இலவங்கப்பட்டை.. சர்க்கரை நோயாளிக்கு உதவும் "பட்டை".. கிடுகிடுனு உடல் எடையை குறைக்கும் இலவங்கப்பட்டை
சென்னை: மசாலா பொருளாக சமையலில் சேர்க்கப்படும் லவங்கப்பட்டை, உடல் எடை குறைவதில் எப்படியெல்லாம் உதவுகிறது தெரியுமா? வெறும் லவங்கப்பட்டையில் டீ போட்டு குடித்தாலும் பெரும் பலன் கிடைக்கும்.
மெக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரதம், கால்சியம், மங்கனீசு, காப்பர், ஜிங்க், வைட்டமின்கள், நியாசின், தியமின் போன்ற சத்துக்கள் லவ்ங்கப்பட்டையில் உள்ளன.. சுருக்கமாக சொல்லப்போனால் பூண்டைவிடவும், பலமடங்கு சக்தி வாய்ந்தது இந்த லவங்கப்பட்டை.

ஆய்வுகள்: சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கணையத்தில் இன்சுலின் சுரப்பை எதிர்க்கும் பண்பை குறைத்து, இன்சுலின் சுரப்பை இந்த பட்டைகள் ஊக்குவிக்கின்றனவாம்.. அந்தவகையில், சர்க்கரை நோயாளிகளுக்கு கை கொடுத்து உதவக்கூடியது இந்த பட்டை.. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த பட்டையை உணவில் தாராளமாக பயன்படுத்தலாம்.
பட்டையை ஏதாவது ஒரு ரூபத்தில் உணவில் சேர்க்கும்போது, இதயம் சிறப்பாக வேலை செய்யும்.. சுவாச கோளாறுகள் நீங்கும்.. மூளையின் செயல்பாடுகளும் அதிகரிக்கும்.. பல்வலியால், பல் ஈறுகளால் அவதிப்படுபவர்களுக்கும், பல் ஈறுகளின் வீக்கங்கள் உள்ளவர்களும், வாய் துர்நாற்றம் பிரச்சனை உள்ளவர்களுக்கும் இந்த பட்டை பல நன்மைகளை தருகிறது.
நன்மைகள்: இவ்வளவு நன்மைகள் இருந்தாலும், உடல் எடை குறைப்பதிலும் இந்த லவங்கப்பட்டைக்கு பெரும்பங்கு உண்டு.. உடல் எடையை குறைக்க முயற்சிப்போர், வெறுமனே நாம் குடிக்கும் தண்ணீரில், இந்த பட்டையை போட்டு ஊற வைத்து குடிக்கலாம். அல்லது ஒரு டம்ளர் தண்ணீரில் பட்டை துண்டுகளை போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி, தினமும் குடிக்கலாம்.

இதனால், உடலிலுள்ள கழிவுகள், நச்சுகள் வெளியேறி, உடல் சுத்தமாகும்.. உடல் எடையும் குறைய துவங்கும்.. லவங்கப்பட்டையில் பாக்டீரிய எதிர்ப்பு பண்புகள் நிறைந்திருப்பதால், சருமத்துக்கு பொலிவு தருகிறது. அல்லது வெதுவெதுப்பான ஒரு டம்ளர் தண்ணீரில் பட்டைத்தூள் + தேன் இரண்டையும் கலந்து குடித்தால் இன்னும் பலன்களை தரும்.. அல்லது, காலையில் வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை டீ தயாரித்து குடிக்கலாம். இந்த டீ எப்படி தயாரிக்க வேண்டும் தெரியுமா?
சுடுநீர்: ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி, இலவங்கப்பட்டையும், இஞ்சியையும் தட்டி சேர்க்க வேண்டும். இவைகள் நன்றாக கொதிக்கும்போது, சிறிது கிரீன் டீ சேர்த்து அடுப்பை நிறுத்திவிட வேண்டும். இதை வடிகட்டி, தேன் கலந்து குடிக்கலாம். அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் கூடுதல் பலன் கிடைக்கும். இந்த டீயை, சர்க்கரை நோயாளிகளும் குடிக்கலாம்.
இப்படி லவங்கப்பட்டையை வெந்நீரிலோ, வெறும் நீரிலோ அல்லது டீ தயாரித்தோ குடிப்பதால், உடலில் உள்ள தேவையில்லாத கலோரிகள் கரைய துவங்கும்.. இந்த பட்டையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.. புற்றுநோய் போன்ற ஆபத்துகளையும் அண்டவிடாமல் தடுக்கிறது.
மாதவிடாய்: பெண்கள் இந்த டீயை அல்லது பட்டை தண்ணீரை குடிப்பதால், மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலி குறையும்.. மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் உடல்சோர்வு, கை கால் வலி, குமட்டல் நீங்கும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யவும் துணை புரியும்... கீல்வாத பாதிப்புகளையும் கட்டுப்படுத்திவிடும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications