பெருங்குடல் புற்றுநோய்.. மெல்லிய "தாளில்" இவ்வோ ஆச்சரியமா? சர்க்கரை, இதயநோயை தடுக்கும் சூப்பர் காய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெங்காயம் அளவுக்கு வெங்காய தாள்களிலும் நிறைய சத்துக்கள் உள்ளன.. ஆனாலும் இதனை பெரும்பாலானோர் பயன்படுத்துவதில்லை.

சாலட் வெங்காயம், சுருள் வெங்காயம், பச்சை வெங்காயம் என்றெல்லாம் இதனை சொல்வார்கள். வைட்டமின் C, B2, A, K, காப்பர், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், மங்கனீஸ், நார்ச்சத்துக்கள் நிறைந்ததுதான் வெங்காய தாள்கள்.. முக்கியமாக, வெங்காயத்தில் இருக்கும் அதே கந்தகச்சத்து வெங்காய தாள்களிலும் நிறைய உள்ளதுதான் இதன் ஸ்பெஷாலிட்டியாகும்.

Do you know the Amazing Health Uses of Spring Onion and spring onion is the Best prevention food for Colon cancer

எதிர்ப்பு பண்புகள்: வெங்காயத்தாளில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளதால், DNA பாதிப்படையாமல் இருக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், செல்வளர்ச்சியையும் தூண்டுகிறது. பாக்டீரிய எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால், செரிமான கோளாறுகள் நீங்குகின்றன,

வெங்காயம் சாப்பிட்டால் இதயத்துக்கு நல்லது என்பார்கள்.. அதுபோலவே, இந்த வெங்காய தாள்களும் இதயத்துக்கு நன்மை தரக்கூடியது.. ரத்த அழுத்தத்தையும், கொழுப்பையும் குறைக்கும் தன்மை வாய்ந்தது என்பதால், இதய நோய்களை அண்டவிடாமல் தடுக்கிறது..

ரத்தக்குழாய்: இதிலிருக்கும் வைட்டமின் K ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவதை தடுத்து சீரான ரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது.. ரத்தத்தை சுத்திகரிப்பு செய்து, ரத்த ஓட்டத்தையும் சீராக்க செய்வதால், இதயத்துக்கு பாதுகாவலனாக இந்த வெங்காய தாள்கள் செயல்படுகின்றன.

வெங்காயத்தை போலவே, வெங்காய தாள்களும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கின்றது. நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களை தடுக்கிறது. சர்க்கரை நோயுள்ளவர்களின் அருமருந்து வெங்காய தாள்கள்.. வெங்காயத்தாளிலுள்ள புரோப்பைல் டைசல்பேட்டுகள், குரோமியம் சத்துக்கள், நீரிழிவு நோய்க்கு மிகவும் நல்லது. வெங்காயத்தாள் ரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதுடன், உடலின் குளுக்கோஸ் ஏற்புத் தன்மையை அதிகரிக்க செய்கிறது..

பெருங்குடல் புற்றுநோய்: குறிப்பாக, இந்த வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் எனற கார்போஹைட்ரேட் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைப்பதாக, ஆய்வுகள் கூறுகின்றன.. இந்த பெக்டின் என்பது, நீரில் கரையக்கூடிய கூழ்ம நிலை கார்போஹைட்ரேட் ஆகும்.. மேலும், அலிசின் என்ற வேதிபொருளானது புற்றுநோயினை தடுக்கும் பண்பினை பெற்றிருக்கிறது.

எலும்புகளின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும் வைட்டமின் C, K இரண்டுமே இந்த வெங்காய தாளில் உள்ளன.. அதிலும் இந்த வைட்டமின் C, சருமத்துக்கு கவசம் போல காக்கிறது.. சரும சுருக்கத்தை போக்கி, பொலிவை தரக்கூடிய கொலாஜன் உருவாவதற்கும இந்த வைட்டமின் C உதவுகிறது.

விடாதீங்க: இனி எப்போதுமே வெங்காய தாள்களை வாங்கினால், அடிப்பாகம் வெங்காயம் வடிவிலும், பளபளப்பாகவும், தலைபபகுதி குச்சி போலஅடர்ந்த நிறத்தில ஊசி போலவும் இருப்பதையே பார்த்து வாங்க வேண்டும். சீனர்களின் ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கூட்டக்கூடிய இந்த வெங்காயத்தாளை இனி சமையலில் அடிக்கடி பயன்படுத்துவது சிறந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+