Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அத்திப்பழம்.. அத்தி பூத்தாற்போன்ற அதிசய பழம்.. ஆயுசை கூட்டும் அத்திப்பழம்.. ஆரோக்கியமும் தழைக்கும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உடல் எடையை குறைக்க பெரிதும் உதவக்கூடியது அத்திப்பழம்.. இந்த பழத்தில் உள்ள சத்துக்கள் என்னென்ன? சர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தை சாப்பிடலாமா?

அத்திப்பழத்தில், வைட்டமின் C, A, K, E, இரும்புசத்து, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், தயாமின், நார்சத்து போன்ற சத்துக்கள் உள்ளன.. ரத்தம் அழுத்தம் பிரச்சனை இருப்பவர்களுக்கு அத்திப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். ரத்த நாளங்களில் உள்ள அழுத்தத்தை குறைக்க இந்த பழம் பேருதவி புரிகிறது.

Do you know the Excellent Health Benefits in Figs and Soaked figs Fruits are the Good for High Blood Pressure, Heart Diseases

எனவே, உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள், தினமும் 2-3 பழங்களை சாப்பிடலாம்.. இந்த பழங்களை தண்ணீரில் ஊறவைத்தும் சாப்பிடலாம்..

அனீமியா: அதேபோல அனீமியா பிரச்சனை உள்ளவர்களும் அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் பெரும்பலனை அடையலாம்.. உடலில் ஹீமோகுளோபின் குறைவாக இருந்தால், தினமும் 3 முதல் 5 வரை அத்திப்பழங்களை தண்ணீரில் ஊறவைத்துவிட வேண்டும்.. பிறகு மறுநாள் காலையில் ஊறவைத்து தண்ணீருடன், பழத்தையும் சாப்பிட்டு வந்தால், ரத்தம் உற்பத்தி அதிகமாகும்.. சோகையும் தீர்ந்துவிடும்.

சர்க்கரை நோயாளிகளை பொறுத்தவரை, சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவும் நார்ச்சத்து, அத்திப்பழத்தில் உள்ளது. ஆனாலும், இந்த பழத்தில் தித்திப்பும் உள்ளது.. அதனால், காய்ந்த பழத்தை நேரடியாக சாப்பிடுவதை தவிர்த்து, பச்சையான அத்திக்காயை சாப்பிடலாம்.. அத்திக்காயில் பொரியல், கூட்டு போல சமைத்து சாப்பிட்டால், நார்ச்சத்து முழுமையாக கிடைக்கும்.. அத்துடன், இந்த நார்சத்து ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் கட்டுக்குள் வைத்திருக்கும்.

பலவீனங்கள்: அதேபோல, பாலியல் நோய்களை போக்கவும், ஆண்மை குறைபாடுகளை போக்கவும் இந்த அத்திப்பழம் உதவுகிறது. உடல் பலவீனத்தை குறைத்து, நரம்புகளை பலப்படுத்த அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தாலே போதுமாம்..

இந்த அத்திப்பழத்தை தினமும் இரவில் ஊற வைத்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.. அல்லது இரவு தூங்கும் முன் பாலில் இதை கலந்து குடித்தாலும் பலன் கிடைக்குமாம். தாம்பத்யத்தில் ஈடுபாடு குறைந்திருப்பவர்களும், இரவு நேரத்தில் 2, 3 அத்திப்பழத்தை சாப்பிட்டுவிட்டு வந்தால், பாலுணர்வு அதிகரிக்க செய்யும் என்கிறார்கள்..

இந்த பழத்தில் கலோரிகள் மிகவும் குறைவு.. கொழுப்பும் மிகவும் குறைவு.. அதனால்தான், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், அத்திப்பழத்தை தேர்வு செய்யலாம்..

கால்சியம் பிரச்சனை: பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு போலவே, கால்சியம் குறைபாடுகளும் ஏற்படும்.. அந்த குறையையும் அத்திப்பழம் போக்குகிறது. உலர் அத்திப்பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது, எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க செய்கிறதாம். இதனால், மூட்டு வலி, முதுகு வலி, முழங்கால் வலி போன்ற எலும்பு சார்ந்த பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.

ஏகப்பட்ட ஆன்ட்டி-ஆக்சிடன்ட் சத்துகளை கொண்ட இந்த பழம், புற்றுநோய் செல்களை அண்ட விடுவதில்லை.. இதய நோய்களை நெருங்க விடுவதில்லை. உடலிலுள்ள வாதம், பித்தத்தை போக்க அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தாலே போதும்..

மலச்சிக்கல்: மலச்சிக்கல் என்றாலே பழங்கள் சாப்பிடுவார்கள்.. ஆனால், இந்த அத்திப்பழம் நாள்பட்ட மலச்சிக்கலை தீர்க்கக்கூடியதாம்.. குடலை சுத்தம் செய்து, குடல் தொற்று, ஆசனவாய் வெடிப்பு, உள்ளிட்ட பிரச்சனைகளையும் சேர்த்து தீர்க்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+