பாதம் எரிச்சல்.. ஓயாமல் குடைச்சல் தரும் பாத எரிச்சலுக்கு சூப்பர் டிப்ஸ்.. மீன் எண்ணெய்கள் பெஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிலருக்கு பாதம் எரிச்சல் மிகப்பெரிய தொந்தரவை தந்துவிடும்.. இந்த பாத எரிச்சல் எதனால் வருகிறது? இதற்கு ஏதாவது எளிய தீர்வு உள்ளதா?

கால் விரல்களில் முதலில் கூச்ச உணர்வு ஏற்பட்டு, பிறகு, மெல்ல மெல்ல உணர்ச்சி குறைந்து பாதத்தில் எரிச்சல் வர ஆரம்பிக்கும்.. இந்த பாத எரிச்சல் என்பது, நமக்கு உணர்த்தப்படும் அறிகுறியாகும்.

Do you know the Excellent Benefits of Fish Tablets and what are the Super Home Remedies for Burning Feet

காரணம், உள்ளுறுப்புகளில் ஏதாவது பாதிப்புகள் இருந்தால், அது பல வகைகளில் அறிகுறிகளாக நமக்கு தெரியவரும்.. அந்தவகையில் பாதத்தில் எரிச்சல் வருவதும், பாதிப்புக்கான அறிகுறி என்கிறார்கள். எனவே, பாதம் எரிச்சலை எப்போதுமே அசால்ட்டாக கடந்து போகாமல், உடடினயாக டாக்டரை சென்று சந்திப்பது நல்லது.

பாத எரிச்சல்கள்: இந்த பாத எரிச்சல் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன.. நீரிழிவுச நோயாளிகளுக்கு பாத எரிச்சல் வரலாம்.. ஏனென்றால், ரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகிவிட்டால், அது நரம்புகளை பாதித்து, பாதத்தில் எரிச்சலாக வெளிப்படும்.. எனவே, ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்கான அறிகுறியே இந்த பாத எரிச்சல் ஆகும்.

B 12, ஃபோலேட் (folate) வைட்டமின்கள் குறைபாடு இருப்பவர்களுக்கு பாத எரிச்சல் வரலாம்.. உடல் எடையை குறைக்க ஆபரேஷன் செய்தவர்கள், அல்சர் பாதிப்பு உள்ளவர்கள், பைபாஸ் சர்ஜரி செய்தவர்கள், வயிற்றில் ஏதாவது காரணத்துக்காக ஆபரேஷன் செய்தவர்களுக்கு பாத எரிச்சல் வரலாம்.

சிறுநீரகம்: அதேபோல, உயர் ரத்த அழுத்தம் காரணமாக சிறுநீரகம் பாதிப்புள்ளவர்கள், ஆர்த்ரைட்டிஸ், தொற்று பிரச்னைகள், ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள், கீமோதெரபி எடுத்துக் கொள்பவர்கள், ஆல்கஹாலை அதிகமாக எடுத்து கொள்பவர்கள், தைராய்டு ஹார்மோனின் சுரப்பு அதிகமாக உள்ளவர்களுக்கெல்லாம் பாத எரிச்சல் வரலாம். சிறுநீரக செயலிழப்பு காரணமாக கூட கால்களில் எரிச்சல் ஏற்படலாம்.

எனவே, இதற்கு மருத்துவ உதவியை கட்டாயம் பெற வேண்டும் என்றாலும், உணவுமுறையிலும் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும்.. முக்கியமாக நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பாத்திரங்களிலிருந்தே கவனத்தை செலுத்த துவங்க வேண்டும்.

குடிப்பழக்கம்: தைராய்டு அளவைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டால் இதைத் தவிர்க்கலாம். அதேபோல சர்க்கரையையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.. ஆல்கஹாலை தொடவே கூடாது.. நீண்டகாலமாக குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு நரம்புகள்தான் அதிக பாதிப்பை தரும். ஈரமான செருப்பு, சாக்ஸ்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

உணவு முறையிலும் கவனம் செலுத்த வேண்டும்.. நரம்புகளுக்கு வைட்டமின் B12 தேவைப்படுகிறது.. இந்த வைட்டமின் அசைவ உணவுகளில் அதிகம் இருக்கும்..

பாத எரிச்சல்: அதேபோல, பாத எரிச்சலை தணிக்க சில வீட்டு வைத்தியங்களையும் செய்து பார்க்கலாம். மீன் எண்ணெய்கள் பாத எரிச்சலை போக்க மருந்தாகின்றன.. பாத எரிச்சல் பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகளை தாக்கக்கூடியது, மீன் எண்ணெய் உதவுகிறது.. தினமும் 2400 முதல் 5400 மி.கி வரை மீன் எண்ணெய் எடுத்துகொள்ளலாம் என்கிறார்கள்.

அதுபோலவே, ஆப்பிள் சிடார் வினிகரையும் பயன்படுத்தலாம். பாக்டீரியா , பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகளை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது இந்த ஆப்பிள் சிடர் வினிர்.. அதனால் வெதுவெதுப்பான நீரில் ஆப்பிள் சிடார் வினிகர் சிறிது கலந்து, அதில் கால்களை ஊறவைத்து எடுத்தால் பலன் கிடைக்கும்.

எலுமிச்சை:
குளிர்ச்சி நிறைந்த மருதாணி இலைகளை பாதத்திற்கு பூசலாம்.. அதாவது, மருதாணி இலைகளை அரைத்து, அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து பாதத்தில் பூசலாம்.. 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால் எரிச்சல் குறையலாம்.

கிருமிகளை எதிர்த்து போராடக்கூடிய மஞ்சளையும் பயன்படுத்தலாம்.. நரம்புகள் மற்றும் நியூரான்களின் நோய்களுக்கு எதிராக செயல்படுவதாக ஆய்வுகள் நிரூபித்துள்ளன.. இந்த மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற முக்கிய பொருள், நாள்பட்ட நரம்பியல் நோயின் வளர்ச்சியை தடுக்க உதவுகிறதாம்.

வெதுவெதுப்பான நீர்: எனவே, வெதுவெதுப்பான நீரில் சிறிது எப்சம் உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் கால்களை அதில் ஊறவைக்கலாம். பிறகு 10 நிமிடம் கழித்து, கால்களை துடைத்துவிட்டு சுத்தமான தேங்காய் எண்ணெய்யால் மென்மையாக மசாஜ் செய்தாலும் எரிச்சல் தணியும்.

ஆனால், இவைகள் எல்லாம் பாத எரிச்சலை தற்காலிகமாக போக்கும் வீட்டு மருத்துவம் என்றாலும், மருத்துவர்களின் அனுமதி இல்லாமல், இவைகளை யாருமே பயன்படுத்தக்கூடாது. அதேபோல, பாத எரிச்சலுக்கான காரணங்களை கண்டறிந்து, மருத்துவரின் ஆலோசனை பெற்று சிகிச்சை பெறுவதே, ஆரோக்கியமான வழியாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+