"ஷீலாவை" தூக்குங்க.. மாத்திரையை விட்ருங்க.. மினுமினுப்பு + பளபளப்பு சருமத்துக்கு இதோ சூப்பர் மீன்கள்
சென்னை: சரும மினுமினுப்பு முதல் ரத்த சுத்திகரிப்பு வரை மீன்கள் தரும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்.. அந்தவகையில், சரும ஆரோக்கியத்துக்கு உதவக்கூடிய சிலவகை மீன்களை பார்ப்போம்.
மீன்கள் ஆரோக்கியமான உணவாக கருதப்படுவதற்கு காரணமே, அதிலிருக்கும் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலங்கள்தான்.. சருமத்துக்கான ஊட்டச்சத்துக்கள் இதில் நிறையவே உள்ளன..

இந்த கொழுப்புகள், நம்முடைய சருமத்தில் நுழைந்து, ஆரோக்கியமான பிரகாச தோற்றத்தை ஏற்படுத்த தூண்டுகோலாகின்றன. சுருக்கமாக சொல்லப்போனால், சருமத்தை உள்ளிருந்து குணமாக்கி, வெளிப்புறம் முகப்பருக்களையும், மருக்களையும், அதன் அடையாளங்களையும் அழிக்க செய்கின்றன ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்.
சரும பாதுகாப்பு: சரும பாதுகாப்புக்கும், சரும பளபளக்கும் அடித்தளமாக அமையக்கூடிய கொழுப்பு நிறைந்த மீன்களில் மிக முக்கியமானவை கிழங்கான் மீன்கள்.. இந்த மீனில் ஒமேகா 3 மட்டுமல்லாமல், புரோட்டீனும் நிறைய உள்ளது..
எனவேதான், வளரும் பிள்ளைகளுக்கு இந்த மீனை உணவில் அடிக்கடி தர வேண்டுமாம்.. நரம்பு மண்டலத்தை இந்த கிழங்கான் மீன் பலப்படுத்துவதுடன், சருமத்தையும் சேதமில்லாமல் காக்கிறது.. தோலில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்கிறது.. முக்கியமாக, இதுபோன்ற வெயில் காலங்களில் சருமத்துக்கு நிறைய தொந்தரவுகளும், பாதிப்புகளும் ஏற்படும்.. எனவே, வெயில் காலங்களில் இந்த கிழங்கான் மீனை நிறைய சாப்பிட சொல்கிறார்கள்.
நிறைய சத்துக்கள்: அதேபோல, கொடுவா மீனிலும் ஒமேகா -3 கொழுப்பு, ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் A, B -12 போன்றவை நிறைந்துள்ளன.. இந்த மீனிலும் புரோட்டீன் அதிகம் உள்ளது..
மீன் எண்ணெய் வளமாக நிறைந்திருப்பதால், வாரம் 2 முறையாவது இதை உணவாக எடுத்து கொள்ளும்போது, சருமம் மென்மையாவதுடன், உறுதியாக பாதுகாக்கப்படுகிறது. ஆனால், இந்த மீனை சாப்பிடும்போது, முள்ளுடன் சேர்த்தே சாப்பிட சொல்கிறார்கள். அந்த முள்ளிலும்கூட, நிறைய சத்து உள்ளதாம்.
டயட்டில் இருப்பவர்கள் பெரும்பாலும் உபயோகிப்பது ஷீலா மீன்கள்.. சிலர் சீலா இதனை என்றும் சொல்வார்கள்.. மிகவும் குறைவான கலோரிகளும், மிகவும் அதிகமான புரோட்டீனும் உடையது இந்த ஷீலா மீன்..
உடல் எடை: எனவே, உடல் எடை குறைவதுடன், சரும பொலிவு, முடி வளர்ச்சி என அனைத்துக்குமே இந்த மீன் மிகவும் வரப்பிரசாதம் என்று சொல்லலாம்.. வெறுமனே ஷீலா மீனை, சிறிது ஆலிவ் எண்ணெய்யில் வேகவைத்து லேசாக உப்பு, மிளகு தூள் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவும் ஆரோக்கியமாம்.. வேக வைத்து சாப்பிட பிடிக்காவிட்டால், இந்த மீனை சுட்டு சாப்பிடலாம்.
சூரை மீன்களில் முள் அவ்வளவாக இருக்காது.. கொலஸ்ட்ரால், வைட்டமின் A, D, புரோட்டீன், உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருந்தாலும், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமுள்ள மீன்களில் இந்த சூரையும் ஒன்று.. இது கானாங்கெளுத்தி மீன் வகைகளை சேர்ந்தது என்பார்கள்.
சால்மன் மீன்: அதேபோல, சால்மன் மீன்கள் சாப்பிடுவதால் முடி, தோல் , மூட்டுகள் மற்றும் மூளை ஆரோக்கியமாக இருக்கும். இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் முக்கியமாக ஒமேகா - 3 ஆகியவை நிறைந்துள்ளதால், சரும ஆரோக்கியத்தை காக்ககூடியது.. அதனால்தான், நிறைய பேர் இதனை மாத்திரையாகவும், மருந்தாகவும், எடுத்துக் கொள்கிறார்கள்.
மீன்களை சாப்பிடுவதால் சருமத்துக்கு மிகவும் ஆரோக்கியம் என்றாலும் சிலருக்கு மீன் பிடிப்பதில்லை.. மீன் சாப்பிட்டாதவர்கள் மீன் எண்ணெய் மாத்திரைகளை சாப்பிடலாம்..
டாக்டர் ஆலோசனை: தினமும் 1 மாத்திரை சாப்பிடுவதால், சருமம் பளபளப்பும், தலைமுடியும் பொலிவாகும்.. வயதான சுருக்கங்களை தள்ளிப்போடும் ஆற்றல் இந்த மீன் எண்ணெய் மாத்திரைக்கு உள்ளது. ஆனால், டாக்டர்களின் ஆலோசனையின் பேரிலேயே இந்த மாத்திரைகளை எடுத்து கொள்ள வேண்டும்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications