சர்க்கரை நோயாளி "வாழைக்காய்" சாப்பிடலாமா.. இது தெரியாம போச்சே.. வாழ வைக்கும் வாழைக்காய்.. அசத்துதே
சென்னை: வாழைக்காயை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா? வாழைக்காய் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? கூடுமா?
வாழைக்காயில் உள்ள நன்மைகளை லிஸ்ட் போட்டு சொல்ல முடியாது.. குடலை சுத்தப்படுத்துவது முதல் புற்றுநோய் தடுப்பு வரை அனைத்து பிரச்சனைகளையும் இந்த வாழை சரி செய்கிறது.

எதிர்ப்பு மண்டலம்: நோய் எதிர்ப்பு மண்டலத்தின் சக்தியை அதிகரிக்க செய்ய இந்த வாழை உதவுகிறது.. இதய ஆரோக்கியத்திற்கும், மூளையின் செயல்பாடுகளுக்கும் நல்லது. அதேபோல, குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் அழிவதை தடுப்பதுடன், கொழுப்பு செல்களை அழிப்பதிலும் வாழைக்காய்க்கு நிறைய பங்குண்டு. பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கியுள்ள கழிவுகளையும், நச்சு பொருட்களையும் வெளியேற்றுகிறது இந்த வாழைக்காய்.
வாழைக்காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளையும்,நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. எனவே வயிற்றில் புற்று நோய் ஏற்படாமல் இருக்க அதிகம் வாழைக்காய் சாப்பிட வேண்டும்.
எலும்புகள்: நம்முடைய எலும்புகளின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் தேவையான பண்புகள் இந்த வாழைக்காயில் உள்ளன.. வைட்டமின், கால்சியம், மெக்னீசியம் என சத்துக்கள் நிறைந்துள்ளதால், எலும்புகள் பலம்பெறுகின்றன.. மேலும், மூட்டு வலி உட்பட எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளிலிருந்தும் காப்பாற்றுகிறது.
ஏகப்பட்ட நார்ச்சத்துக்கள் இருப்பதால், செரிமானம் சீராகிறது.. வயிறு நிறைந்த உணர்வு கிடைக்கிறது.. அதிக கலோரிகளை நீக்கி, ஆரோக்கியமான முறையில் எடை இழப்புக்கு இந்த வாழைக்காய் உதவுகிறது. எனவே, தினம் ஒரு வாழைக்காய் சாப்பிடலாம். இது எல்லாவற்றையும்விட முக்கியமாக, பொட்டாசியம் நிறைந்த இந்த வாழைக்காய் இதயத்துக்கு நன்மை தடுகிறது.. ரத்த அழுத்தத்தையும் சீராக வைத்திருக்க உதவுவதுடன், இதய நோய்கள் நம்மை நெருங்க விடாமல் இருக்கவும் வாழைக்காயின் பங்கு ஏராளம்.
நீரிழிவு: வாழை என்றாலே சர்க்கரை நோயாளிகள் ஒதுக்கி தள்ள தேவையில்லை.. வாழைப்பழத்தைவிட இதில் இனிப்பு குறைவு என்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு வாழை சிறந்தது. அதாவது, 55- க்கும் குறைவான கிளைசெமிக் குறியீடு மட்டுமே இந்த வாழையில் உள்ளதால், சர்க்கரையை அதிகமாகாமல் தடுக்கிறது.. முக்கியமாக, உடலில் இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் குளுகோஸின் அளவை கட்டுப்படுத்த செய்கிறது.
வாழைக்காயை வாரம் மூன்று முறை சாப்பிடலாம் என்றாலும், ஒரு வாழைக்காயில் 90 கலோரிகள் இருப்பதால், மருத்துவர்களின் ஆலோசனையுடன் அளவுடன் எடுத்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications