ஆரஞ்சு பழத்தோடு "இதை" மட்டும் சாப்பிடாதீங்க.. கேன்சரைகூட துரத்திடும் ஆரஞ்சு பழத்தின் ஸ்பெஷாலிட்டிஸ்
சென்னை: புற்றுநோய் செல்களையும் அழிக்கக்கூடிய ஆரஞ்சு பழத்தை ஒருசில உணவுகளுடன் சாப்பிடக்கூடாது என்கிறார்கள்.. அது என்னென்ன தெரியுமா?
ஆரஞ்சு பழங்களில், வைட்டமின் C, A, B6, ப்ரோடீன், நார்ச்சத்துக்கள், போலெட்ஸ், தையாமின், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன..

ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் அதிகமுள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்க செய்கிறது. இதிலிருக்கும் வைட்டமின் C, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.. புற்றுநோய் செல்கள் நம்மை நெருங்க விடாமல் செய்ய ஆரஞ்சின் இந்த பண்புகள்தான் உதவுகின்றன.
குடல் ஆரோக்கியம்: இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தாலே, 50 சதவீதம் புற்றுநோய் வரும் ஆபத்து குறைகிறதாம்.. இதிலிருள்ள பொட்டாசியம் சத்துக்கள், ரத்த அழுத்த ஆபத்தினை கட்டுக்குள் வைக்கின்றன. குடலை சுத்தம் செய்து, உடலிலுள்ள கொழுப்பையும் குறைக்கிறது ஆரஞ்சு பழங்கள்.. இதனால், இதயநோய்கள், பக்கவாதம் போன்ற அபாயத்தை குறைக்கிறது.
கர்ப்பிணிகளுக்கு ஆரஞ்சு ஜூஸ் மிகவும் நல்லது என்பார்கள்.. பல்வலி, உடல் சூடு, சிறுநீர்கடுப்பு, மூல வியாதி, சிறுநீர் கோளாறுகள், மந்தமான சருமம், வறண்ட கூந்தல் பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம் ஆரஞ்சு சாப்பிட வேண்டும்.
அசிடிட்டி: ஆனால், ஆரஞ்சு பழங்கள் சிட்ரஸ் வகையை சேர்ந்தது என்பதால், சாப்பாடு சாப்பிட்டதும்தான் ஆரஞ்சு சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றில் அமிலம் உண்டாக்கிவிடும். அசிடிட்டி, அஜீரண பிரச்சனை இருப்பவர்கள், வயிறு தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள், இருமல் உள்ளவர்கள் இந்த ஆரஞ்சு பழத்தினை தவிர்த்து விடலாம். இல்லாவிட்டால் மார்பு மற்றும் வயிற்றில் எரியும் உணர்வை அதிகரிக்கும்.
அதேபோல, சில உணவுப்பொருட்களுடன் ஆரஞ்சு பழத்தை சேர்த்து சாப்பிடுவது அஜீரணம், ஒவ்வாமை, அசௌகரியம், நெஞ்செரிச்சல் பாதிப்புகளை தந்துவிடும்.. குறிப்பாக, தயிர், பால் இவைகளுடன் ஆரஞ்சு பழம் சேர்த்து சாப்பிடக்கூடாது. இப்பழத்தின் அமிலத்தன்மை தயிருடன் கலந்தால் சிலருக்கு அசௌகரியம் ஏற்படலாம்.
உப்புசம்: பால் சார்ந்த பொருட்களை சேர்ப்பது அஜீரணம் அல்லது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தக்கூடும். இப்பழத்தின் அமிலத்தன்மை பாலில் உள்ள புரதங்களுடன் வினை புரிந்து வயிற்று கோளாறு அல்லது வயிறு உப்புசத்திற்கு வழிவகுத்துவிடும். அதேபோல, பாலாடைக்கட்டி பாலாடைக்கட்டியுடன் ஆரஞ்சு பழத்தை சேர்த்து சாப்பிடக்கூடாது.. இதனால் செரிமான தாமதமாகி, அஜீரணம் ஏற்பட்டுவிடும்.
அதேபோல, ஆரஞ்சு பழத்துடன் காபி அல்லது பிளாக் டீ கலந்து சாப்பிட்டால், வயிற்று உபாதைகள் வரலாம்.. வயிற்றுப்புண் இருப்பவர்களுக்கு மோசமான பாதிப்பை தந்துவிடும்..
கோளாறுகள்: வாழைப்பழமும், ஆரஞ்சு போலவே சிறந்த பழம் என்றாலும் இரண்டையும் சேர்த்து சாப்பிடக்கூடாது.. இதனால், செரிமான கோளாறுகள் வந்துவிடும்.. முக்கியமாக வயிறு சார்ந்த நோய் பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்களுக்கு கூடுதல் தொந்தரவுகளை தந்துவிடும். அதேபோல, காரமான உணவுகள் ஆரஞ்சு பழத்தின் அமிலத்தன்மையுடன் காரமான உணவுகள் சேர்வது செரிமான கோளாறுக்கும், வயிற்றுப்புண் பாதிப்புகளுக்கும் வழிவகுத்துவிடும்.
கொழுப்பு உணவுகள் மற்றும் அதிக கொழுப்புள்ள உணவுகளுடன் ஆரஞ்சு பழத்தை சாப்பிடக்கூடாது.. கார்பனேற்றப்பட்ட பானங்களையும், மதுபானங்களையும், ஆரஞ்சு பழத்துடன் சேரத்து சாப்பிடக்கூடாது. இது வயிறு உபாதைகளையும், ஒவ்வாமையையும் தந்துவிடும்.












Click it and Unblock the Notifications