ஒல்லி ஒல்லியா உடம்பை கரைச்சிடும் காசினி கீரை.. பெண்களின் வரப்பிரசாதம்.. காசினிக்கீரை "கடவுளின் வரம்"
சென்னை: அனைத்து கீரைகளுமே மருத்துவ பயன்களை அள்ளி தருகிறது என்றாலும், காசினி கீரையின் நன்மைகள் அளவுக்கதிகமானது.. அதிலும், பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய கீரை காசினியாகும்.
காசினி கீரைகள், பார்க்கிறதுக்கு முள்ளங்கி கீரையை போலவே இருக்கும்.. இந்த காசினிக்கீரையின் வேர்கள் கூட நமக்கு பயன்படுகின்றன..

இதன் வேர்ப்பகுதியில் கிடைக்கப் பெறுவதுதான் சிக்கரி.. காப்பி பவுடர் தயாரிப்பதற்கு இந்த சிக்கிரிதான் உதவுகிறது.
வைட்டமின் A, B, C, தாது உப்புகள், கால்சியம், பாஸ்பரஸ் இரும்புச்சத்து, போன்ற மொத்த சத்தையும் தனக்குள் வைத்திருப்பது காசினி கீரையாகும். காணாம்கோழி கீரை என்பதுதான் மருவி, காசினி கீரையாகிவிட்டதாம்.
இதயம்: உடலிலுள்ள உள்ளுறுப்புகள் கல்லீரல், சிறுநீரகம், இதயம் போன்றவைகளின் பிரச்சனைகளை குணப்படுத்தக்கூடிய அளவுக்கு இந்த கீரையில் சக்தி உள்ளதாம்.. தேவையற்ற கொழுப்புகளை நீக்கி இதயத்தை பாதுகாக்கிறது. காசினியை உணவில் சேர்த்து வருபவர்களுக்கு சிறுநீரகத்தில் கற்கள் சேராது.. சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும், காசினியை சாப்பிட்டு வந்தால், மெல்ல கரைய துவங்கும்.
இன்சுலின் சுரப்பை இந்த கீரை சுரக்க செய்வதால், சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய கீரை இதுவாகும்.. இந்த கீரையை சுத்தம் செய்து நன்றாக கழுவி, நிழலில் உலர்த்தி காயவைத்து, மிக்ஸியில் தூள் செய்து வைத்து கொண்டு பயன்படுத்தலாம். காசினிகீரை பொடி என்று நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கிறது. அல்லது இந்த பொடியுடன் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், நீரிழிவு நோய் கட்டுப்படும்.
சர்க்கரை நோய்: சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புண்கள் வந்தால், இந்த கீரையை அரைத்து புண்களின் மீது பற்று போட்டு கட்டினால், சீக்கிரமாகவே புண்கள் ஆறிவிடும். உடலில் எங்கே வீக்கம் இருந்தாலும்சரி, புண்கள் இருந்தாலும், அவைகளை குணப்படுத்தும் தன்மை காசினிக்கு உண்டு.. அல்லது இந்த கீரையின் சாற்றினை, புண்களின் மீது தடவினாலே, புண்கள் ஆறிவிடும்.
ஜீரண கோளாறு, பித்தப்பை, ரத்தசோகை கோளறுகளை நீக்கும் தன்மை காசினிக்கு உண்டு. ரத்தம் சுத்தி அடையும்.. நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.. பற்களில் உள்ள பிரச்சனைகள் தீரும்.. அவ்வளவு ஏன்? இந்த காசினி கீரையுடன் சீரகம், மஞ்சள் சேர்த்து கஷாயம் போல காய்ச்சி குடித்தால் கல்லீரல் வீக்கமும் குறைந்துவிடும். காசினி கீரை விந்தணு உற்பத்தியை ஊக்குவிக்கும்.
காசினி கீரை: உடலிலுள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும் சக்தி இந்த காசினிக்கு உண்டு. காசினி கீரை பொடி செய்து, தினமும் இரவு நேரத்தில் வெந்நீரில் கலந்து சாப்பிட்டாலும் உடல் பருமன் குறைய துவங்குமாம்.
பெண்களுக்கு இந்த கீரை மிகவும் நல்லது.. வெள்ளைப்படுதல் பிரச்சனை இருப்பவர்கள், அல்லது அதிக உதிரப்போக்கால் அவதிப்படும் பெண்கள், காசினிக் கீரையை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.. அல்லது காசினி பவுடரை தேன் கலந்து தினமும் சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும் அல்லது காசினி பொடியை அரை ஸ்பூன் தேனில் குழைத்து 21 நாட்கள் வெறும் வயிற்றில் குடித்தாலும், வெள்ளைப்படுதல் குணமாகும். இத்தனை மருத்துவ குணங்கள் இருப்பதால்தான், இந்த காசினி கீரையை, கடவுளின் வரம் என்று அழைக்கிறார்கள்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications