மினுமினு மீன்கள்..சரும பளபளப்புக்கு இந்த "மீன்கள்" பெஸ்ட் சாய்ஸ்.. மீனில் கிடைக்கும் ஆச்சரிய பலன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மீன்கள் என்றாலே உடலுக்கு பலவழிகளிலும் நன்மைதான் என்றாலும், சரும பாதுகாப்புக்கு, சிலவகை மீன்கள் பேருதவி புரிகின்றன. அதில் ஒருசில மீன்களை பற்றி மட்டும் பார்ப்போம்.

சரும பாதுகாப்புக்கும், சரும பளபளப்புவுக்கும் அடித்தளமாக அமைவது கொழுப்பு நிறைந்த மீன்கள் என்றே சொல்லலாம். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், சருமத்துக்கான ஊட்டச்சத்துக்களில் முக்கியமானதாக திகழ்கின்றன.

Do you know the Excellent Benefits of Kilangan Fish and Sheela Fish is the Best Medicine for Healthy Skin

இந்த கொழுப்புகள், சருமத்தின் உள்ளே நுழைந்து, ஆரோக்கியமான பிரகாச தோற்றத்தை தர உதவுகின்றன.. அத்துடன், சருமத்தை உள்ளிருந்து குணமாக்கி, முகப்பருக்களையும், மருக்களையும், அதன் அடையாளங்களையும் மங்க செய்வதில் பெரும்பங்கு வகிக்கின்றன.

கொடுவா மீன்: அந்தவகையில், கொடுவா மீனை சொல்லலாம்.. ஒமேகா -3 கொழுப்பு, ஒமேகா -6 கொழுப்பு போன்ற அமிலங்கள், வைட்டமின்கள் A, B -12 போன்ற சத்துக்கள் இந்த மீனில் உள்ளன..

புரோட்டீன் அதிகமுள்ள இந்த கொடுவா மீனை, தாரளமாக வாரம் 2 முறையாவது சாப்பிடலாம்.. மீன் எண்ணெய் வளமாக இருப்பதால், இதை உணவாக எடுத்து கொள்ளும்போது, சருமம் பாதுகாக்கப்படுகிறது.. மென்மையை தருகிறது. இந்த மீனை சமைத்து சாப்பிடும்போது, முள்ளுடன் சேர்த்தே சாப்பிட சொல்கிறார்கள். அந்த முள்ளிலும்கூட, நிறைய சத்துக்கள் உள்ளதாம்.

கிழங்கான் மீன்: புரோட்டீன் அதிகமுள்ள மீனில் கிழங்கானும் ஒன்று.. அதனால்தான் வளரும் குழந்தைகளுக்கு இந்த மீனை அடிக்கடி தருவார்கள்.. நரம்பு மண்டலத்தை இந்த கிழங்கான் மீன் பலப்படுத்துகிறது.. மனச்சோர்வை எளிதாக்குகிறது...

கிழங்கான் மீன் சாப்பிடுவது சருமத்துக்கு மிகவும் நல்லது.. தோலில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்கிறது.. அதனால்தான், வெயில் காலங்களில் இந்த கிழங்கான் மீனை நிறைய சாப்பிடுவார்கள்.

ஷீலா / சீலா: உடல் எடையை குறைக்கக்கூடிய மீன்களாக ஷீலா மீன் கருதப்படுகிறது என்றாலும், மிக மிக குறைந்த கலோரிகளும், அளவுக்கு அதிகமான புரதமும் கொண்டதுதான் இந்த ஷீலா மீன்.. சருமத்துக்கும், முடி வளர்ச்சிக்கும் இந்த மீன் மிகவும் நல்லது.. வெறும் ஷீலா மீனை வேக வைத்து உப்பு, மிளகு, ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்து வேகவைத்து சாப்பிட்டால் இன்னும் பலன் கிடைக்கும் அல்லது சுட்டு சாப்பிடலாம்..

மீன்களை சாப்பிடாதவர்களுக்கு, மீன் எண்ணெய் மாத்திரைகள் உதவுகின்றன.. தினமும் 1 மீன் எண்ணெய்யை எடுத்து கொள்வதால், உடலிலுள்ள தேவையற்ற கெட்ட கொலஸ்டிரால் குறைந்துவிடுவதுடன், எடை இழப்பை ஊக்குவிக்கும். சருமம் பளபளப்பாக இருப்பதற்கு இந்த மீன் உதவுவதை மறுக்க முடியாது.. இதனால் தலைமுடியும் பொலிவுபெறும்.

மீன் எண்ணெய்: மின்னும் சருமம் கிடைக்கும். மேலும் இது உங்களுக்கு வயதான மற்றும் சுருக்கமான தோல் ஏற்படுவதை தடுத்து உங்களை எப்போதும் இளமையுடனும் மற்றும் ஆரோக்கியமுடனும் வாழ வழி வகுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+