ஒருவரது குடியுரிமையை ரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை.. உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எஸ்ஐஆர் எனப்படும் சிறப்பு தீவிர திருத்தத்தில் பலரது பெயர்கள் நீக்கப்படுவதால் தொடர்ந்து சர்ச்சை நிலவி வருகிறது. இதற்கிடையே இது தொடர்பான வழக்கு ஒன்றில், வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரின் பெயர் நீக்கப்படுவதால் மட்டும் அவர் இந்திய குடியுரிமையை இழந்தவராக கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இந்திய குடியுரிமையை தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

அதன்படி இந்தாண்டு தேர்தலுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் நடந்தது. இருப்பினும், அது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் கடைசி வரை இருந்தது. இதற்கிடையே இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

Supreme court election Comission SIR

குடியுரிமை

அப்போது வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதால் மட்டுமே ஒருவர் குடியுரிமையை இழந்ததாக கருத முடியாது என்ற உச்ச நீதிமன்றம், வாக்காளர் பட்டியலை பராமரித்து அதை கண்காணிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இருந்தாலும் கூட ஒருவரின் குடியுரிமையை சட்டப்படி தீர்மானிக்கும் அதிகாரம் அதற்கு இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மேலும் கூறுகையில், "தேர்தல் ஆணையம் குடியுரிமையை தீர்மானிக்கும் அரசியலமைப்பு அமைப்பு அல்ல. இது தொடர்பாக சட்டத்தில் எந்தவொரு குழப்பமும் இல்லை. தேர்தல் ஆணையத்துக்கு வாக்காளர் பட்டியலை நிர்வகிக்கும் அதிகாரம் உள்ளது. ஒரு நபரின் பெயரை பட்டியலில் சேர்க்கலாமா, நீக்கலாமா என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்யலாம். ஆனால் இதனால் மட்டும் ஒருவரின் இந்திய குடியுரிமையை தானாகவே ரத்தாகாது" என்றனர்.

மத்திய அரசுக்கே அதிகாரம்

மேலும், ஒரு நபரின் குடியுரிமை குறித்து சந்தேகம் எழுந்தால், தேர்தல் ஆணையம் அந்த விவரங்களை உடனடியாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்ப வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது. குடியுரிமை சட்டத்தின் கீழ் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே இருப்பதாகவும், அந்த நடைமுறை முடிவடையும் வரை அந்த நபரின் குடியுரிமை தொடரும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

பின்னணி

மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையின்போது நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட வேண்டும் என்று கோரி அம்மாநில காங்கிரஸ் கட்சியின் சிறப்பு தீவிர திருத்தக் குழுத் தலைவர் பிரசன்ஜித் போஸ் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

விசாரணையின்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பலர் மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களில் நீண்டகாலமாக காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாக கூறினார். இதனால் ரேஷன், சாதி சான்றிதழ் என பல்வேறு சேவைகளை பெறுவதில் சிக்கல்கள் உருவாகியுள்ளதாகவும் அவர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

நோட்டீஸ்

இந்த வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம், மேற்கு வங்க அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் ஆகியவை இதுகுறித்து பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் ஒருவரது குடியுரிமை தொடர்பான சந்தேகங்கள் எழுந்தால், தேர்தல் ஆணையம் அந்த விவரங்களை மத்திய அரசிடம் அனுப்ப வேண்டும் என்று நீதிபதிகள் மீண்டும் குறிப்பிட்டனர்.

இந்த வழக்கு தொடர்பான பிற மனுக்களுடன் சேர்த்து வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி மீண்டும் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்த மனு உள்ளிட்ட பல்வேறு மனுக்களும் அன்றைய விசாரணையில் எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+