ஜஸ்ட் இலை போதும்.. கண்ணெதிரே மாறும் ஆச்சரியம்.. கொழுப்பு கரைக்கும் அற்புத ஜூஸ்.. வியப்பூட்டும் கீரை

Subscribe to Oneindia Tamil

சென்னை: முள்ளங்கி கீரைகளில் ஏகப்பட்ட மருத்துவ நன்மைகள் ஒளிந்திருக்கின்றன.. இதெல்லாம் தெரியாமலேயே, முள்ளங்கியை மட்டும் எடுத்துக் கொண்டு, அந்த கீரையை தூக்கி தூரப் போட்டுவிடுகிறோம்.

புரோட்டீன், கார்போஹைட்ரேட், குளோரின், சோடியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், போன்ற சத்துக்களுடன் வைட்டமின் A, B, C, சத்துக்களும், இந்த இலையில் உள்ளன.. இந்த முள்ளங்கி கீரையில் முக்கியமாக இருப்பது நார்ச்சத்துக்கள்தான்.. முள்ளங்கியில் இருப்பதைவிட‌ 6 மடங்கு, வைட்டமின் C, இந்த முள்ளங்கியின் கீரையில் உள்ளதாம்.

Do you Know the Excellent Benefits of Radish Leaves and Radish Leaf Juice is the Best tips for Weight Loss

சத்துக்கள்: இந்த கீரையிலிருந்து சாறு எடுத்து பல கோளாறுகளுக்கு தீர்வு காணலாம்.. குறிப்பாக, முள்ளங்கி கீரை சாறு, ஆண்மை கோளாறை நீக்க உதவுகிறது.. கீரை சாற்றினை, பாதாம் பருப்பையும் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் ஆண்மை பெருகுமாம்..

அடுத்ததாக, இந்த கீரையின் சாறு, மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது.. தினமும் 3 வேளைகளும் 1 ஸ்பூன் சாறு சாப்பிட்டு வந்தாலே மலச்சிக்கல் தீர்ந்துவிடும்..

சிறுநீரக கற்கள்: இந்த கீரையின் சாறு எடுத்து 6 ஸ்பூன் குடித்து வந்தாலே சிறுநீரகத்திலுள்ள கற்கள் வெளியேறிவிடுமாம். அல்லது முள்ளங்கி கீரையை பொடியாக நறுக்கி, சிறிதளவு பார்லியையும் சேர்த்து வேகவைத்து, கஞ்சி போல சாப்பிட்டு வரலாம்.

அதே போல, சர்க்கரை நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த கீரை சாறு, நல்ல தீர்வினை தருகிறது. முள்ளங்கி கீரையை கழுவி சுத்தம் செய்து, சாறு பிழிந்து, அந்த சாற்றில் வெந்தயத்தை ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி வைத்து கொள்ள வேண்டும். இதில், தினமும் காலை மாலை 2 வேளையும் சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோய் குணமாகுமாம்.. எனவே, டாக்டர்களின் ஆலோசனையை பெற்று, இந்த இலைகளை மருந்தாக பயன்படுத்த வேண்டும்.

முள்ளங்கி சாறு: முள்ளங்கிக் கீரை சாற்றுடன், வெல்லம் கலந்து சாப்பிட்டாலும் கல்லீரல் நோய்கள் குணமாகும். கல்லீரல் குறைபாடுகளை தீர்ப்பதில் முள்ளங்கி கீரைக்கு பெரும்பங்கு உண்டு.. அதனால்தான், மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் ஒரு வேளையாவது, இந்த கீரையை சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.

கல்லீரல் மட்டுமல்லாமல், சிறுநீரகம், இதயம், கண்கள், தோல் போன்ற அனைத்து உறுப்புகளும் சீராக செயல்பட இந்த இலைகள் துணைநிற்கின்றன.. கால்சியம் நிறைந்த இந்த கீரையை, கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும், கட்டாயம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். வயிறு வலி இருப்பவர்கள், இந்த கீரையை வெந்தயம் ஊறவைத்த நீரில் அரைத்து சாப்பிட்டால் வலி தீரும்..

ரத்த அழுத்தம் பிரச்சனை: ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்களும், உடல் எடை குறைக்க நினைப்பவர்களும் இந்த கீரையில் ஜூஸ் தயாரித்து குடிக்கலாம். இலைகளை சுத்தம் செய்து, நன்றாக கழுவி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து கொள்ள வேண்டும்.

இதனுடன் சிறிது கல் உப்பு, சிறிது கருப்பு மிளகு தூள், எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால், செரிமானம் எளிதாகும்.. கொழுப்புகள் மளமளவென்று கரைய துவங்கும்.. இதனால், உடல் எடையும் குறைய துவங்கும்.. குறைந்த இரத்த அழுத்தம் பிரச்சனையும் தீரும்..

வெயிட் லாஸ்: உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்த கீரையின் சாறு தினமும் குடித்து வரலாம்.. அல்லது சூப் போலவும் பயன்படுத்தலாம். நார்ச்சத்துக்கள் அதிகம் என்பதுடன், கலோரிகளும் குறைவாக இருக்கக்கூடிய கீரை இதுவாகும். கெட்ட கொழுப்புகளையும் கரைக்கும் வேலையை, இந்த கீரைகள் எளிதாக செய்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+