சர்க்கரை நோயாளிகள்.. தேங்காய் சாப்பிடலாமா? பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாமா? நீரிழிவு நோயாளியின் பெஸ்ட் உணவு
சென்னை: சர்க்கரை நோயாளிகள் தேங்காய் சாப்பிடலாமா? இளநீர் குடிக்கலாமா? வேர்க்கடலை சாப்பிடலாமா? இதன் அளவுகோள்கள் என்ன? இப்படி பல சந்தேகங்கள் நிலவுகின்றன.
நீரிழிவு நோயை எந்நேரமும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு உணவுப்பழக்கத்தையும் நீரிழிவு நோயாளிகள் சரியாக கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது. சர்க்கரை நோயாளிகளை பொறுத்தவரை, அதிக அளவு சிறுநீர் கழிப்பதும், உடல் சோர்வுகளும் இருக்கும்..

சத்தான உணவுகள்: இதை சரிக்கட்ட சத்தான உணவுகளை சாப்பிட வேண்டி உள்ளது. ஆனால், எதை சாப்பிட்டாலும் சுகர் ஏறிவிடுவதாக ஒரு கலக்கம் இருக்கத்தான் செய்கிறது. அதிலும், வேர்க்கடலை மற்றும் தேங்காயை சாப்பிடலாமா என்ற சந்தேகமும் உள்ளது.
காரணம், தேங்காயை சாப்பிடுவதால், சர்க்கரை அளவு கூடிவிடும் என்று நம்புகிறார்கள். இந்த தேங்காயில் ஏகப்பட்ட நார்ச்சத்துக்கள் உள்ளன.. கார்போ ஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின் C, B காம்ப்ளக்ஸ், இன்னும் பல ஊட்டச்சத்துகள் உள்ளதால், இதை தவிர்க்கக்கூடாது என்கிறார்கள். அதிலும், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகமுக்கியமாக தேவைப்படுவது நார்ச்சத்தும், கார்போஹைட்டுகளும்தான். இவை இரண்டுமே தேங்காயில் உள்ளன. இதனால், ரத்த சர்க்கரை அதிகரிப்பதும் தடுக்கப்படுகின்றன.
தேங்காய்பால்: எனவே, தேங்காயை பால் எடுத்து சாப்பிடாமல், தேங்காயுடன் சேர்த்து மென்று சாப்பிடும்போது, நார்ச்சத்து முழுமையாக கிடைக்கிறது.. ஆனால், எவ்வளவு தேங்காயை சாப்பிடுகிறோம் என்பதுதான் முக்கியம்.
100 கிராம் தேங்காயில் 444 கலோரிகள் இருக்கிறதாம்.. 4.5 கிராம் புரோட்டீனும் நார்ச்சத்தும் உள்ளன.. இதுவே கொப்பரை தேங்காயில் 660 கலோரிகள் இருக்கின்றன, அதனால், சர்க்கரை நோயாளிகள் தினமும் தேங்காய் சட்னி, தேங்காய் துவையல் போல எடுத்து கொள்ளாமல், துருவிப்போடும் பொரியல்களை சாப்பிடலாம்.. வெறும் தேங்காயை அதிக அளவில் அப்படியே சாப்பிட கூடாது.
இதில் இளநீரையும் சேர்த்து கொள்ளலாம்.. இளநீரில் இயற்கையாகவே சர்க்கரை கூறுகள் இருப்பதால், குறைந்த அளவில் எடுத்து கொள்ளலாம். இதனால், சிறுநீரகம் காக்கப்படும்.. சிறுநீரக கற்கள் உருவாவதும் தடுக்கப்படும்.. வாரத்திற்கு 3 முறை, ஒரு டம்ளர் இளநீர் குடிக்கலாம்.
வேர்க்கடலை: சர்க்கரை நோயாளிகளுக்கு வேர்க்கடலை மிகவும் நல்லது.. சர்க்கரையின் அளவு இதில் குறைவு என்பதுடன், இதிலுள்ள மெக்னீசியம், இன்சுலினை சுரக்க செய்யும் ஹார்மோனை துரிதப்படுத்தி, சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்துகிறது..
இந்த வேர்க்கடலையில் ஆரோக்கியமான கொழுப்பு, புரதம், நார்ச்சத்து, தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளதால், நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
எனவே பெண்கள், 25 கிராம் வேர்க்கடலையும், ஆண்கள் 38 கிராம் வேர்க்கடலையும் சாப்பிடலாம் என்கிறார்கள். சிலருக்கு வேர்க்கடலை அர்ஜியை தரக்கூடும் என்பதால், அவர்கள் இதனை தவிர்த்துவிடலாம். மற்றபடி, சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வேர்க்கடலையை தாராளமாக சாப்பிட்டு வரலாம்.
பீட்ரூட்: அதேபோல, சர்க்கரை நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடலாமா? என்ற சந்தேகம் உள்ளது.. இது தித்திப்பு காய் என்றாலும், தீங்கு விளைவிக்காத இயற்கை சர்க்கரை இதில் உள்ளது.. பீட்ரூட்டில் ஏராளமான நார்ச்சத்துக்கள் உள்ளன.. மேலும், பொட்டாசியம், இரும்புச்சத்து, மெக்னீசியம் போன்ற சத்துகளும் அதிக அளவில் உள்ளதால், டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு பீட்ரூட் மிகவும் நல்லது என்று ஆய்வுகள் சொல்கின்றன. அதிலும், உணவுக்கு முன்பு, பீட்ரூட் சாப்பிட்டால், கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications