தொங்குதா ஊளைச்சதை.. அப்ப இந்த டீயை குடிச்சி பாருங்க.. கூடவே, லவங்கப்பட்டை, மிளகு இதையும் விட்றாதீங்க
சென்னை: மூலிகை நிறைந்த பானங்களை குடித்து வந்தால், உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு பேருதவியாக இருக்கும். அந்தவகையில், ஒருசில தேனீர் வகைகளை பார்ப்போம்.
உடல் எடையை குறைக்க வேண்டுமானால், டீ குடிப்பது சிறந்த சாய்ஸ் என்கிறார்கள்.. அந்தவகையில், பிளாக் டீ, பிளாக் காபி குடிக்கலாம்.. உள்ளுறுப்புகளுக்கு இந்த காபி மிகவும் நல்லது.. கல்லீரலை பாதுகாப்பதுடன், கல்லீரலை சுற்றியுள்ள கொழுப்புகளையும் கரைக்க இந்த பிளாக் காபி உதவுகிறது.. 2 பிளாக் காபி குடித்து வந்தாலே, கலோரிகள் குறைய துவங்கும் என்கிறார்கள்.

பிளாக் காபி: காஃபின் உள்ளதால், மெட்டா பாலிசத்தை அதிகரிக்க இது தூண்டுகிறது.. ஆற்றலை அதிகரிக்க செய்து, பசி உணர்வு தெரியாமலும் வைக்கிறது.. சாப்பிட்டு முடித்ததுமே, நிறைய பேர் பிளாக் காபி குடிப்பது இதற்காகத்தான்.. இதனால் கெட்ட நீர் வெளியேறி உடல் எடையும் குறையும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. நீர்ச்சத்தை குறைக்க உதவுவதுடன், சிறுநீரை வெளியேற்றவும், இந்த பிளாக் காபி உதவுகிறது.
லவங்கப்பட்டையிலும் டீ போட்டுக் குடிக்கலாம்.. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.. உடலின் வளர்சிதை மாற்றத்தையிம் மேம்படுத்துகிறது.. தினமும 2 வேளை லவங்கப்பட்டை டீ குடிப்பதானால், நம்முடைய உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெற முடிகிறது..
வெள்ளை மிளகு: அதேபோல கருப்பு மற்றும் வெள்ளை மிளகுகள் இரண்டுமே உடல் எடையை குறைக்க உதவுகின்றன.. இரண்டுமே நன்மை நிறைந்தவை.. கருப்பு மிளகில் மக்னீசியம், இரும்பு, வைட்டமின் கே, நார்ச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றிகள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிரம்பு உள்ளன. அஜீரணக்கோளாறுகளை தீர்ப்பதில் முதன்மையானது மிளகுதான். உடலை நச்சுக்களிலிருந்து காப்பாற்றி, புற்றுநோயிலிருந்தும் விடுவிக்க உதவுவது இந்த மிளகுதான்.
மிளகில் உள்ள பைப்பரின் என்ற சேர்மம், நம்முடைய உடலிலுள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்கிறது. இந்த மிளகில் டீ போட்டு குடிப்பதால், கொழுப்புகள் குறைவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்..
உடல் எடை: அதுபோலவே வெள்ளை மிளகும், நம்முடைய உடல் எடையை குறைக்க உதவுகிறது. காரணம் இதில் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது.. அதனால்தான், ஆயுர்வேதத்தில், முக்கியமான இடத்தை பெற்றுள்ளது இந்த வெள்ளை மிளகு..
ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதில் ஒரு ஸ்பூன் வெள்ளை மிளகுத்தூள் கலந்து, கொதிக்கவிட வேண்டும்.. 1 டம்ளராக தண்ணீர் சுண்டியதும், எலுமிச்சை சாறு, தேன் கலந்து குடிக்க வேண்டும். காலையில் இந்த டீ குடித்து வந்தால் உடல் எடை குறையும்.. மேலும், செரிமான மண்டலம் வலுவடைந்து, அது தொடர்பான பிரச்சனைகள் குறைய தொடங்குகின்றன.
மிளகு தண்ணீர்: மிளகுகளில் டீ போல தயாரிக்க முடியாவிட்டாலும்கூட, வெறும் மிளகு தண்ணீரை குடித்தாலே போதும் என்கிறார்கள்.. இதனால், குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் அதிகரிக்க செய்வதுடன், உடல் எடையும் குறையும். தண்ணீரை கொதிக்க வைத்து, குடித்தால் கலோரிகளும் எரிக்கப்படும். அதேபோல இஞ்சி டீ, துளசி டீயையும் தினம் 2 வேளை குடிக்கலாம்.
உடல் எடை குறைக்க வேண்டுமானால், பச்சை காய்கறிகள், பழங்கள், போதுமான தூக்கம், முறையான உடற்பயிற்சி, ஆரோக்கியமான சூழ்நிலை, நிறைய தண்ணீர் குடிப்பது... இதெல்லாம்தான் மட்டுமே அடிப்படையாக தேவையாகும். எனினும், இதுபோன்ற காபி, டீ போன்ற பானங்களும், எடை குறைப்பதற்கு தூண்டுகோலாய் உதவுபுரிகின்றன.












Click it and Unblock the Notifications