மஞ்சள் மஞ்சள் கறை பற்கள்... கொய்யாயிலை + தக்காளி போதுமே.. பல்லிலுள்ள கறைகளை போக்கும் சூப்பர் டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பற்களில் கறை ஏற்படுவதற்கு என்ன காரணம்? அந்த கறைகளை போக்குவதற்கான குட்டி குட்டி டிப்ஸ்களை பார்க்கலாம்.

பற்களில் கறை படிவதற்கும் நிறைய காரணங்கள் உள்ளன.. முக்கியமாக பற்களை முறையாக துலக்காவிட்டாலும், அல்லது சாப்பிட்ட பொருள்கள் பற்களில் தேங்குவதாலும், கறைகள் ஏற்படும்..

Health Health news Health tips Teeth Guava leaves

பற்கள் கறை: இந்த கறைகளை உடனடியாக நீக்காவிட்டால், பாக்டீரியாக்களின் உற்பத்தி பெருகி, பற்கள், ஈறுகளில் அதிக பாதிப்பை தந்துவிடும். எனவே, கறைகள் இல்லாமல் பற்களை வைத்து கொள்ள வேண்டும்.. அதேபோல, கறைகள் வந்ததுமே, அவைகளை களைந்துவிட வேண்டும்.

பேக்கிங் சோடா + உப்பு இந்த இரண்டு கலவைகளும் கறைகளை போக்க உவுகின்றன.. இவைகளை நீரில் கலந்து, டூத் பேஸ்ட் போல எடுத்து பற்களை தேய்க்க வேண்டும்.. பிறகு, தண்ணீரில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு சேர்த்து கலந்து அதையும் வாயில் ஊற்றி சில விநாடிகள் வைத்திருந்து கொப்பளிக்கலாம். இறுதியில் சாதாரண குளிர்ந்த நீரில் வாயை கொப்பளித்தால் கறைகள் நீங்க ஆரம்பிக்கும். பேக்கிங் பவுடரில், சோடியம் பை கார்பனேட் உள்ளதால், கறைகளை அடியோடு நீக்கிவிடும்..

கற்றாழை ஜெல்: நசுக்கிய 2 பல் பூண்டு, 1 ஸ்பூன் தக்காளி சாறு, துளி சோடா உப்பு போன்றவைகளை கலந்து பற்களை தேய்த்து வந்தாலும் கறைகள் நீங்கும்.. கற்றாழை ஜெல்லுடன், கிளிசரின், பேக்கிங் சோடா, ஆரஞ்சு பழச்சாறு ஆகியவற்றை கலந்து பற்களை தேய்த்து வந்தால் பலன் கிடைக்கும். ஆன்டி பாக்டீரியா அதிகமுள்ளது ஒயிட் வினிகர்.. இதில் 2 ஸ்பூன் மட்டும் எடுத்து, அரை கப் நீரை அதில் கலந்து வாய் கொப்பளித்து வரலாம்.

தக்காளி, ஸ்ட்ராபெர்ரி பழத்தையும் மசித்து பற்களின் மேல் தடவி 10 நிமிடம் விட்டுவிட்டு டூத் பிரஷ்ஷினால் தேய்த்தாலும் கறைகள் குறைய துவங்கும். அல்லது ஸ்ட்ராபெர்ரி பழத்தை மசித்து, சிறிது எலுமிச்சம்பழச்சாறு கலந்து, டூத் பிரஷ்ஷில் பற்களை மாதம் 2 முறை தேய்த்து வந்தால் கறைகள் நீங்கும். காரணம், இந்த இரண்டிலுமே அமிலத்தன்மை நிறைந்துள்ளதால், கறைகளை போக்க உதவுகிறது.

ஆரஞ்சு பழங்கள்: அதேபோல, ஆரஞ்சு பழதோலை, பற்களில் கறை உள்ள இடங்களில் சில நிமிடங்கள் வைத்து தேய்த்தாலும், கறைகள் மெல்ல கரையும்.. ஆரஞ்சு பழத்தின் மேல் தோல்களில் பற்களை தேய்த்து வந்தாலும்

கொய்யா இலைகளுக்கு பற்களின் கறைகளை போக்கும் சக்தி உள்ளது. இந்த இலையிலுள்ள ஆன்டி மைக்ரோபியல், ஆன்டி பாக்டீரியல் பண்புகள் பற்களின் ஆரோக்கியத்தை காக்கின்றன.

காரமான உணவு: எனவே, கொய்யா, கேரட், பேரிக்காய், ஆப்பிள், அத்திப்பழம், ஸ்ட்ராபெரி போன்ற பழங்களை அதிகமாக சாப்பிட்டு வருவதால் பற்கள் வலுவடையும்.. இதில் ஆப்பிள் மிகவும் முக்கியமானதாகும்.. காரணம், இதிலுள்ள அசிட்டிங் அமிலம் பற்களில் உள்ள, கறைகளையும் நீக்குகிறது... காரமான உணவுகளை அதிகமாக சாப்பிட்டு வந்தால், பற்களில் கறைகள் வருவதை தடுக்கலாம்.. எனவே 4 மிளகையும் வாயில் போட்டு மென்று வரலாம்..

எலுமிச்சை சாறு மற்றும் உப்பு கலந்து தேய்ந்து வந்தாலும் பற்களில் உள்ள மஞ்சள் கறை படிப்படியாக நீங்கும்... கடைகளில் கிடைக்கும் சாதாரண உப்பைக் கொண்டு, பற்களை துலக்கினால் பற்களில் உள்ள கறைகள் அகன்று, பற்கள் பிரகாசமாக இருக்கும். ஆனால், உப்பை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால், ஈறுகளையும், எனாமலையும் பாதிக்கும்.. எனவே, சாதாரண சாம்பலை, பேஸ்ட்டுடன் சேர்த்து காலை, மாலை 2 வேளையும் பல் துலக்கி வந்தாலே பற்களில் உள்ள கறை நீங்கி, வெண்மையாக காட்சியளிக்கும்.

கறைகள்: அதேபோல, இரவு தூங்க போவதற்கு முன்பு, ஆரஞ்சு தோலில் பற்களை துலக்கி விட்டு, வாயை கழுவாமல் படுத்துக் கொள்ள வேண்டுமாம். ஆரஞ்சு தோலில் உள்ள வைட்டமின் C சத்தானது, பற்களில் உள்ள கறைகளை நீக்கி விடும் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+