அடிவயிறு தொப்பையை குறைக்க.. இந்த 3 பொருள் போதுமே.. கடகடன்னு கொழுப்பு குறையும்.. சூப்பர் டிப்ஸ்கள்
சென்னை: உடல் எடையை குறைப்பதில் பெரும்பங்கு வகிப்பது விதைகள் ஆகும்.. அந்தவகையில், உடலிலுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதில் 3 வகையான விதைகளை தவிர்க்க முடியாது. அது என்னென்ன?
எடை இழப்புக்கு சியா விதைகளைபோல நன்மை தரக்கூடியது வேறு இருக்க முடியாது.. காரணம், இந்த சியா விதைகளில் கலோரிகள் மிகவும் குறைவு.. அத்துடன் நிறைய நார்ச்சத்து நிறைந்திருப்பதால்தான், காலை உணவிலேயே இந்த சியா விதைகளை சேர்த்து கொள்ள சொல்கிறார்கள்.

அஜீரணம்: இதனால், ஜீரணம் எளிதாக நடந்து, உடலிலுள்ள கழிவுகளும், நச்சுக்களும் வெளியேற உதவுகிறது.. குடல் பாதுகாப்பும் சீராகிறது.. உடலின் வளர்சிதை மாற்றத்திற்கும் துணைபுரிகிறது.. வயிறு நிரம்பிய உணர்வை இந்த சியா விதைகள் தருவதால், உடல் எடையை குறைக்க துணை புரிகிறது.
உடல்எடையை குறைக்க முயற்சிப்பவர்கள், 1 டம்ளர் தண்ணீரில் 1 ஸ்பூன் சியா விதைகளை போட்டு, இரவு முழுவதும் ஊறவைத்துவிட்டு, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தாலே, உடல் எடையில் மாற்றம் தெரிய ஆரம்பிக்குமாம்.. இதில் எலுமிச்சம் சாறு கலந்து குடிக்கும்போது, கூடுதல் பலன் கிடைக்கும். இந்த விதையில், மக்னீசியம், டிரிப்டோபான் அமிலம் உள்ளதால், தூக்கமின்மை பிரச்சனையை சரிசெய்கிறது..
சப்ஜா விதை: சியா விதைகளை போலவே, உடல் எடையை குறைக்க உதவுவது சப்ஜா விதைகள்.. இதிலும் ஏகப்பட்ட நார்ச்சத்துக்கள் உள்ளன.. சிலர் இதனை ஃபலூடா விதைகள் என்பார்கள்.. செடி துளசி இனத்துடன் சேர்ந்துள்ளதால், திருநீற்றுப்பச்சை என்றும் சிலர் அழைப்பார்கள்..
இந்த செடியிலிருந்துதான் சப்ஜா விதைகள் நமக்கு கிடைக்கின்றன. எனவே, துளசி விதை என்றும் சொல்வார்கள். குளிர்ச்சி தன்மை வாய்ந்த சப்ஜா விதைகளில், இரும்பு, கால்சியம், மெக்னீசியம், ஒமேகா-3 கொழுப்பு என நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன..
இந்த சப்ஜா விதைகளை தண்ணீரில் ஊறவைத்தே உட்கொள்ள வேண்டும். 1 ஸ்பூன் சப்ஜா விதையில் 7 கிராம் நார்ச்சத்து உள்ளதால், எடை இழப்புக்கு சிறந்த உணவாக உள்ளது.. ஒரு ஸ்பூன் நீரில் ஊறவைத்து சாப்பிடுவதால், எடை மெல்ல குறைய தொடங்கும். அத்துடன், உடலிலுள்ள பித்தமும் நீங்கும்.. மலச்சிக்கல் இருந்தால், இந்த சப்ஜா விதையை பாலில் கலந்து குடிக்கலாம்.
மல்லி விதைகள்: இந்த லிஸ்ட்டில் கொத்தமல்லி விதைகளையும் சேர்த்து கொள்ளலாம். வைட்டமின்கள் A, C, K உள்ளிட்டவைகளம், ஏகப்பட்ட இரும்பு சத்துக்களும் நிறைந்தவை இந்த கொத்தமல்லி.. மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, நீர்ச்சத்துக்கள் உள்ளன.. இதிலிருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்யும் திறன் இந்த கொத்தமல்லி விதைக்கு உண்டு.
கொத்தமல்லி விதையை லேசாக வறுத்து பவுடராக்கி வைத்துக் கொண்டு, டீ தயாரித்து குடிக்கலாம். அல்லது ஒரு ஸ்பூன் கொத்தமல்லி விதையை ஒரு கப் தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு வடிகட்டி குடிக்கலாம். சாப்பிடுவதற்கு முன்பு இதை குடித்தால், பசி உணர்வு குறைந்து, செரிமானமும் எளிதாகும். அல்லது தயிருடன் கொத்தமல்லி தூளும், சிட்டிகை உப்பும் கலந்து சாப்பிடலாம்.
ஆரோக்கியம்: எவ்வளவுதான் உடல் எடை குறைப்பதில், இதுபோன்ற விதைகள் உதவுகிறது என்றாலும், முறையான உடற்பயிற்சி, நிறைய தண்ணீர், போதுமான தூக்கம், சத்தான உணவு, மகிழ்ச்சியான மனநிலை போன்றவையே உடல் எடையை தீர்மானிக்கின்றன என்பதை மறந்துவிடக்கூடாது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications