சீதாப்பழத்துல இத்தனை நன்மையா? நீரிழிவு நோயாளி சீதாப்பழம் சாப்பிடலாமா? அட்டகாசமான சீத்தாப்பழம் டிப்ஸ்
சென்னை: சீதாப்பழம் அனைவருக்கும் சாப்பிடக்கூடிய பழமா? இந்த பழத்தில் உள்ள நன்மைகள் என்னென்ன? சர்க்கரை நோயாளிகள் சீதாப்பழம் சாப்பிடலாமா?
'கஸ்டர்ட் ஆப்பிள்' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது சீதாப்பழம். கஸ்டர்ட் என்ற இனிப்பு சுவை இந்த பழத்திற்கு இருப்பதால் இந்த பெயர் வந்ததாக சொல்வார்கள்..

சத்துக்கள்: ஏகப்பட்ட ஊட்டச்சத்தும், கனிமச்சத்தும் நிறைந்த பழம் இது. பெரும்பாலும் வைட்டமின் Bஇ மக்னீசியம் அதிகமாக உள்ளது. இதைத்தவிர, வைட்டமின் C, நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் நிரம்பிகிடக்கின்றன.
இந்த பழத்திலுள்ள மக்னீசியம், உடலிலுள்ள நீர்த்தன்மையை சமநிலைப்படுத்துவதுடன், மூட்டுகளில் அமிலங்களின் சேர்க்கை ஏற்படாமல் தடுத்துவிடுகிறது. ஆர்த்ரைட்டீஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு சீதாப்பழம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
தசைகள்: சீதாப்பழத்தை அடிக்கடி சாப்பிடுவதால் தசைகளின் பலவீனத்தை எதிர்த்துப் போராட உதவ முடியும். அதோடு எலும்புகளை உறுதிப்படுத்தும் கால்சியமும் சீதாப்பழத்தில் அதிகமாக இருக்கிறது.
உடல் மெலிந்து காணப்படுபவர்கள், உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக, சீதாப்பழத்தை சாப்பிடலாம்.. காரணம் இதுவொரு கலோரி நிறைந்த பழமாகும்.. 100 கிராம் சீத்தாபழத்தில், கிட்டத்தட்ட 94 கலோரிகள் இருக்கிறதாம். தேவைப்பட்டால், ஸ்மூத்தி போன்றவைகளில் இந்த பழத்தை சேர்த்து சாப்பிட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.
ஊளைச்சதை: அதேசமயம், உடம்பு ஊளைச்சதை உள்ளவர்கள், தொடர்ந்து சீதாப்பழம் சாப்பிட்டு வர ஊளைச்சதை குறையும்.. சீதாப்பழத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால், கொலஸ்ட்ரால் உடலில் சேராது.
டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிப்புகளுக்கு ஆளாகியிருப்பவர்கள், விரைந்து குணமாகி வருவதற்கு இந்த பழம் கை கொடுக்கிறது.. எலும்புகளுக்கும், தசைகளுக்கும் பலத்தை தரக்கூடியது இந்த பழங்கள்.
இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நல்ல நினைத்திறன் கிடைக்கும்.. நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மை சீதாப்பழத்திற்கு உண்டு என்று ஜெர்மன் நாட்டு ஆய்வு ஒன்று கூறுகிறது. மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. அதனால்தான், குழந்தைகளுக்கு ஏற்ற பழமாக சீத்தாப்பழம் உள்ளது.
சீதாப்பழம்: ஹீமோகுளோபின் பிரச்சனை இருப்பவர்கள், கட்டாயம் சீதாப்பழம் சாப்பிட வேண்டும். இதனால், ரத்த விருத்தி அதிகமாகும்.. இதயத்தை காக்கக்கூடிய திறன் இந்த பழத்திற்கு உண்டு. அதனால், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பயங்கர நோய்களை அண்டவிடாமல் காக்கிறது. வைட்டமின் C நிறைந்துள்ளதால், சரும பாதுகாப்பு கிடைக்கிறது.. மன அமைதி கிடைக்கிறது..
இந்த பழத்தில் கால்சியம், மக்னீசியம் கலந்துள்ளதால், மன அழுத்தத்தை சீராக்கி, நல்ல தூக்கத்தை தரும் தன்மை இந்த பழத்துக்கு உண்டு. பித்தம், வாந்தி, தலைசுற்றல் போன்ற கோளாறுகளை சரி செய்யக்கூடியது இந்த பழங்கள். ஆண்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த சீதாப்பழங்கள், நச்சுக்களை வெளியேற்றக்கூடியது..
குடல் பாதுகாப்பு: குடல் பாதுகாப்பை தரக்கூடியவை இந்த பழங்கள்.. சிறிது வெந்தயத்தை ஊற வைத்து, அதனுடன் சீதாப்பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால், குடல் புண்களும் ஆறிவிடும்..
அதேபோல, சீதாப்பழத்துடன், சிறிது இஞ்சிச்சாறு, கருப்பட்டி சேர்த்து தின்றால், பித்தம் நீங்கிவிடும்.. அல்சர் பிரச்சனைக்கும், ஆஸ்துமா பிரச்சனைக்கும் தீர்வாக மட்டுமல்லாமல், கண்பார்வை கூர்மை பெறவும், சீதாப்பழங்கள் உதவுகின்றன. இந்த பழத்தில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக உள்ளதால், சர்க்கரை நோய் உள்ளவர்கள் சீதாப்பழத்தை சாப்பிடலாம். ஆனால், காயாக இருக்கும்போது சாப்பிட்டால் கூடுதல் பலன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications