அருகுலா இலை.. மூட்டுவலியை முடக்கும் அருகுலா.. ஆர்த்ரைட்டிஸை அகற்றும் ராக்கெட் இலைகள்.. பெஸ்ட் டிஸ்ப்
சென்னை: ஆரம்ப கட்டத்தில், மூட்டுவலி பாதிப்பு இருந்தால், சத்தான கீரைகளை கொண்டே அந்த பிரச்சனையை சரி செய்யலாம். இதற்கு உதவும் ஒருசில கீரைகளை பார்ப்போம்.
ஆர்த்ரைட்டீஸ், மூட்டுவலி பிரச்சனைகளுக்கு, முருங்கைக் கீரையோடு உப்பு சேர்த்து வேகவைத்து, 15 நாட்கள் சாப்பிட்டால், நிவாரணம் கிடைக்கும். அல்லது வாதநாராயணன் கீரையை ஒரு கைப்பிடி எடுத்து, அலசி சுத்தம் செய்து, 3 பல் பூண்டு, சிறிது திப்பிலியுடன் சேர்த்து, விளக்கெண்ணெய் விட்டு வதக்கி அரைத்து சாப்பிட்டால் முடக்குவாதம் குறையும் என்பார்கள்.

மூட்டுவலிகள்: அதேபோல, முடக்கத்தான் கீரையும் இதற்கு உபயோகப்படும்.. மூட்டுவலி பிரச்சனை இருந்தால், தொடக்கத்திலேயே முடக்கத்தான் கீரையை எடுத்து கொண்டால், பூரணமாகவே குணமாகிவிடும். இதற்கு முடக்கத்தான் கீரை மற்றும் வாதநாராயணன் இரண்டையுமே சம பங்கு எடுத்து, ஒரு பல் பூண்டு, மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து, வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டு வலி வெகுவாக குறையும்..
முடக்கத்தான் கீரையை உணவில் அதிகம் சேர்த்து கொண்டால், உடம்பில் வாதத்தன்மை கட்டுப்பட்டு, மூட்டு வலியை போக்கும்... முடக்கத்தான் இலைகளை ஆமணக்கு எண்ணையில் நனைத்து, மூட்டு பகுதிகளிலும் தேய்த்து வந்தாலும், நிவாரணம் கிடைக்கும்.
குப்பைக்கீரை: குப்பைக் கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து, கஷாயம் வைத்து குடித்தால், மூட்டு வலி குறையும். கசகசா, துத்தி இலையை சேர்த்து விழுதாக அரைத்து, கால் மூட்டுகளில் தடவினால் வலி குறையும்...
அதுபோலவே, பிரண்டை இலை, முடக்கத்தான் இலை, சீரகம் மூன்றையும் தலா 10 கிராம் அளவு எடுத்து அரைத்து, காலையில் சாப்பிட்டு வந்தால், மூட்டு வலி, மூட்டு தேய்வு போன்ற பிரச்சினைகள் அகலும்.. பரட்டைக் கீரை, வாதநாராயணன் கீரை, முடக்கத்தான் கீரை மூன்றையும் சம அளவு எடுத்து, அவைகளில் சாறு பிழிந்து, அதில் நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி தைலமாக்கித் தேய்த்து வந்தாலும், மூட்டுகளில் உள்ள வலிகள் குறையும்.
அருகுலா கீரை: அதேபோல, மூட்டுவலி பிரச்சனைக்கு உதவக்கூடியது அருகுலா இலைகள் ஆகும்.. இந்த அருகுலா கீரைகளை, ராக்கெட் கீரைகள் என்பார்கள்..
ஆரோக்கியமான கொழுப்பு, கார்போபோஹைட்ரேட், வைட்டமின் A, K, C, M, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மாங்கனீஸ், காப்பர், செலீனியம், ஜிங்க்,போன்றவை இந்த அருகுலா கீரையில் அடங்கியிருக்கின்றன. இந்த கீரைகளை உணவில் சேர்த்து வரும்போது, ஆத்ரைட்டிஸ் பிரச்சனைகள் தீர்கின்றன..
மூட்டுவலியை தவிர, மேலும் சில நன்மைகளையும் இந்த கீரை தருகின்றது. குறிப்பாக, உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இந்த கீரை பெஸ்ட் பலனை தரக்கூடியது.. காரணம், இந்த கீரையில் கலோரிகள் கிடையாது... வெறும் 100 கிராம் எடுத்துக்கொண்டாலே, கணிசமான கலோரிகளை வெளியேற்றிவிடுமாம்.. அத்துடன் கெட்ட கொழுப்புகளையும் கரைத்து வெளியேற்றுகிறது..
வைட்டமின் ஏ: இந்த கீரையில் பீட்டா கரோட்டின், வைட்டமின் A நிறைந்துள்ளதால், கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கிறது. மற்ற கீரைகளை போலவே மசியல் செய்து சாப்பிடலாம்.. அல்லது சாலட் செய்யலாம் அல்லது சூப் செய்து சாப்பிடலாம்..
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications