Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீனில் பெஸ்ட் மீன் இதுதான்.. மீனின் கண்களில் இத்தனை ஆச்சரியமா? சர்க்கரை நோயாளிக்கு சூப்பர் உணவு இது

Subscribe to Oneindia Tamil

சென்னை: மீன்களின் கண்களில் உள்ள சத்துக்களை அறிந்தால், அதை நீங்க எப்பவுமே மிஸ் பண்ண மாட்டீங்க.. மீன்களின் கண்களில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா?

பெரும்பாலானோர் மீன்களை வாங்கும்போதே, மீனின் தலைகளை வெட்டியே வாங்குவார்கள்.. தலைகளை தூக்கி எறிவதுபோலவே, அதன் முட்களையும் வீசிவிடுவோம். ஆனால், மீன்களை காட்டிலும், இந்த தலையிலும், முட்களிலும்தான் ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளனவாம்.

Do you know the Excellent Health Benefits in Fish Eyes and fish Eyes are the Best for Sugar Patients

ஊட்டச்சத்துக்கள்: பல வைட்டமின்களும், பல தாதுக்களும், பல ஆரோக்கியமான கொழுப்புகளும், பல சத்தான புரதங்களும் இந்த மீன் தலைகளுக்குள் நிறைந்துள்ளன.

பிற இறைச்சி வகைகளில் இல்லாத அளவுக்கு, செறிவூட்டப்பட்ட கொழுப்புகள், இந்த மீனின் தலைப்பகுதியில் மிகவும் குறைவாக இருக்கிறதாம். அதனால், மீன் தலையை சாப்பிட்டால், கொழுப்புகள் உடலில் கூடாது.. பக்கவாதம், மாரடைப்பு போன்ற இதய நோய்கள் குறையும்..

ஊட்டச்சத்துக்கள்: அதிலும் மீன்களின் கண்களில் அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.. மீன் கண்ணில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரோட்டீன், வைட்டமின்கள், தாதுக்கள் என பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பல நோய்களை எதிர்ப்பதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதேபோல், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பெரும்பங்களிப்பை தருகின்றன.
நம்முடைய உடலுக்கு, கொலாஜன் என்ற ஒருவகை புரதம் தேவைப்படுகிறது.. தோல், மூட்டுகள், முடி மற்றும் நகங்களுக்கு இந்த கொலாஜன்தான் அடிப்படை தேவையாக உள்ளது.. மீன்களில் இந்த கொலாஜன் தனிமம் அதிகமாகவே உள்ளது.. மீன் கண்களை உணவில் நாம் சேர்த்து கொள்வதால், உடலுக்கு தேவையான கொலாஜினை பெறலாம்.

மன அழுத்தம்: மீன் கண்களை சாப்பிடுவதால், மன அழுத்தமும், மன பதற்றமும் நீங்குகிறது.. மன இறுக்கத்தை எதிர்த்துப் போராடி விடுவிக்கும். மீன்களிலுள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் உதவியுடன் பலவீனமான நினைவாற்றலை நாம் மேம்படுத்தலாம்..

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் கூற்றின்படி, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை நாம் சேர்த்து கொள்வது, கற்றல் திறனையும், நினைவாற்றல் திறனையும் மேம்படுத்துகிறதாம்.. மூளையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதாகவும், மீன்களை கண்களுடன் சாப்பிட்டு வந்தால், மூளையின் செயல்பாடு மேம்பட்டு, நினைவாற்றல் அதிகரிப்பதுடன், உணர்வுகளும் சீராக இருக்கும் என்கிறார்கள்.

கண்கள் : மீன்களின் கண்களை சாப்பிட்டு வருபவர்களுக்கு, கண் பார்வை பிரச்சனைகள் இருப்பதில்லை.. கண்களில் தொந்தரவு இருப்பவர்களும், மீன் கண்களை சாப்பிட்டு வந்தால் பிரச்சனை நீங்கிவிடும்.. காரணம் இதிலுள்ள ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலங்கள் கண் பார்வை திறனை ஊக்குவிக்கின்றன.

எனவே, மீன்களை தன் தலைகளுடன், கண்களுடன் சேர்த்து சாப்பிடுவது, சர்க்கரை நோயை தடுக்கிறதாம்.. வைட்டமின் D உடலில் இன்சுலின் அளவை குறைக்கும்... அதோடு டைப்-1 சர்க்கரை நோயின் அபாயத்தையும் தடுப்பாக கூறுகிறார்கள்.

மீன்கள் கண்கள்: மீன்களின் கண்களில் வைட்டமின் D அதிகம் உள்ளதால், நிம்மதியான தூக்கத்தை தருவதாக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். அதிலும் சால்மன் மீனின் தலைகளை இன்னும் சிறந்ததாம். காரணம், இதில், மற்ற மீன்களை விட அதிகளவு வைட்டமின் D நிறைந்துள்ளதாம்.

அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக் ஒரு சமீபத்தில் ஆய்வு நடத்தியது.. அதில், மீன்களின் கண்கள் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதாகவும், மீன்களின் கண்களை உட்கொள்பவர்களுக்கு, செரிமானம், வாய், குரல்வளை, குடல் மற்றும் கணைய புற்றுநோயின் அபாயம் குறைவாக இருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, எப்போது மீன் வாங்கினாலும் மீனின் தலைகளை முக்கியமாக மீன்களின் கண்களையும் சாப்பிடுங்கள்.

அலர்ட்: ஆனால், மீன் கண்களை சாப்பிடுவதில் யாருக்காவது அலர்ஜி இருந்தால், அதை தவிர்த்து விடலாம். அதேபோல, சமைப்பதற்கு முன்பு மீன்களின் கண்களை சரியாக சுத்தம் செய்யாவிட்டாலும், தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நன்றாக சுத்தம் செய்து, நன்றாக வேகவைத்து சாப்பிட்டால் ஆரோக்கியம் கூடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+