ஒரே கொட்டை.. அதுதான் முந்திரிக்கொட்டை.. வேர்க்கடலை + பாதாம் பருப்பு.. நீரிழிவு நோயாளி சாப்பிடலாமா?
சென்னை: பாதாம் பருப்பு, வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு போன்றவைகளை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா? என்ற சந்தேகம் இருந்து கொண்டே வருகிறது.. அப்படியென்ன சத்துக்கள் இந்த பருப்புகளில் உள்ளன?
பொதுவாக, பாதாம்பருப்பு சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரித்துவிடும் என்பார்கள். ஆனால், அது தவறு.. தினமும் 5 பாதாம் பருப்புகளை சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் பிரச்சினை தீர்கிறது என்பதே ஆச்சரியமான உண்மை. உடலிலுள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்வதில் பாதாமுக்கு பெரும் பங்கு உள்ளது.

பாதாம் பருப்புகள்: பாதாம் பருப்புகளில், கால்சியம் நிறைந்துள்ளது.. இதனால், புற்றுநோய் செல்கள் நம்மை எளிதில் தாக்காமல் தடுக்கப்படுகிறது.. மலச்சிக்கல் தீர்கிறது.. சுவாசக் கோளாறுகள் நீங்குகின்றன.. இதய கோளாறுகள் சரியாகின்றன.. சரும பிரச்சனைகளும் சரியாகின்றன.. தலைமுடி வளர்ச்சி அதிகரிக்க செய்கிறது இந்த பாதாம் பருப்புகள்.
ஹீமோகுளோபின் பிரச்சனை உள்ளவர்களும், ஆண்மைக் குறைவு பிரச்சனை இருப்பவர்களும்கூட, பாதாம் பருப்பை சாப்பிட்டால் தீர்வுகிடைக்கும்.. வெறும் பாதாம் பருப்பை சாப்பிடுவதைவிட, ஊறவைத்த பாதாம் இன்னும் சத்துக்கள் அதிகமானவை.. காரணம், இது ஜீரணிக்க மிகவும் எளிதானது.. செரிமானமும் எளிதாகிறது..
நார்ச்சத்துக்கள்: ஊறவைக்கும்போது நன்மைகள் பெருகுகின்றன. சில ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை தடுக்கக்கூடிய அசுத்தங்களும் இதனால், நீங்குகின்றன. ஆனால், சர்க்கரையை நோயையும் இந்த பாதாம் கட்டுப்படுத்துகிறது. நார்ச்சத்து நிறைந்த பருப்பு என்பதால், ரத்தத்தில் சர்க்கரையின் அதிகரிப்பையும் தடுக்க உதவுகிறது..
அதேபோல, வேர்க்கடலையும் கெட்ட கொழுப்புகளை நீக்கி, நல்ல கொழுப்புகளை அதிகரிக்க செய்கிறது.. கார்போஹைட்ரேட்டுகளும் வேர்க்கடலையில் குறைவு.. நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், உடல் எடையை நிர்வகிப்பதில், வேர்க்கடலை சிறந்து விளங்குகிறது. சர்க்கரை நோயாளிகளும், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களும், வாரம் ஒருமுறை, ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிட வேண்டும்.
வேர்க்கடலை: ஆனால், உப்பில் ஊறவைத்த வேர்க்கடலை சாப்பிடக்கூடாது.. அதேபோல சட்னி செய்வதாக இருந்தால் வாரம் ஒருமுறை வேர்க்கடலை சட்னி செய்து சாப்பிடலாம். 6 மணி நேரம் ஊறவைக்கப்பட்ட வேர்க்கடலையை சாப்பிட்டால் இன்னும் நல்லது.
முந்திரிப்பருப்புகளை பொறுத்தவரை, புரோட்டீன்கள், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்ற சத்துக்கள் உள்ளன.. பீட்டா கரோட்டீன், டானின் என்று சொல்லக்கூடிய ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் சத்துக்களும், ஆரோக்கியமான கொழுப்புக்களும் அடங்கியிருப்பதால்தான், இதனை "இதயத்தின் தோழன்" என்கிறார்கள்.
முந்திரி பருப்பு: முந்திரி பருப்பை, சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.. குறிப்பாக, டைப்-2 நீரிழிவு நோயாளிகள் முந்திரி பருப்பை சாப்பிட்டால் நல்லது என்கிறார்கள்.. இதனால், ரத்த குளுக்கோஸின் அளவு குறைகிறதாம்.. பச்சை முந்திரியைவிட, ஊறவைத்த முந்திரி சாடப்பிட்டால், ஜீரணமாகும். எனவே, பாதாம், வேர்க்கடலை, முந்திரி இவைகளில் எதுவானாலும், வாரம் ஒருமுறை "குறிப்பிட்ட" அளவு மட்டுமே சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியம் தழைக்கும்.












Click it and Unblock the Notifications