வெண்டைக்காய்.. சர்க்கரை நோயாளி வெண்டைக்காய் சாப்பிடலாமா.. பெண்களின் அருமருந்து வெண்டைக்காய்
சென்னை: வெண்டைக்காயில் உள்ள நன்மைகள் என்னென்ன தெரியுமா? வெண்டைக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு பயன்தருமா?
வெண்டைக்காயில் வைட்டமின் A, C, E, K, கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், கால்சியம், இரும்புசத்துகள் நிறைந்துள்ளன.. முக்கியமாக, நார்ச்சத்தும், பைட்டோ கெமிக்கல்களும் நிறைந்திருக்கின்றன..

இந்த நார்ச்சத்துக்கள், சர்க்கரை அளவை நிர்வகிக்கவும், கணையத்தின் பீட்டா செல்களின் செயல்பாட்டை மேம்படுத்தவும் தூண்டுகோலாகிறது.. அத்துடன் அதிக கலோரிகளை உட்கொள்வதையும் தடுத்து நிறுத்துகிறது.
ரத்த சோகை: ரத்த சோகை, கொலஸ்ட்ராலுக்கு வெண்டைக்காய் தீர்வை தருகிறது.. நார்ச்சத்து அதிகம் என்பதால், மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கிறது.. வயிற்றுப்புண்களை ஆற்றுகிறது. வெண்டைக்காய் சாப்பிட்டால் அறிவு வளர்ச்சி உண்டாகும்.. ஞாபக சக்தி அதிகரிக்கும். பார்வைக் குறைபாடு என அனைத்து நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்தாக வெண்டைக்காய் உள்ளது.
வெண்டைக்காயில் உள்ள அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளிர்ச்சியாக வைக்கிறது. இதிலுள்ள கரையும் நார்ச்சத்து கொல்ஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுவதால் இதய நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்துக்கள் மிகவும் குறைவு.
வெண்டைக்காய்: ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ள இந்த வெண்டை, சளி, இருமல் போன்றவற்றை குணமாக்குகிறது. சுவாசம் தொடர்பான பிரச்சனை இருந்தால், வெண்டைக்காய் ஊறிய தண்ணீரை குடிப்பது பலன்தரும்... ஆஸ்துமா கோளாறும் நீங்கும். வழவழப்புடன் காணப்படும் இந்த காய், அல்சர் பிரச்சனை உள்ளவர்களுக்கு அருமருந்தாக விளங்குகிறது.. மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகளை குணமாக்குகிறது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு அத்தியாவசியமான போலிக் அமிலம், வெண்டைக்காயில் நிறைய உள்ளது... வெள்ளைப்படுதல் பிரச்சனை இருந்தால், பிஞ்சு வெண்டைக்காயை வேகவைத்து எடுத்த தண்ணீருடன் சர்க்கரை சேர்த்துக்குடித்தால் குணமாகும்.. பச்சையாகவே மென்று சாப்பிட்டால் பற்கள், ஈறுகளுக்கு நல்லது.. கண்பார்வை கூர்மையாகும்.
சர்க்கரை நோயாளி: நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கு, மெட்ஃபோர்மின் மிக முக்கியமான தேவையாகும். எனவே, ஒரு சர்க்கரை நோயாளி, வெண்டைக்காயை நீண்ட காலத்திற்கு உட்கொண்டால், காய்கறியின் நீரிழிவு எதிர்ப்பு விளைவு மருந்தின் விளைவுகளை குறைக்கலாம்.
ரத்த சர்க்கரையின் அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்க வெண்டை உதவுகிறது.. இந்த நார்ச்சத்து, ரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சப்படுவதை தாமதப்படுத்துகிறது.. அதனாலதான், வறுத்த வெண்டைக்காயின் விதைகளை சர்க்கரை நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது.
இதய ஆரோக்கியம்: இதய ஆரோக்கியத்தை பராமரிக்க இந்த வெண்டைக்காய் உதவுகிறது. கர்ப்பிணிகளின் ஹீமோகுளோபின் அளவை பராமரிக்கவும், இரும்புச்சத்து பற்றாக்குறையை போக்கவும், ரத்த சோகை ஏற்படாமலலும் இந்த வெண்டைக்காய் உதவுகிறது.
வெண்டைக்காயில் ஆக்சலேட் அதிகமுள்ளதால், சிறுநீரகம், பித்தப்பை கற்களை வளரச்செய்துவிடும். அதனால், அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது என்பார்கள். அதேபோல, வெண்டைக்காயை அதிகமாக வதக்கினால் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்துவிடுமாம். எனவே, லேசாக வதக்கி இறக்கிவிட வேண்டுமாம்.












Click it and Unblock the Notifications