மட்டன் செய்றீங்களா.. ஆட்டுக்கறியை ஒரேடியா விட்றாதீங்க.. பெரிய பெரிய நன்மைகளை அள்ளி தரும் ஆட்டிறைச்சி
சென்னை: ஆட்டுக்கறி சாப்பிட்டாலே ஆபத்து, என்று பலரும் முழுமையாக ஒதுக்கிவிடுகிறார்கள்.. ஆனால், மாதம் ஓரிரு முறை, குறிப்பிட்ட அளவு ஆட்டுக்கறியை சாப்பிடுவதால் பலவித நன்மைகள் கிடைக்கின்றன.
ஆட்டுக்கறியை பொறுத்தவரை, இதய நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதிகம் எடுத்து கொள்ளக்கூடாது.. அதேசமயம், நம்முடைய உடலுக்கு பலம் தரக்கூடியது இந்த ஆட்டுக்கறி என்பதையும் மறுக்க முடியாது.

ஆட்டுக்கறி: ஆனால், குறைவான எண்ணெய்யில் வேக வைத்தோ அல்லது கிரில் செய்தோ அல்லது கிரேவியாகவோ அல்லது சூப்பாகவே செய்து சாப்பிட்டால், சத்துக்கள் வீணாகாமல் கிடைக்கும். மேலும், மட்டன் சாப்பிடும்போது கண்டிப்பாக, அதனுடன் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும்.. இதனால், மட்டனில் உள்ள கொழுப்புக்கள் உறிஞ்சப்பட்டுவிடும்..
குறிப்பாக, உடல் சூட்டை தணிக்கக்கூடியது.. தோலுக்கு வலிமை தருவதுடன், சருமத்துக்கான பளபளப்பையும் தரக்கூடியது. மட்டன் சாப்பிடுவதால், நம்முடைய பார்வை கோளாறுகள் நீங்குவதுடன், கூர்மையான பார்வைகளுக்கு உதவுகிறது என்றே சொல்லலாம். இதைத்தவிர, வேறென்ன நன்மைகள் இந்த ஆட்டுக்கறியிலிருந்து கிடைக்கிறது தெரியுமா?
மலட்டுத்தன்மை: ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மை பிரச்சனைகளை இந்த ஆட்டுக்கறி நீக்குகிறது.. அதேபோல, டைப்-2 நீரிழிவு ஏற்படுவதை இந்த மட்டன் தடுக்கும் என்கிறார்கள். உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்ய இந்த மட்டன் உதவுகிறது.. குழந்தைகளுக்கும் இந்த மட்டனை தருவதால், அவர்களின் மூளையின் செயல்பாடு சிறப்பாக இருக்கும்.. ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.
மட்டனை சாப்பிட்டால் வெயிட் போட்டுவிடும் என்று நினைக்கிறார்கள்.. ஆனால், உடல் எடையை விரைவில் குறைக்க வேண்டுமானால், மட்டன் சாப்பிடுவது சிறந்தது என்கிறார்கள்.. காரணம், இதிலுள்ள புரோட்டீன் பசியை கட்டுப்படுத்துவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கிறதாம். அத்துடன், கொழுப்புக்கள் மட்டனில் குறைவாக இருப்பதால், உடல் எடை அதிகரிப்பதையும் தடுக்கிறதாம்.
கர்ப்பிணிகள்: அதேபோல, கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ரத்த சோகை ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், எனவே, கர்ப்பிணிகளும் மட்டனை சாப்பிட்டால் நன்மை கிடைக்கும் என்கிறார்கள். இதனால், இரும்புச்சத்து குறைபாடு நீங்குவதுடன், கருப்பையில் ரத்த ஓட்டம் சீராக செல்ல வழிவகுக்கும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கை தடுப்பதுடன், அந்த நேரத்தில் ஏற்படும் வலியையும் தடுக்க இந்த மட்டன் உதவுகிறது.
புற்றுநோய்களை தடுக்கும் செல்கள், இந்த ஆட்டுக்கறியில் உள்ளன. இந்த கறியில் வைட்டமின் B, செலினியம், கோலைன் போன்றவை உள்ளதால், புற்றுநோய்கள் நம்மை அண்டாது.. அதேபோல, ஆட்டின் ஒவ்வொரு பாகமும்கூட, ஒவ்வொரு நன்மைகளை தரக்கூடியது.. ஆட்டின் கொழுப்புகள், நம்முடைய உடலுக்கு வெப்பத்தை குறைத்துக் குளிர்ச்சியை தருகிறது..
நுரையீரல்: ஆட்டின் நுரையீரல், இடுப்பு பகுதிக்கு வலிமையை கூட்டுகிறது. ஆட்டின் நெஞ்சு பகுதிகள், நம்முடைய கபத்தை நீக்குகின்றன.. மார்புக்கும் பலத்தை தருகின்றன. இதில், வைட்டமின் A, B, C உள்ளதால், கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. ஆட்டின் இதயம், மன ஆற்றலை பெருக்கக்கூடியது..
ஆட்டு கால்களை சூப் வைத்து சாப்பிடும்போது, நம்முடைய கால்களுக்கு பலத்தை தருகிறது.. ஆட்டு மூளையில், கெட்ட கொழுப்பு ரொம்ப ரொம்ப குறைவு.. இதிலுள்ள பாஸ்பரஸ், நம்முடைய கிட்னியில் உள்ள கசடுகளை நீக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது.. ஆட்டின் தலைக்கறியை சாப்பிடுவதால், நம்முடைய இதயம் சார்ந்த வலி தீரும்.. ஆட்டின் குடல் பகுதி, செரிமானக் கோளாறுகளை தீர்க்கிறது. அல்சர் பிரச்சனையையும் தீர்க்கிறது.
சிவப்பு இறைச்சி: ஆனால், இத்துணை நன்மைகள் இருந்தாலும்கூட, ஆட்டுக்கறியை அளவுடன் எடுத்து கொள்வதே நல்லது. காரணம், சிவப்பு இறைச்சி செரிக்கப்படும்போது, ஒரு மெட்டாபொலிட் வெளியாகிறது என்று சமீபத்திய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது...
சிவப்பு இறைச்சியை அதிக அளவில் உட்கொள்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு இதுவே காரணம். அதனால், ஆரோக்கிய உடல்நலத்துடன் இருப்பவர்கள், 10 நாட்களுக்கு ஒருமுறை, குறைந்த அளவு சாப்பிட்டாலே போதுமாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications