கானாங்கெளத்தி மீன்.. சங்கரா மீனை வாங்கினால் இப்படி செய்யுங்க. சும்மா சர்னு உடல் எடை குறையும் பாருங்க
சென்னை: உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் மீன் சாப்பிடலாமா? எந்தவகையான மீன்களை சாப்பிடலாம்? எப்படி சாப்பிடலாம்?
அனைத்து அசைவ உணவுகளைவிட, கடல் உணவுகளில் எப்போதுமே சத்துக்கள் அதிகம் என்பதால், அவைகளை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ள சொல்கிறார்கள்.. ஒவ்வொரு வகையான மீனிலும் ஒவ்வொரு சத்துக்கள் இருக்கின்றன என்றாலும், சில அடிப்படையான சத்துக்கள் கிட்டத்தட்ட அனைத்து மீன்களிலுமே உள்ளன..

உடல் எடை : அந்தவகையில், உடல் எடையை குறைப்பதிலும், மீன்களின் பங்கு அபரிமிதமானவை.. உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள், மீன்களை சாப்பிடலாம்.. மீன் சாப்பிடுவது வேகமாக எடை இழப்பை ஊக்குவிக்கும். அதாவது 8 வார காலத்தில், மீன்களை மட்டுமே சாப்பிட்டவர்கள் எடை குறைந்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. சாச்சுரேடட் கொழுப்பு இந்த மீன்களில் உள்ளதால் உடல் எடையை அதிகரிக்காது...
இத்தனை நன்மைகள் இருந்தாலும், தினமும் மீன் சாப்பிடுகிறவர்கள், அதனை அதிகமாக சாப்பிடக்கூடாது. ஆனால் மற்ற இறைச்சி வகைகளுடன் ஒப்பிடுகையில் மீனில் குறைந்த அளவு புரதம் மட்டுமே உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கானாங்கெளுத்தி: இதில், உடல்எடை குறைய வேண்டுமானால், கானாங்கெளுத்தியை தேர்ந்தெடுக்கலாம். அதேபோல முரல் மீனை தாராளமாக பயன்படுத்தலாம்.. சங்கரா மீனையும் தேர்ந்தெடுக்கலாம்.
வைட்டமின்கள், பொட்டாசியம், கால்சியம், விட்டமின் பி5 மற்றும் பி6, ஜிங்க், மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், நல்ல கொழுப்புகள் இப்படி ஏராளமாக உள்ளன.. அடுத்ததாக மத்தி, சாளை மீன், சங்கரா மீன், நெத்திலி, சூரை மீன், மத்தி மீன் போன்றவைகளை தேர்ந்தெடுக்கலாம்.. முள் அதிகமாக இருப்பதால், இவைகளை பலரும் தவிர்த்துவிடுவார்கள். ஆனால், அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது இந்த மீன்கள்தான்.
மசாலாக்கள்: அதேபோல, அதிக எண்ணெய், மசாலாக்களை சேர்த்து மீன்களை சமைக்கக்கூடாது.. டயட்டில் இருப்பவர்களாக இருந்தால், உப்பு, மிளகு, ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்து மீனை வேகவைத்து சாப்பிடலாம்.. அல்லது, மிகக்குறைவான மசாலா பொருட்களை மேரனேட் செய்து, கிரில் செய்து சாப்பிட்டால், முழு சுவையும் கிடைக்கும்.. அல்லது நெருப்பில் சுட்டும் சாப்பிடலாம்.. அல்லது சாலட் செய்தும் சாப்பிடலாம்.
உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள், வாரத்தில் 2 நாளாவது சங்கரா மீனை பயன்படுத்தலாம். காரணம், குறைந்த அளவிலான கலோரி அதிக புரதம் கொண்டவை...
சங்கரா மீன்: ஆனால், உடல் எடை குறைய, சங்கரா மீனில் குழம்பு, வறுவல் செய்வதைவிட, கிரில் செய்து சாப்பிட்டால் இன்னும் சத்துக்கள் அதிகம் கிடைக்கும் என்கிறார்கள்.. அல்லது இந்த சங்கரா மீனின் தலையை மட்டுமே வைத்து, சிலர் சூப், ரசம் போல செய்வார்கள். உதாரணத்துக்கு எண்ணெய் சேர்க்காமல், சங்கரா மீன் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
ஒரு தட்டில், சுத்தம் செய்யப்பட்ட சங்கரா மீனின் தோலை நீக்கிவிட்டு, சோயா சாஸ், உப்புதூள், வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து கலந்து வைத்து கொள்ள வேண்டும். சின்ன வெங்ககாயம், இஞ்சி, பூண்டு சேர்த்து சிறிது நீர் விட்டு, ஆவியில் இதனை வேகவைத்து எடுத்து கொள்ள வேண்டும். இத்துடன், கொத்தமல்லி, சிகப்பு மிளகாய் சேர்த்தால் போதும். எண்ணெய் இல்லாமல், ஆவியில் வேகவைப்பதால், இதயத்துக்கு நன்மை தரக்கூடியது. எந்த மீனில் இப்படி செய்து சாப்பிடலாம்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications