல்களை அழித்து புற்றுநோய் வராமல் தடுப்பதிலும் சர்க்கரைவள்ளிக்கிழங்கின் பங்கு அதிகம்.
சுவாச பிரச்சனைகள்: சுவாச பிரச்சினை உடையவர்களுக்கும், மூட்டுவலி பிரச்சினை இருப்பவர்களுக்கும், வயிற்றுப்புண் இருப்பவர்களுக்கும், சர்க்கரை வள்ளிக்கிழங்கைதான் பரிந்துரை செய்வார்கள்.

பருவநிலை, சீதோஷ்ண நிலைக்கேற்ப நமக்கு உடலில் பாதிப்புகள் ஏற்படலாம். அந்தவகையில் குளிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்ய, குளிர்காலத்திலேயே கிடைக்கக்கூடிய இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு உதவுகிறது. நார்ச்சத்து அதிகம் என்பதால், உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற நச்சுகள், கழிவுகளை வெளியேற்றவும், உடல் எடையை குறைக்கவும் இந்த கிழங்கு பேருதவி புரிகிறது. அதுவும் குளிர்காலத்தில் எடையை நிர்வகிக்க இந்த கிழங்கு சிறப்பாக துணை புரிகிறது.

புற்றுநோய்கள்: வைட்டமின் A, குளிர்காலத்தில் சரும பாதிப்புகளை தடுத்து நிறுத்துகிறது. சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. அனைத்து வகையான புற்றுநோய்களுக்கும் எதிராக போராட தூண்டுகிறது. மன அழுத்தம் பிரச்சனையிலிருந்தும் மீட்டு ஆரோக்கியமான மனநிலைக்கு கொண்டுவருகிறது.

இதில் வைட்டமின் C அதிகமாக உள்ளதால், நோய்கள் நம்மை தீண்டாமல் காக்கின்றன.. நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குகிறது.. நோய் எதிர்ப்பு உயிரணுக்களின் உற்பத்தியையும் ஆதரிக்கிறது..

ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதில் இந்த கிழங்குக்கு மிக முக்கிய பங்கு உள்ளது. ரத்த அணுக்கள் உருவாக்கத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது... இதய நோய் பாதிப்பில் இருந்தும் நம்மை காக்கிறது.. இந்த கிழங்கில் நிறைய பொட்டாசியம் உள்ளதால், இதய ஆரோக்கியம் தழைக்கிறது.. இதனால், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பயங்கர நோய்களை தடுத்து நிறுத்துகிறது.

பராமரிப்பு: இதிலுள்ள B-6 வைட்டமின், செரிமான கோளாறுகளை சீர் செய்கிறது... இதிலுள்ள விட்டமின் D, நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக பராமரிக்க உதவுகிறது... அத்துடன் எலும்புகளும் வலுவாகின்றன.. தைராய்டு சுரப்பி, பற்கள், நரம்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

இந்த கிழங்கில் இனிப்பு நிறைந்திருந்தாலும், அது இயற்கையானது.. எனவே, ரத்த சர்க்கரை அளவில் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்துவதால், ரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க விரும்புவோருக்கு இந்த கிழங்கு சிறந்த தேர்வாகவும் அமைகிறது.

பாதிப்புகள்: இந்த கிழங்கை அதிகமாக சாப்பிட்டால், அஜீரணம், வயிற்று போக்கு, வயிற்று வலி ஏற்படும்.. அதேபோல, இந்த கிழங்கில் ஆக்சலேட் எனப்படும் கரிம அமிலம் அதிகமாக உள்ளதால், இது சிறுநீரக கற்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு தொந்தரவை தந்துவிடும்.. எனவே, சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தில் இருப்பவர்கள் இந்த கிழிங்கை தவிர்க்கலாம்.

பொட்டாசியம் அதிகம் உள்ளதால், இதய செயல்பாட்டுக்கு இந்த கிழங்கு நல்லது என்றாலும், அதிகமாக பொட்டாசியம் சாப்பிடுவது மாரடைப்பு வரை கொண்டுசென்றுவிடுமாம்.

அமிர்தமும் நஞ்சு: அளவுக்கு அதிகமாக A வைட்டமின் சாப்பிடும்போது, புருவங்களில் உள்ள முடி உதிர்தல், உதடு வெடிப்பது, வறண்ட சருமம் போன்றவற்றை தந்துவிடும்.. மேலும், கல்லீரல் பாதிப்பை வரையும் வரலாம். எனவேதான், யாராக இருந்தாலும், சர்க்கரை வள்ளிக்கிழங்கை அதிகமாக சாப்பிடக்கூடாது என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+